This entry is in the series 20110410_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்



**************************************

ஜடாமுடியாயோ.,
குறுந்தாடியாயோ
இருப்பது குறித்து
உலகுக்கு கவலையில்லை..

க்ரீடமாகவோ ஹாரமாகவோ
அழகுபடுத்திக் கொள்வதும்.,
அசிங்கப்படுத்திக் கொள்வதும்,
அதைப் பெருமையாய் எண்ணுவதும்
ஒற்றைக் கண்ணோட்டமே..

குற்றச்சாட்டோ.,
அதிருப்தியோ.,
குலைத்துவிடப் போவதில்லை..
வெற்று அலங்காரங்களை..

கனத்த சிரசை
சுமந்து அலைந்து
கழட்ட முடியாத
கனவுகளில் புதைந்து
கழுவிலோ.. சிலுவையிலோ.

எதையோ கொடுத்து
எதையோ பெறுகின்றீர்கள்..
முடிவான காலத்துக்குள்
விட்டுச் செல்லுங்கள்
பயனான ஒன்றை..

—————————-

Series Navigation