This entry is in the series 20040708_Issue

புதியமாதவி


எழுதியப் பக்கங்களில்
வாசிக்க முடியாத
உன் இதயம்
உன்
வெற்றுக் காகிதத்தில்
வெற்றிடமில்லாமல்
நிரம்பி வழிகிறது.

அந்தக் கசிவில்
கற்பின் அரண்
உடைந்துச் சிதறி
ஊருக்குள் வெள்ளமாய்…
மீண்டும் மீண்டும்
கடல் கொள்கிறது
என் காலடிகளை.
இனி..
புதையுண்டுப் போகட்டும்
நம் புனிதங்கள்.

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை.

Series Navigation