நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?

This entry is part of 55 in the series 20031211_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உப்பு சர்க்கரைக்கு
உரசா வார்த்தைகள்!
இரவல்போன எழுத்து நண்பர்கள்
திரும்பும் அதிசயம்!
கொளுத்தும் வெய்யிலை அணைப்பதற்கென்றே
கொட்டும் மழை!
நலம்நலமறிய ஆவலாய் எழுதி
டாலர் முனங்கா இந்தியக் கடிதம்!
அலுவற் சென்று வீடு திரும்பினால்
அண்டை மனிதனின் அதிசய வணக்கம்!
விரும்பிய நட்பிடம் ஈமெயில் பெற்றதும்
விபத்தில்லாமல் காரைஓட்டவும்…..
இன்றைய விதியின் இதய வைத்தியம்

நாளையும் அன்பாய்.. வேண்டாம்
அக்கறையாகவோர் அசுரவைத்தியம்
நேர்ந்தால் கூட
நெஞ்சம் பிழைத்திடும்!
—————————————————-
Na.Krishna@wanadoo.fr

Series Navigation