This entry is in the series 20031030_Issue

பா. சத்தியமோகன்


அவசரமான பயணத்திற்கு
அயர்ன் செய்யும் சூடான பெட்டிக்கு
ழே
சூடுபடும் பெட்டிக்கு கீழே
கருப்பு எறும்புகள் கண்டு அஞ்சுகிறேன்
எடுத்துப் போட்டால் ஓடுகிறது மறுபடி தப்பாமல்
திரும்பவும் வருகிறது நாலாறு பத்து பனிரெண்டு
தவிர்க்க முடிவதில்லை
என் நாட்டு மக்கள் நினைப்பை
அயர்ன் செய்து முடிக்கும் போது
சட்டத்தின் கீழ் அவை மக்கள் போலும்
மாட்டிக் கொண்ட எறும்புகளா
சிக்கிக் கருகிய எறும்புகள் போன்ற மக்களாவென
=========================================
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation