தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue


கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுக்க உலகத்திலேயே மிகப்பெரிய பரிசோதனை நிலையத்தை கட்ட ஏப்ரல் மாதம் 2003ஆம் தேதியிலிருந்து தூத்துக்குடியில் ஜப்பானின் சாகா பல்கலைக்கழகமும் இந்திய அரசாங்கமும் இணைந்து துவக்கியிருக்கின்றன.

சுத்தமான மின்சார சக்தியை உருவாக்கவும் அதனை பொருளாதார முறையில் சிக்கனமாக உருவாக்கவும் இந்த முயற்சி, கடல் தண்ணீர் மிக ஆழத்தில் குளிராகவும், தரை மட்டத்தில் வெப்பமாகவும் இருக்கும் வித்தியாசத்தை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பரிசோதனை சுமார் 1000 கிலோவாட் மின்சார உற்பத்தி செய்யுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் National Institute of Ocean Technology உருவாக்குகிறது. இதற்கு சாகா பல்கலைக்கழகம் உதவுகிறது.

27 கோடிரூபாய் செலவில் (சுமார் 700 மில்லியன் யென் ) இந்த மின்சார நிலையம் கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட மின்சார நிலையங்களில் இதுவே உலகத்தில் மிகப்பெரியதாக இருக்கும். இதுவரை சுமார் 50 கிலோவாட் அல்லது 100 கிலோவாட் பரிசோதனை நிலையங்களே கட்டப்பட்டிருக்கின்றன.

வியாபார உபயோகத்தை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த 1000 கிலோவாட் மின்நிலையம் சுமார் 2000 மக்களுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இந்த நிலையம் 70 மீட்டர் அகலம் 60 மீட்டர் நீளம் கொண்ட மிதப்பான் மீது கட்டப்படும். இது தூத்துக்குடிக்கு கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்படும்.

ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் குளிர்ந்த கடல்தண்ணீரை மேலே கொண்டுவந்து சூடான தரை மட்ட கடல்தண்ணீருடன் ஒரு ரெஃப்ரிஜிரேட்டர் மாதிரியான இயந்திரத்துக்குள் பொருத்தி இந்த மின்சாரம் உருவாக்கப்படும். ஒரு மாதம் இந்த பரிசோதனை எவ்வளவு மின்சாரத்தை இது உருவாக்குகிறது என்று செய்யப்படும்.

இதன் மூலம் மின்சாரம் உருவாக்க முடியும் என்பது நிரூபணமானால், இரண்டாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதில் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக ஆக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்த பரிசோதனைகள் வெற்றிகரமாக ஆனால், இப்படிப்பட்ட 1000 மின்சார நிலையங்களை 20000 கிலோவாட்டிலிருந்து 50000 கிலோவாட் வரை சக்தியுடன் கட்டப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த மாதிரி மின்சார நிலையம் ஒரு கிலோவாட் சுமார் 8 ரூபாய் செலவில் உற்பத்தி செய்யும் என்று இந்திய அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள். இதுவே 100,000 கிலோவாட் மின்சார நிலையமாக உருவாக்கினால், இதனால், ஒரு கிலோவாட் சுமார் 3 ரூபாய் செலவில் உற்பத்தி செய்ய முடியும். இது பெட்ரோல் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட விலை குறைவு.

சாகா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த யாசுயுகி இகேகாமி என்ற உதவி பேராசிரியர் இந்த முயற்சியில் கலந்து கொள்கிறார். இந்த பரிசோதனையில் தெற்கு பசிபிக் தீவுகளான பலாவ், குக் தீவுகளும், ஏன் சவூதி அரேபியாவின் ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் இந்த பரிசோதனையில் வெற்றி பெறுவது என்பது இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக வியாபாரப்படுத்த உதவும் ‘ என்று இகேகாமி கூறுகிறார்.

இந்த தொழில்நுட்பம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடலில் செய்வது சிறப்பானது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதிகளில் தரை மட்டத்தில் இருக்கும் கடல்தண்ணீரின் வெப்பம் மற்ற இடங்களில் உள்ள கடல்தண்ணீர் வெப்பத்தை விட அதிகம்.

மிக ஆழத்தில் இருக்கும் கடல் தண்ணீர் சுத்தமானதாகவும், மிகுந்த உணவுச்சத்துடனும் இருக்கிறது. இதன் மூலம் குடி தண்ணீர் தயாரிக்கவும், மீன் பண்ணைகள் அமைக்கவும் முடியும்.

ஜப்பான் டைம்ஸ் ஏப்ரல் 12, 2003

Series Navigation

செய்தி

செய்தி