This entry is in the series 20030911_Issue

அருண்பிரசாத்.


மெல்லியதாய் தெறிக்கும்
வாகனத்து கதவோர மழைத்துளி,
நினைவுகளை அசை போட்டபடி
நான்.

அரிதாகத்தான் தோன்றுகிறது
இந்த புலிநகக் கொன்றையில்
என் பறவையின் இருப்பு பற்றிய
அறிதல்.

எதிர் கடக்கும்
கண் பறிக்கும்
வெளிச்சத் தீற்றல்கள்
இழுத்து வரும்
மெய்யின் புலத்துக்கு.

அருண்பிரசாத்.
everminnal@yahoo.com

Series Navigation