ஊமையர்களின் கதையாடல்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

சு.மு.அகமது.


ஒரு கவிதையின்

பகிர்ந்தளிப்பைப் போலும்

அவர்களது கதையாடல்

செவிசாய்த்து

உன்னிப்பாய் கிரகிக்கும் பாவனை

தேர்ந்த சொல்லாடலின் சுவராஸ்யத்தை

உட் செலுத்தும் புத்துயிர்ப்பி

கடநது சென்ற பள்ளிக்க்கூடம்

பேருந்துப்பார்வையில் புள்ளியான பின்பும்

கண்களில் விரிந்திருந்தது

அதில் கழித்த காலம்

நிரம்பி வழிந்த சம்பாஷணையில்

நாவின் தீயொலியற்ற

விரல் மொழியால்

ஊமையனாய் நானும்

கதைப்பவர்களாய் அவர்களும்….

பேருந்து இரைச்சலோடு
தனது இலக்கு நோக்கி…

என்னை செவிடாக்கியபடி

Series Navigation

சு.மு.அகமது

சு.மு.அகமது