காதலின் பரிமாணங்கள்
கவிதா நோர்வே

என் பாதச் சத்தம்
உணர்ந்து
எழுந்து போகும்
உன் கால்கள்
பக்கத்தில் வரும் போதெல்லாம்
எங்கோ பார்த்து விடைபெறும்
உன் கண்கள்
அறைக்குள் நான்
நுழைய எத்தனிக்கும் போதே
வெளியேறும் உன் வேகம்
அனைத்துமே
எம் பழைய காதலின்
புதிய பரிமாணங்கள்
“வாழ்க்கையென்றால் இப்படித்தான்”
அன்பானவர்களின் அறிவுரைககள்
ஏந்தி…
சுரனையற்று உன்னால்
இரசிக்கப்படாத
நான்.
என்னை நோக்கி முகர வரும்
பிற முகங்களையும் புறம்தள்ளி
நீ வீசிய
குப்பைத்தொட்டிக்கருகிலேயே
விழுந்துகிடக்கிறேன்
எம் கலாச்சாரக் குப்பைகளின்
நாற்றங்களை முகர்ந்தபடி
kavithai1@hotmail.com