தேரோட்டி இல்லாது !

This entry is part of 37 in the series 20071025_Issue

சி. ஜெயபாரதன், கனடா



செக்கு மாடுகளை இழுத்துவந்து
தேரில் மாட்டினேன் !
திக்குத் தெரியாமல்
வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி
வந்தது என் தேர்
கொடை ராட்டினம் போல் !
தலை சுற்றியது எனக்கு !

கீதையை உபதேசிக்க
தேரோட்டி கிடைக்க வில்லை !
திணறி வீழ்ந்தேன்
மனமுடைந்து !
சினமுற்று விரட்டிய
எனது வண்டி மாடுகளை
எண்ணிக்
கண்ணீர் விடுகிறேன் !

இப்போது செக்கு மாடுகளைப்
பயிற்றுவிக்க
குப்பை வண்டிக்காரனை
நியமித்தேன் !
நேராகப் போனது
தேரானது
நின்று நின்று !

********

Series Navigation