ஊழிக் காலம்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

எம்.ரிஷான் ஷெரீப்,


காய்ந்துபோன ஏரிகளில்
காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது
சுருக்கங்களின்றி
பருவம் பூரித்துச் செழித்த தன்
முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி
பார்த்திருந்த வானத்திடம்
தன் முறைப்பாட்டையும் நெடுமூச்சையும்
ஒருசேரக் கொடுத்தது

எதையும் கண்டுகொள்ளாச் சூரியன்
வழமைபோலவே
காற்றைச்சுட்டெரித்தது
இருக்கும் விருட்சங்களை வெட்டியபடியும்
பிளாஸ்டிக் குப்பைகளைப் புதைத்தபடியும்
எதுவுமே செய்யாதவன் போல
முகம்துடைத்துப் போகிறேன் நான்
உங்களைப் போலவே வெகு இயல்பாக

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி – பூவுலகு இதழ் ( ஜூன்,2009)

mrishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்