சூட்டுக் கோட்டு சூடு கோடு

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

சந்திரசேகர்


பல விஷயங்கள்ல இன்னும் வெள்ளக்காரன் நம்ம மனச விட்டுப்போகல! தமிழ்நாட்ல பேசற தமிழ்ல பாதி ஆங்கிலக் கலக்கல். சைக்கிள் ஓட்றான், பஸ்ஸப் பிடி, பன்சர் ஆயிருச்சி, சிக்னல் ; போட்டான், லைட் எறியுது – இதெல்லாம் தமிழ்னா, அப்ப கட்டாயம் நான் எழுதறது, செந்தமிழ்! என்ன சொல்றீங்க ?

முதல்ல பள்ளிகூடத்துலேர்ந்து ஆ….ரம்பிப்போம்!ஷு, சாக்ஸ் போட்டு, யூனிஃபார்ம் போட்டா, நல்ல ஸ்கூல், இல்லேன்னா இல்ல! வீட்டுப் பட்ஜெட்ல துண்டு விழுதோ இல்லையோ, பசங்க யூனிஃபார்ம் தைக்க மட்டும் – துண்டு என்ன, வேட்டியே விழாது! கடன் வாங்கியாவது,பையனுக்கு வெ:ளையும் சொள்ளையும் மாட்டி அனுப்ப அம்மாக்கள் ஆசப்படறாங்க! கான்வென்ட்ல படிக்கிறான்னு சொன்ன கெளரவம். இல்லன்னா இல்ல.

அடுத்து, கொஞ்சம் பெரிய இடங்கள்ல பார்ப்போம்!ஒரு பொறுப்பான வேலைல இருக்கற ஆசாமி, சூட், கோட் போட்டு, ஷு, சாக்ஸ் சகிதம் போனாதான் இங்க மதிப்பு!இன்டர்வ்யூன்னாலும் சரி, இல்ல பல சர்வதேச நிறுவனங்கள்ல வேல செஞ்சாலும் சரி, கோட், டை – வேணும். பல ரவுசுங்களை இங்க உதாரணம் சொல்றேன் :-

இப்பதான் சாஃப்ட்வேர் கம்பனிங்களுக்கு சுக்ர தெச அடிக்குதே! பெரிய ஏக்கர் கணக்கான இடத்தை வாங்க ஒரு வெளிநாட்டான், நம்முர் லோக்கல் பார்ட்டியோட ஒப்பந்தம் பண்ணி, இடத்தைப் பார்க்க வர்றாரு. அது கடக்கு திருவள்ளூர் அவுட்டர்ல சுத்தெள பத்துல மரமேயில்லாத ஏரியா! நம்மாளு சூப்பரா, கோட், டைல்லாம் மாட்டிகிட்டு, ஏ.சி. கார்ல பார்ட்டிய அழச்சுகிட்டு போறாரு. ப்ரோக்கர் வந்து, எடத்தை பார்த்து, மேட்டர் முடிய எல்லாம் வெயில்ல நிக்க வேண்டியதா போச்சு! பார்ட்டியோ, நீட்டா, அரை ட்ரவுசர், டா-சர்ட் போட்டு வந்துட்டான்! ஜம்னு வெயில்ல காத்தாட, ஸ்… ஆட நடக்குறான். அவனுக்கு தெரிஞ்சிருக்கு. இங்க ; இருக்கற தட்ப வெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி, ட்ரவுசர்ல வந்துட்டான்! நம்மாளுக்கோ, வேர்த்து கொட்டிருச்சு! கையோட தையக் கழட்டமுடியல; கோட்டு கனமா இருக்கு! சாஃப்ட் வேர் கம்பெனி இடம் வாங்கிச்சோ இல்லையோ, நம்மாளுக்கு அண்டர்வேர் வரைக்கும் நனஞ்சிருச்சி! நடந்து நடந்து, வெயில் ஏற, ஏற, அய்யாக்கு, கல்ல கட்டிகிட்டு காட்ல நடந்த மாதிரி ஆயிருச்சி! எரியிற எண்ணையில அக்மார்க் நெய்ய ஊத்துனமாதிரி, ஃபாரின் பார்ட்டி, அக்கரையா விசாரிக்கிறான்! மிஸ்டர் பதி (வெங்கடாசலபதியோட சுருக்கம்!) ஆர் யூ ஓ.கே ? நாட் ஃபீலிங் வெல் ? ( என்ன உடம்புக்கு ? ஏதும் சரியில்லையா ?) பதி வெயில்ல பாதி ஆயிட்டான்யா!

