எமக்குத் தொழில் டுபாக்கூர்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

மாது


====================================

பெரிய ஐந்து ஆலோசனை நிறுவனங்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.

அந்த ஐந்தில் இப்போது எத்தனை பாக்கி இருக்கிறது என்று

தெரியவில்லை. நான் எழுதப் போவது கிட்டத்தட்ட எல்லா ஆலோசனை

நிறுவனங்களுக்கும் (consulting firms) பொறுந்தும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களை வாழ வைப்பதற்கு என்றே

ஏதாவது ஒரு தொழில் நுட்ப வார்த்தை/சொற்றொடர் (தொழில் நுட்ப வார்த்தை

வரும் முன்னே, தொழில் நுட்பம் வரும் பின்னே) வந்துவிடும் (அல்லது அவர்களே

கண்டுபிடித்து விடுவார்கள்). அந்த வார்த்தைகளை/சொற்றொடர்களை பலமாக பிடித்துக்

கொண்டு ஜிங்கி அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவர்கள் அடிக்கும் ஜிங்கியை சற்று தள்ளி நின்று ரசிப்போம்:

1. உங்கள் தொழில் நுட்பத்தை உங்கள் தொழிலுடன் அணி சேர்ப்பதற்கு

ஒரு உத்தி தேவை.

(You need a strategy to align your technology with your business)

2. உங்கள் நிறுவனத்திற்க்கு ஒரு தெளிந்த ஆளுமை நெறி தேவை.

(Your company needs a clear governance model)

3. உங்கள் நிறுவனத்திற்க்கு ஒரு தொழில் நுட்ப வழிமுறை தேவை.

(Your company needs a technology road map)

4. உங்களது பழைய மென்பொருள் உடமைகளை வெப்சர்வீஸஸ் கொண்டு

வெளிக்கொணருங்கள்.

(Expose your legacy software assets using Webservices)

5. உங்கள் நிறுவனத்தின் எல்லா தொழில் செயல்முறைகளையும்

ஆவணப்படுத்துங்கள்.

(Document your companies all Business Processes)

6. ஒரு திட்ட மேலாண்மை அலுவலகத்தை நிறுவனம் செய்யுங்கள்.

(Establish a Project Management Office (PMO) )

7. உங்களது மென்பொருள் உடமைகளை மையப்படுத்துங்கள்.

(Centralize all your software assets)

8. உங்களது மென்பொருள் உடமைகளை பங்கீடு செய்யுங்கள்.

(Distribute all your software assets)

9. அடிப்படை தொழில் இயக்குவிகளை கண்டுபிடியிங்கள்.

(Identify your core Business Drivers)

10.நிறுவன அளவிலான ஸர்வீஸ் ஓரியண்டட் ஆர்க்கிடெக்சர் தரத்தை

உருவாக்குங்கள்.

(Develop an enterprisewide Service Oriented Architecture standard)

இதையெல்லாம் பார்த்துவிட்டு, அனைத்து ஆலோசனை நிறுவனங்களும் –

எமக்குத் தொழில் டுபாக்கூர் – என்னும் சொற்றொடரை ஏன் தங்கள்

விளம்பரச் சொற்றொடராக (advertisement slogan) வைத்துக் கொள்ளக்

கூடாது என்று தோன்றுகிறது ?

இதை எழுதிவிட்டு என் ஜென் குருவிடம் போய் ‘குருவே ஏன் மக்கள் இப்படி

பொய்ம்மையில் உழன்று கொண்டிருக்கிறார்கள் ? ‘ என்று கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில் – ‘பொய்க்குள் பொய் ‘.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ** * * * * *

இந்த டுபாக்கூர்களை சமாளிப்பதற்கு எனக்கு தெரிந்த மூன்று வழிகளை உங்களுடன்

பகிர்ந்து கொள்கிறேன்:

1. டுபாக்கூரும் டுபாக்கூர் சார்ந்த மீட்டிங்கிலும் உட்கார நேர்ந்தால், உங்கள் கை தானாக

படம் வரையவோ, ஆடு புலி ஆட்டம் ஆடவோ ஆரம்பித்து விடும். கையைக் சிறிது

கட்டுப்படுத்துங்கள் – கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விடுவீர்கள். அதற்க்கு

பதிலாக முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக் கொண்டு உங்கள் நோட்டிலோ, PDAவிலோ,

லாப் டாப்பிலோ (lap top), மீட்டிங்கில் உதிர்க்கப்படும் பஸ் சொற்களை (Buzz Words)

நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உஙகளுக்கு பிடித்த வார்தைகளை சுழித்து வைத்துக்

கொள்ளுங்கள்.

