1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue


மனிதர்கள் தோன்றியதன் மூலம் பற்றி அறிய ஆய்வு செய்யும் அறிவியலறிஞர்கள் மிக முக்கியமானது எனக் கருதும் ஒரு கண்டுபிடிப்பு எத்தியோப்பியாவில் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு முதிர்ந்தவர்களது தலையெலும்புகளும் ஒரு குழந்தையின் தலையெலும்புகலும் சுமார் 160000 வருடங்களுக்கு முந்தையதாக அறியப்பட்டது, ஹெர்ட்டோ என்னும் ஒரு கிராமத்தின் வயல்களிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இவையே நவீன மனிதர்களின் மிக முந்தைய எலும்புகளாக அறியப்பட்டுள்ளது.

கற்கால ஆயுதங்களும், ஹிப்போபோடமஸின் வெட்டப்பட்ட எலும்புத்துண்டங்களும் முதன்முதலில் கிடைத்தன. மாட்டு எலும்புகள் பின்னர் கிடைத்தது, முந்தைய மனிதர்கள் விலங்குக்கறி சாப்பிடும் மனிதர்களாக இருந்திருக்கின்றனர் என்பதையும் குறிப்பிடுகிறது.

ஏறத்தாழ முழுமையான மனித தலையெலும்புகள் இந்த பழங்கால படுகைகளில் இருந்து, மழையாலும், பசுக்கூட்டங்களின் காலடித்தடங்களாலும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

சிறு குழந்தையின் (வயது பெரும்பாலும் 6 அல்லது 7) தலையெலும்புகள் சுமார் 200 துண்டங்களாக உடைந்திருக்கின்றன. அவை மிக அக்கறையுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

கபால எலும்புகளில் அங்கங்கு சதை கவனமாக பிய்க்கப்பட்டிருப்பது தெரிகிறது. இது ஒருவகை இறுதிச்சடங்கு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். தலையெலும்புகள் கவனமாக பாலீஷ் செய்யப்பட்டுருப்பதும் தெரிகிறது. எனவே இது ‘மனித சதையை உண்ணும் வழக்கத்தை ‘ காட்டவில்லை. மாறாக, சடங்கு சம்பந்தப்பட்டதாக தோன்றுகிறது.

நியூ கினியாவில் இப்படிப்பட்ட பழக்கம் இன்னும் இருப்பது அப்படிப்பட்ட ஒரு கருத்தை வலுப்படுத்துகிறது. நவீன நியூகினியா பகுதிகளில் மூதாதையரின் தலையெலும்புகளை இவ்வாறு பாதுகாத்து வணங்குவது பழக்கமாக இருக்கிறது.

ஆகவே, கருத்துருவ சிந்தனை கொண்ட மனிதர்களின் மிக முந்தைய எடுத்துக்காட்டாக, இந்த ஹெர்ட்டோ கபாலங்கள் இருப்பது அறியப்படுகிறது.

இந்த எதியோப்பிய கண்டுபிடிப்புகள் நேச்சர் இதழில் வெளிவந்துள்ளன

Series Navigation

செய்தி

செய்தி