ஏ ! பாரதி

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

மரவண்டு


———————————-

ஏ ! பாரதி
நீ வசித்த தம்பு செட்டி தெருவை
அடுத்த தானப்ப செட்டி தெருவில்
தான் வசிக்கிறேன் ..
பிழையாகப் பாடி விட்டாய் பாரதி ….
‘சாதிகள் உள்ளதடி பாப்பா ‘

0

ஏ ! பாரதி
நீ அன்று பஜனை பாடிச் செல்கையில்
பைத்தியம் என்று இகழ்ந்த கூட்டம்
இன்று உன் பாதம் பட்ட இடத்திற்கு
பாரதி சாலை
என்று பெயர் வைத்திருக்கிறது ..

0

ஏ ! பாரதி
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்க்க வேண்டும்
என்று பாடிய நீ தானே
ஒரு இடுப்பில் புதுக் கவிதையையும்
மறு இடுப்பில் ஹைக்கூவையும்
சுமந்து வந்தது நீ தானே

0

ஏ ! பாரதி
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி
ஆங்கிலம் , சமஸ்கிருதம் , ப்ரெஞ்ச் , வங்காளி ,
ஜெர்மன் , உருது , அரபி , லத்தின்
என்று 12 மொழிகள் கற்றிருந்த நீ
‘ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது
வேறெங்கும் காணோம் ‘
என்று பாடினாய்..
கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது ..

அய்யகோ ! பாரதி .. பாரதி..
எப்படிச் சொல்வேன் உன்னிடம் ..

மம்மிகளும் டாடிகளும் மலிந்து விட்டார்கள்
தமிழகத்தில்

அய்யகோ ! பாரதி .. பாரதி..
எப்படிச் சொல்வேன் உன்னிடம் ..

தமிழ் இங்கே மரணப் படுக்கையில் !

—————————————-
மரவண்டு
maravantu@yahoo.com

Series Navigation

மரவண்டு

மரவண்டு