அதவிட கொடுமை,இந்த கான்பெரன்ஸ் கும்பல்கள். ஆளாளுக்கு டை கட்டிகிட்டு, குறுக்க நெடுக்க நடப்பானுங்க! மீட்டிங் ஆரம்பிச்சதும், எல்லாத்தையும் இழுத்து பிடிச்சுகிட்டு, உட்காருவானுங்க! ஏ.ஸி. இருந்தாலும், உள்ள ஊத்தும்! நம்ம நண்பர் ஒருத்தர், செமினார்ல பவர் பாயிண்ட்ல ஒரு சொற்பொழிவு செய்யவேண்டியது. அவருக்கு கனத்த சரீரம்! எங்கோ, ஒரு மூலைல அவருக்கு உட்கார இடம் கிடச்சுது. கொஞ்சம் வேர்க்கற உடம்பு. அங்க காத்து சரியா வீசல. இவரு முறை வர்ற போது, அய்யா எழுந்து போறாரு, பின்னாடி, உட்கார்ற இடத்துல, தண்ணி சேர்ந்து, ஒரே தொப்பல்! ரெண்டு ரவுண்டு! இவரு மேடக்கு போக, பார்க்கறவன்லாம், குசு,குசுன்னு சிரிச்சுக்கிறாங்க! கம்ப்யூட்டர் திடார்னு வேல செய்யல. சரி, உடம்போட வெச்ச ஃபைல்லேர்ந்து தயாரா வெச்சிருந்த பேப்பரை வெளிய எடுத்து ஸ்லைடு காட்டலாம்னு பார்த்தா, எல்லாத்துலயும், பசக், பசக்னு, தண்ணி சீல்! அவர் கதி அதோகதியானத சொல்லணுமா என்ன ?

மேல்மட்டம், இடம் பொருள் ஏவல் அறிந்து உடை அணியமாட்டாங்கங்கிறது, இந்த மட்டுக்கும் தெரிஞ்சாச்சு.கொஞ்சம், சரிமட்ட ஆளுகிட்ட வருவோம். இவனுங்க டார்ச்சர் தாங்கமுடியாது!முக்கியமா, இந்த சேல்ஸ் பாய்ஸ்!

ஊதுபத்தி விக்க, கத்தி விக்க, (கூவி இல்லேங்க, நறுக்குற கத்தி), க்ரெடிட் கார்ட் விக்க, விக்கினா வாங்கிக் குடிக்கிற தண்ணி விக்க, இப்படி எல்லாத்துக்கும் டை கட்டி (டை சுறுங்கிப் போய் இருக்கும்; சட்டைக்கும், டைக்கும் ஏழாம் பொருத்தம் இருக்கும்; டை கட்டின அம்பி கீழ ஷூவுக்கு பாலிஷ் காட்டி, பல மாமாங்கம் ஆயிருக்கும்! ) இப்படி எல்லாத்துக்கும், சொல்லாமலே நாகரிகம்கிற பேர்ல டை, ஷூ!

வடக்கத்திக்காரன் ஷெர்வானி, காலர் இல்லாத கோட்டுன்னு போட்டுக்கறான். அங்க கொஞ்சம் குளிர்; அதனால ஓகே. நம்முர்ல ? அரவேக்காடு பசங்கள கிளப்பிவிடுற மாதிரி, நம்ம சினிமா ?ீரோக்களும், கண்ல அறைற கலர்ல சட்டைய மாட்டிகிட்டு,அதுக்கு சம்பந்தமேயில்லாத கலர்ல, கோட், வெள்ளை ஷூ, ஆரஞ்சு டைன்னு மாட்டிகிட்டு, ச ?ாரா பாலைவனத்துல டூயட் பாடுற மாதிரி சீன் நடிச்சுகிட்டு இருக்காங்க! தமிழ்நாட்டு வெயிலுக்கு நல்ல துவச்சு இஸ்திரி போட்ட கதர் சட்டை, பாண்ட்தான் சரி!

