கறியாடுகள்
நெப்போலியன்

இனங்களின்
முகங்களில்
போலி முத்திரைகள்.
வேஷதாரி
ஆருடங்களாய்
வரலாற்றுத் திரிபுகள்.
வேர்களின்
தூர்களில்
விஷ உரங்கள்.
நீல ரத்தம்
பச்சை மயிர்
கருப்புச் சிரிப்புடன்…
அடையாளங்கள்
அழிக்கப்படும்
பிரக்ஞையின்றி
அறுபடும்
கறியாடுகளாய்
நாகரீகக் கொட்டில்களில்
நாம்.
—-
kavingarnepolian@yahoo.com.sg