பாப்லோ நெருதா: சர்ச்சைகளும் நிதானத்துடன் ஈடுபடுதலும்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

யமுனா ராஜேந்திரன்


சுகுமாரனின் குறிப்புகள் எனக்கு மறுபடியும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தேவையான சர்ச்சைகளில் ஈடுபடாமல் மெளனம் காப்பது ஒரு வகையில் மத்தியதரவர்க்க இலக்கியத் தந்திரம் என்றே நான் நினைக்கிறேன். மிக நிதானமாக எழுதப்பட்ட எனது குறிப்புகளுக்கு நிதானம் தவறிய வகையில் சுகுமாரன் பதில் தந்திருக்கிறார்.

சில இலக்கிய கனவான்கள,; ஓன்று சர்ச்சைகளில் ஈடுபடாமல் மெளனம் காப்பார்கள்; அல்லது சர்சசைகளில் நிதானம் தவறி விழுவார்கள் என்பதுதான் நிஜம் என்பதற்குச் சுகுமாரனின் பதிலே சான்று.

எனது குறிப்புகள் ஒரே ஒரு விசயத்தையே மையப்படுத்தியிருந்தன. மலையாளத்தில் நடந்திருக்கும் பல மொழியாக்க முயற்சிகளை பெயர் சொல்லிப் பதிந்திருக்கும் சுகுமாரன், தனது முயற்சிகள் தவிர, தமிழில் நடந்திருக்கும் பிற பங்களிப்புகளை ஏன் பதிய மறந்தார் என்பதுதான் எனது கேள்வி;. எனது குறிப்புகளுக்கான எதிர்வினையில் ஆவேசமாக அவர் பதிந்திருக்கும் தமிழ் மொழியாக்க முயற்சிகள், அவரது முந்தைய கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்யடிவை என்பதுதான் இப்போதும் எனது அழுத்தம்.

தர்க்கம்; மிகச் சாதாரணமானது: மலையாள முயற்சிகள் பதியப்பட்டிருப்பதால், சமநிலை கருதியேனும் சுகுமாரன் தான் இயங்கும் மொழியிலான பங்களிப்புகளைப் பதிந்திருக்க வேண்டும்.

மற்றபடி எனது குறிப்புகளுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. தமிழக இலக்கிய அல்லது அரசியல் உலகில் எந்தவித அதிகாரம் பெறும் நோக்கமும் எனக்குக் கிடையாது. பதினைந்து ஆண்டுகளாக தமிழகத்துக்கு வெளியில் வாழ்ந்து வரும் நான், தமிழில் எனது அனுபவங்களைப் பகிர்ந்;து கொள்ளத் தெரிந்திருக்கிற ஒரே ஒரு காரணத்திற்காகவே தமிழில் எழுதுகிறேன்.

இந்தக் குறிப்புகளைக் கூட சக வாசக நண்பர்களுக்கு எழுதுகிறேனேயல்லாது சுகுமாரனுக்கு அல்ல. எனது ஆதங்கம் என எனது முதல் குறிப்பில் பதிந்திருக்கிற சொல்லின் அர்த்தம் தெரிந்த பி;ன்தான், சுகுமாரன் இப்படி ஆத்திரத்துடன் எழுதியிருக்கிறாரா என் நினைக்க எனக்கு மறுபடியும் ஆச்சர்யமே கூடுகிறது.

அன்புடன்

யமுனா ராஜேந்திரன்.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்