அந்த காலத்துல வெள்ளக்காரன் கம்பெனில சேர்ந்துட்டா, பண புழக்கம் குறையாது, சர்,பகதுர்னு பட்டங்களும் குறையாது! மத்தவன் நம்மள ‘துரை ‘ மாதிரி பார்த்தாதான், நமக்கு மரியாதைன்னு கொஞ்சம் ‘வெள்ளத் தோல் ‘ மோகத்துல தப்பு பண்ணிட்டோம்! இப்ப என்னய்ய வந்துச்சு ? கொஞ்சம் இருக்குற இடம் என்னன்னு தெரிஞ்சு உடை அணியக்குடாதா ?

அதுவும் இங்லீஷ் பேசுறேன்னு கொலை பண்ற புண்ணியவான்களை, இங்க்லீஷ்ன்னா என்னன்னே தெரியாத சைனா ப்ரதேசத்துக்கு நாடு கடத்தணும்! நுனி நாக்குல பேசுனாதான் மதிப்பாங்கன்னு, நுனிப்புல் மேயிர ஆடு மாதிரி திரியறானுங்க!அதுவும் வெள்ளக்காரன் காலத்து மBBu! துரைங்க கிட்ட இங்லீஷ் பேச தெரிஞ்சா, மத்த மக்கள் பேசுறத மொழிபெயர்த்து சொல்ல ஆங்கில அறிவு உதவுச்சு! அதவெச்சு, துரை மனசுல இடமும்,பதவியும் பெற உதவுச்சு! இப்ப, எதுக்கு, எங்க பேசுறோம்னு தெரியாமலே, இங்க்லீஷ் பேசுறாங்க!

எங்க ஊர்ல ஒரு லண்டன்ல படிச்ச ப்ரொபசர், ஏதோ கஷ்டம்னு வந்து,லோக்கல் கல்லூரில தலைமை பேராசிரியரா சேர்ந்தாரு. அவரு, அமாவாசை ஆனா, மடியா, கஷ்டப்பட்டு, வெள்ள வேஷ்டி கட்டிகிட்டு, சைக்கிள்ல அரக்க பறக்க பிள்ளையார் கோயில் போயி, தர்ப்பணம் பண்ணிட்டு போவாரு! வழில ஒரு ப்ளாட்பாரக் காய்கறி கடை. அவசரமா,சைக்கிள்ல இருந்த படியே, அந்த கடைக்காரம்மாகிட்டே, ‘ை ?, பிச்சம்மா, ப்ளீஸ் கிவ் மீ க்ரீன் பனானா. ‘ என்று கேப்பாரு. வேட்டி விலகியிருக்கும்! அவருக்கு வேஷ்டி கட்ட வேண்டிய நிபந்தம், அமாவாசை அன்னிக்கி மட்டுந்தான்! கடைக்காரம்மா, தலைல அடிச்சுகிட்டு, ‘ஏஞ்சாமி கொல்ற! கால நேரத்துல! வாழைக்காய் சரி, தர்றேன்; முதல்ல வேட்டிய சரி செய் சாமீ! நீதான் அமாவாசை அமாவாசை காய் வாங்க வர்றயே, தெரியாதா, அதுக்கு எதுக்கு இங்க்லீஷு ? ‘ ந்னு போடா ஒரு போடு!

போன் கம்பெனி, டிக்கெட் வாங்குற மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், க்ரெடிட் கார்ட் கால் செண்டர், இப்படி எங்கேயும் இங்க்லீஷு! தமிழ் பேசுங்கய்யா தமிழ்! சரி, தமிழ்நாட்டத் தாண்டினா, நெலமை வேற! இங்க்லீஷ 21; கூட எடுபடாது! ?ிந்திதான்! தெரியல, நாம செத்தோம்! பொழப்பு தேடி, போய், பொழச்சு வந்த நண்பருங்க பல பேரு சொல்றது என்ன ? ‘ நம்மாளு எங்க படிச்சா உருபட்டுற்வானோங்கற பயத்துலதான்,திராவிடம், தமிழ்னு பேசி, பசப்பு காட்டி, வேற எங்கயும் பொழைக்க முடியாம செஞ்சுட்டாங்க; அரசியல் வாதிங்க ‘ ந்னு சொல்றாங்க! வேணாம், இது வேற மேட்டர்! நமக்கு சரிப்படாது. பின்னர் பார்ப்போம்!

(திரை)

chandra_jgp@yahoo.co.uk

Series Navigation

சந்திரசேகர்

சந்திரசேகர்