This entry is in the series 20040827_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


தரிசனத்திற்காகத்
தவ ஏக்கத்தில்
கர்வப்படுகிறது…

கிட்டும் நாள்வரைக்கும்
காந்தவலைக்குள்
கர்ணம் அடிக்கிறது

கவர்ச்சி கவுச்சி
குகை விலங்கைக்
குதூகலப்படுத்துகிறது

உள்ளம் திறந்து
காட்டும் உண்மையிலும்
ஒரு வேடம்
உறைந்து கிடக்கிறது

எதார்த்தத்தை
நம்பவே முடியவில்லை

சபலத்தையும்
பலவீனத்தையும்
மிதித்துக்கொண்டுதான்
எல்லா விளம்பரங்களும்

தரிசனத்தில்
அதிர்ச்சியானபோது
கமுக்கமாய்
வாரிச்சுருட்டிக்கொண்டது
வாலையும்
வார்த்தைகளையும்

ilango@stamford.com.sg

20040827_Issue

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்