ஒரு கிண்ண‌த்தை ஏந்துகிறேன்…(1)

This entry is part [part not set] of 25 in the series 20091002_Issue

ருத்ரா


ஜான் கீட்ஸ்

இந்தப்பெயரை ஒலிக்கும்
உதடுகளே
கவிதைகள் ஆகிவிடும்.
இருபத்தாறு வயதுக்குள்ளேயே(1795..1825)
க‌விதையின்
காட்டாறுக‌ளையெல்லாம்
த‌ட‌ம்புர‌ட்டிக்கொண்டு வ‌ந்து
அழ‌கு காதல் உண‌ர்ச்சி எனும்
தேனாறுக‌ளையெல்லாம்
குடித்து தீர்த்துவிட்டு
காலிக்கிண்ண‌த்தை
அதாவ‌து இந்த‌ உல‌க‌த்தை
வீசியெறிந்து விட்டுப்
போய்விட்டான்.
அந்த‌க் கிண்ண‌த்தை மொய்த்த‌
எறும்புக்கூட்ட‌ங்க‌ளே
இன்று வ‌ரை
க‌விஞ‌ர்க‌ள் என்று
ஊர்ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.
இதோ
அவன் கவிதை.

ஒரு கிண்ண‌த்தை ஏந்துகிறேன்…(1)
======================================ருத்ரா
(ODE ON GRECIAN URN ….BY JOHN KEATS)

பூங்கவிஞன் கீட்ஸ்
அன்று
ஏந்திப்பார்த்துக்கொண்டிருந்த
கிண்ண‌ம் இது.
கிரேக்க நாட்டு பூவேலைப்பாடு
உருண்டு திர‌ண்டு
அவ‌ன் கையில்
சுழ‌ன்று கொண்டிருந்த்த‌து.
ஏ கிண்ண‌மே?
நீ என் எண்ண‌மா?

காதல் எனும்
கண்ணுக்குத் தெரியாத‌
சிலந்திப்பூச்சியே!
உன் சித்திர வலையை
என் மீது பின்னி
மதுவின் மேகப்படலம் போல்
என்னில் படர்ந்து கொள்கிறாய்.
திருமண ஏக்கத்தை தனக்குள்
தின்று கொண்டு
கல்யாணப்பெண் போல‌
ஒரு மௌனத்தையே
ஊர்வலமாக்கி ஊர்ந்துகொண்ண்டிருக்கும்
அழ‌கிய‌ கிண்ண‌மே!
அது எப்ப‌டி எரிம‌லை பூக்கும்
கிள‌ர்ச்சிக‌ளை
அமைதியான‌ அல‌ங்கார‌ம்
ஆக்கிக்கொண்டிருக்கிறாய் நீ

உன் குழந்தைகள் போல்
வாயில் விரல் சூப்பிக்கொண்டு
உன் பின்னாலேயே வருகின்றனவே
அந்த “அமைதியும்” அதன் பின்னே
இன்னும் மெதுவாய்
தத்தக்கா புத்தக்கா என்று
நடந்துவரும்”காலம் எனும் பிஞ்சும்”?
அவ‌ச‌ர‌மாய் பெற்றுவிட்ட‌
அந்த‌ வ‌ள‌ர்ப்பு பிள்ளைக‌ள்
உன்னையே கொடி சுற்றிக்கொண்டு
வ‌ரும் அழ‌கே அழ‌கு!

சம்பவங்களை எல்லாம்
ரங்கோலிகளாக்கி
ர‌ங்க‌ராட்டின‌ம் சுற்றிக்காட்டும்
புக‌ழ்பெற்ற வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் கூட‌
உன் அழ‌கு வ‌ட்ட‌த்துக்குள்
வ‌ருவ‌த‌ற்கு முன்னேயே
கிற‌ங்கிப்போய் கிட‌க்கிறார்க‌ள்
ஊமையாகிப்போன‌ அவ‌ர்க‌ள்
வார்த்தைகள்
உருவ‌ம் இழ‌ந்து கிட‌க்கின்ற‌ன‌.

கிண்ண‌த்தில் ப‌ளிங்காய்
உறைந்து கிட‌க்கும் உயிர்ச்சித்திர‌ங்க‌ளே!
எங்க‌ள் எதுகை மோனைக‌ளைக்கொண்டு
எத்த‌னை எத்த‌னை தோர‌ண‌ங்கள்
தொங்க‌விட்டாலும்
உன் பூங்க‌விதைக‌ளை
அர‌ங்கேற்றும் வ‌லிமை
இந்த‌ “இத‌ய‌ அர‌ங்கு”க‌ளுக்கு இல்லையே!

அந்த‌ பின்ன‌ல் கொடி ஓவிய‌த்து
இலையின் கூரிய‌ விளிம்புக‌ள்
க‌லையின் க‌திர்வீச்க‌ளாய்
கிண்ண‌த்தின் வ‌டிவ‌த்துள் நிர‌விக்கொண்டு
என்னேன்ன‌வோ க‌தைக‌ள் கூறுகின்ற‌ன‌வே!
கடவுளர்களா? மனிதர்களா?
இல்லை இரண்டையும் கலந்து
பிசைந்து பீங்கானில் பிறந்த‌ உருவ‌ங்க‌ளா?
இங்கே காண்ப‌து கோவில்க‌ளா?
இல்லை..காண‌ காணத் திக‌ட்டாத‌வாறு
வெள்ளி ஆற்றை வ‌யிற்றில்
உருக்கி ஓடிக்கொண்டிருக்கும்
ப‌சுமை க‌வித்த‌ ப‌ள்ள‌த்தாக்குக‌ளா?
ம‌னித‌ர்க‌ள் என்ன‌? தெய்வ‌ங்க‌ள் என்ன‌?
க‌ன்னிமை ஒளிவீசும் பெண்கொடிக‌ள் என்ன‌?
அவ‌ர்க‌ள் தூவும் காத‌ல் ஏக்க‌ங்க‌ள் என்ன‌?
இது என்ன‌ பித்த‌ம்பிடித்த‌ புகை ம‌ண்ட‌ல‌ம்
மேக‌க்கூட்ட‌ங்க‌ள் போல் மொய்க்கின்ற‌ன‌!
எதையோ ம‌றைக்க‌
எதிலிருந்தோ த‌ப்பித்துக்கொள்ள‌
த‌றிகெட்டு ஒட
கிண்ண‌ச்சுவ‌ர் அதிர‌ ஏனிந்த‌ போராட்ட‌ம்?
ப‌ளிங்கு மௌன‌ம் கூட‌ பிளிறுமா?
வான‌த்தோல்கூட‌ கிழியும்ப‌டி
ம‌றைவாக‌ ஓர் முர‌சு
கொட்டிகொட்டி முட்டிதிமிர்கிற‌து.
ஊளையா? ஊதுகுழ‌ல் தேனா?
ஊனைப்பிசைகிற‌து.
உயிரைத்தின்கிற‌து.
என்ன இனிமையின் வெறி இது?
இத‌ய‌த்துள்
க‌ள்ளை க‌ட‌ல் போல்
ஊற்றி ஊற்றி…
ராட்ச‌த‌ அலைக‌ள் எங்கோ கொண்டு வீச‌
…………
கிண்ண‌த்தின் வ‌ருட‌ல்க‌ளில்
அவ‌ள் ப‌ட‌ர்ந்து ப‌ர‌விய‌தில்
நான் எங்கோ மித‌க்கின்றேன்.

==============================================

Series Navigation

ருத்ரா

ருத்ரா