This entry is in the series 20030323_Issue

ஜெயஸ்ரீ


எதிர் பார்ப்பில் சில நாட்கள்!
ஏமாற்றத்தில் சில நாட்கள்!

சாதித்ததில் சில நாட்கள்!
சறுக்கி விழுந்ததில் சில நாட்கள்!

சிரிப்பில் சில நாட்கள்!
சிந்திய கண்ணீரில் சில நாட்கள்!

கர்வப் பட்டதில் சில நாட்கள்!
கலங்கி நின்றதில் சில நாட்கள்!

நம்பிக்கையில் சில நாட்கள்! – உள்ளம்
நடுங்கியதில் சில நாட்கள்!

ஆசையில் சில நாட்கள் – அத்தனையும்
அடக்கியதில் சில நாட்கள்!

முயற்சியில் சில நாட்கள் – முத்தெடுக்க
முடியாமல் சில நாட்கள்!

ஏகாந்தத்தில் சில நாட்கள்!
ஏக்கமாய் சில நாட்கள்!

அன்போடு சில நாட்கள்!
அக்னியாய் சில நாட்கள்!

பொறுமையாய் சில நாட்கள் – உள்ளே
பொருமியதில் சில நாட்கள்!

மெளனமாய் சில நாட்கள்! – மனதோடு
மன்றாடியதில் சில நாட்கள்!

என்னை வியந்து சில நாட்கள் – நீ
என்னுள் விழுந்ததில் சில நாட்கள்!

நிரப்பப்படாத என்னின் பக்கங்களுக்காய்
நாளை வரும் என்ற நம்பிக்கையில்…
இன்னும் சில நாட்கள்…!

mail2001@rediffmail.com

Series Navigation