திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

This entry is in the series 20091002_Issue

அப்துல் அஸீஸ்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

எனது கட்டுரைகள் பற்றிய எதிர்வினைகளை கண்டேன். இவற்றில் பலருக்கு அஜீரணமும், சிலருக்கு எரிச்சலும் வந்துள்ளது கண்டேன்.

ஆக்கப்பூர்வமான முறையில் அவை என் கட்டுரையில் உள்ள குறை நிறைகளை குறிப்பிட்டால் பதில் கூற ஏதுவாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அவற்றுக்கு என்ன பதில் கூறிட முடியும்?

அன்பு சகோதரி ரபியா அவர்கள் என்னை முட்டாள் என்று இகழ்ந்துரைத்துள்ளது வருத்தத்திற்குரியது. இஸ்லாமில் வஹாபி பாதை, சூபி பாதை என்று ஏதும் இல்லை. இருப்பது அல் குரானும், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய ஹதீஸ்களுமே. அப்படி இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆளுக்கொன்றாக விளக்கம் அளிக்க முனைவதில்தான் ஆபத்தே இருக்கிறது.

வஸ்ஸலாம்
அப்துல் அஸீஸ்

azizabdul1973@yahoo.com

Series Navigation

About அப்துல் அஸீஸ்

அப்துல் அஸீஸ்

View all 3 articles →

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

This entry is in the series 20090926_Issue

கார்கில் ஜெய்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
‘இந்தியா விடும் ராக்கெட் நன்னா சந்திரனுக்கு போனுமே’ என்று சந்திரனுக்கே அர்ச்சனை செய்யும் அசட்டு ஹிந்துவான நான், ஸ்ரீ. அப்துல் அஸீஸ் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். அதனால் ஏற்பட்ட் அஜீரணம் காரணமாக எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று புதிய மாதவி எழுதிய இலக்கியத் தொன்மை வாய்ந்த கட்டுரையையும் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தின் புதுமுனிவராக அண்ணாவை பக்த கோடிகள் தேர்ந்தெடுத்த திராவிட உண்மையை புதியமாதவி எழுதியிருந்த்தார். அவருக்கு ஒரு வேண்டுகோள். இந்த திராவிட உண்மைகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? (திராவிட எழுத்தாளார்களின் புத்தகங்களில் இல்லாமல் நாளிதழ்களில் இருந்து)

1) எப்போது கிருபானந்தவாரியார் முன்னிலையில் பக்தர்கள் திரு.அண்ணாத்துரையை காஞ்சி முனிவராகத் தேர்ந்த்தெடுத்தனர்? எந்த பத்திரிகையில் இநநிகழ்வு (அசம்பவமாகவாவது) பதிவு செய்யப்பட்டது?

2) எப்போது, என்று திரு. அண்ணாத்துரை “no sentence can end with because, because because is a conjuction” என்று குறிப்பிட்டார்? இது பற்றி திராவிட இயக்க நாளிதழ்களாவது செய்தி வெளியிட்டனவா?

3) எப்போது யேல் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார்? எந்த பேராசிரியர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தது? அதற்கான குறிப்பு ஏதேனும் இந்திய அல்லது அமெரிக்க நாளேடுகளில் வெளியானதா? யேல் பல்கலைக்கழக குறிப்பேடுகளில் இது பதிவாகியுள்ளதா?

அல்லது இதுவும் ‘பெரியார்தான் வைக்கம் வீரர்..அவரேதான் கோவிலில் போராட்டம் நடத்தினார், காங்கிரஸ் அனுப்பிவைத்ததால் ஒன்றும் அவர் நடத்தவில்லை..’ என்பது போன்ற திராவிட உண்மையா?

இதையெல்லாம் தெரிந்துகொண்டால் நல்லது என்பதால்தான் கேட்கிறேன். வேறு எதற்கும் அல்ல.

நன்றி,
கார்கில் ஜெய்

Series Navigation

About கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்

View all 14 articles →