கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

கே. ராமப்ரசாத்.


ஒரு முறை 100% கல்யாணமான நடுத்தர குடும்பத்தினர் போல வாழ்வது எப்படி என ஒரு மின்னஞ்சல் வந்தது. அதன்படி

1. காலையில் லேட்டாக எழுவது.

2. குளிக்காமல் வீட்டிலேயே ஒரு உலா.

3. சோபாவிலும் நாற்காலியிலும் சும்மா அமர்வது.

4. காய்கறி நறுக்கும் மனைவிடம் அரட்டை.

5. சில வீட்டு வேலைகளுக்கு யோசனை உதவி சொல்லி மனைவிடம் வசவு வாங்குவது.

6. உணவு உண்டபின் ஒரு குட்டிதூக்கம்.

7. மாலை நொறுக்குத் தீனி சாப்பிட்டபடியே சோம்பலாக அமர்ந்திருப்பது.

8.கடைதெருவுக்கு சும்மா ஒரு உலா.

9.இரவு உணவு குடும்பத்தினருடன் அரட்டையடித்தபடி.

10. உடனே இரவு தூக்கம்

இந்த வரிசையான தின வாழ்வு எல்லோருக்கும் பொருந்தும் என எண்ணுகிறேன். மேலும், மனிதர்களின் தினசரி அலுவலக வாழ்வையும் இவ்விதம் பட்டியலிட முடியும். இவ்விதம் வாழ்வது வாழ்வில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கசப்பான அனுபவமே.

நாம் எதை நினைக்கிறோமோ அதைத் தான் நமது வாழ்வும் பிரதிபலிக்கிறது. நாம் எப்படி உணர்கிறோம் நாம் என்ன செய்கிறோம் உண்மையில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதையெல்லாம் வாழ்க்கை பிரலிபதித்துக் காட்டிவிடுகிறது. நம்முடைய சிந்தனை, அனுபவங்கள், கடந்த காலச் செயல்கள் ஆகியவற்றின் கூட்டாக மட்டும் நாம் உருப்பெறுவது கிடையாது. அப்படி உருவானதின் விளைவாக ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் தான் நம் உருவும் வாழ்வும் அமைகிறது. இது ஒரு காரண காரியச் சங்கிலித் தொடர் என்பேன்.

வாழ்வில் முன்னேற என எழுதப்பட்ட அனைத்து நூல்களிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் ஒரு குறிப்பு ‘உன் முயற்சியில் நீ அடுத்த அடியை எடுத்து வைக்கும் முன், அந்த அடியை மனக்களத்தில் எடுத்து வைத்து ஒத்திகை பார்த்துக்கொள் ‘ என்பது தான்.

ஒரு சாதாரண வாழ்வில் முன்னேற எப்படி முயற்சி செய்வது, மனதில் ஒத்திகை பார்ப்பது ?

வாழ்வில் முன்னேற நினைப்பது என்பது திட்டமிட்டு விரும்பிய நிலைக்கும் தற்போது உள்ள நிலைக்கும் உள்ள இடைவெளியாகும். அந்த வகையில் வாழ்வில் முன்னேற என முயல்பவர்கள் இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள்.

1. இருக்கிற சூழ்நிலையை சரி செய்து கொள்ளுவது.

2. சரி செய்து கொண்ட பிறகு, இருப்பதை மேலும் சிறப்புடையதாக ஆக்கிக் கொள்வது.

இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் வேறு பெயர் கூட உண்டு. அப்பெயர் தான் ‘உழைப்பு ‘.

கடினமாக உழைப்பதற்குரிய முயற்சி நம்மால் எப்போது அதிவேகப்படுத்தப்படுகிறது ? இதற்கான ஒரு வார்த்தை பதில் – ஆசைப்படும்போது.

ஆசை என்பது ஒரு செயலை நாம் எந்த அளவு முக்கியமாகக் கருதுகிறோம் என்பதைப் பொறுத்தது.

செம்மையாகச் செய்வதே யோகம் என்கிறது பகவத் கீதை. மனித வாழ்வில் முன்னேற்றம் செயல்களால் தான். தத்துவங்களால் அல்ல. மனிதர்களின் செயல்கள் அவர்களின் சிந்தனைக்கு விளக்கங்கள்.

கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் யாரோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமானது. கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிப்பது, பிரச்சினைகளுக்கு ஒரு பரிகாரம் கண்டுபிடிப்பது ஆகியவற்றைவிட திருப்தி அளிக்கக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

மேலும், இவ்விதம் கண்டுபிடித்துக் காரியத்தைச் செய்து முடிக்கிறவர்கள் தேவைதான். ஆனால், அதைவிட நாம் எதைச் செய்ய வேண்டும், அதைச் செய்வதற்கு வழி என்ன என்று சொல்லுகிறவர்கள் இன்னும் அதிகமாகத் தேவை.

ராம்.கே

மின்னஞ்சல் முகவரி: kramaprasad@gmail.com

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்