தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

This entry is part of 45 in the series 20030703_Issue

தி.கோபாலகிருஷ்ணன்


1.

கடிதம் வராமல்
சோர்ந்த வேளையில்
அழைப்பிதழ் வந்தது.

2.

எந்த முகவரிக்கு
அஞ்சல் பெட்டியில்
எச்சமிட்டது காகம் ?

3.

பசுவையும் கன்றையும் பிரித்துக் கட்டி
பால்காரி அமர்ந்தாள்
மார்பில் குழந்தையுடன்

4.

பாக்கெட்டில் பணம் இருக்கும்
கவலையின்றி
பிக்பாக்கெட்

5.

இளைய தாரத்தை
சிரித்து வரவேற்கும்
காலண்டர் குழந்தைகள்

gk_aazhi@rediffmail.com

Series Navigation