உங்கள் பாஸ் உங்களை கடும் உழைப்பாளி, போய்க் கொண்டு வருபவன் (go getter)

என்று நினைத்துக் கொள்வார். ‘திரு. xxxx, நீங்கள் ஏன் அடுத்த வாரம் நமது கம்பென

strategy பற்றி ஒரு விவாதத்தை நடத்தக் கூடாது, நான் என்னுடைய உதவியாரை

ஷெரட்டனில் ஒரு ரூம் புக் செய்ய சொல்கிறேன் ‘ என்று சொல்வார். (மாறாக ஆடு புலி

ஆட்டம் விளையாடும் போது மாட்டிக் கொண்டால் – சீட்டு கிழிந்து விடும்).

2. (நான் முதலில் கூறியபடி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்).

உங்கள் பாஸ், உங்கள் கம்பெனியின் சிந்தனைத் தலைவர்களுடன் (thought leaders)

உங்களை அழைத்துக் கொண்டு ஷெரட்டன் ஹொட்டல் செல்வார். (சீரான உடை

அணிந்து செல்லுங்கள். டை கட்ட தெரியவில்லை என்றால், பக்கத்து அபார்ட்மென்ட்

ராஜ் கோஸ்லாவிடம் முதல் நாள் இரவே சென்று, டையில் முடிச்சு போட்டு வைத்துக்

கொள்ளுங்கள்). மீட்டிங் ரூமில் நிறைய ஆங்கில சிற்றுண்டி உணவு வகைகள்

வைத்திருப்பார்கள். மிக்க பசியாக இருந்தாலும், பக்கி மாதிரி பறக்காதீர்கள். ஒரு

சிறிய தட்டில் ஒரிரண்டு பழத் துண்டுகளையும், கோப்பையில் காப்பியையும் எடுத்துக்

கொண்டு உங்கள் இருக்கையில் போய் உட்காருங்கள்.

உங்கள் பாஸ் மீட்டிங்கை ஆரம்பித்து வைத்து இன்னும் சிறிது பஸ் வார்தைகளை

எடுத்து விடுவார். ஆழ்ந்து கவனிப்பது போல் நடியுங்கள். பிறகு உங்களை பேச அழைப்பார்.

உங்களுக்கு தெரிங்த ஏதாவது பற்றி பேச ஆரம்பியுங்கள். மெதுவாக உங்கள் நோட்

புக்கை திருப்பி, நீங்கள் சுழித்து வைத்திருந்த பஸ் வார்தையைக் கொண்டு ஒரு

வாக்கியத்தை அமைத்து எடுத்து விடுங்கள். (உ.ம்: யாராவது ROIயை பற்றி யோசித்துப்

பார்த்தீர்களா ?). மீதியை அவர்கள் கவனித்து கொள்வார்கள். நீங்கள் கண்ணைத் திறந்து

வைத்துக் கொண்டு உங்கள் சொந்த கவலைகளை (தேவர் மகன் ரெக்கார்ட் பண்ண

VCRla கரெக்டா டைமர் செட் பண்ணேனா ? காஸ் அடுப்பை ஒழுங்காக மூடினேனா ?

அடுத்து RKKக்கு என்ன எழுதுவது ?) பற்றி நினைத்துக் கொண்டிருங்கள்.

3. வீிட்டிற்கு வந்து, பிராயச்சித்தமாக, என் ஜென் குரு சொன்ன மந்திரத்தை (பொய்க்குள்

பொய்) நூத்தியெட்டு முறை ஜபியிங்கள்.

————————————————–

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மாது

மாது