This entry is in the series 20010805_Issue

திலகபாமா, சிவகாசி


இராஜகுமாரனுக்காக காத்திருந்து
தரவேண்டிய தட்சணைக்காக
தவித்திருந்து
கழுத்தில் தாலியேறியது முதல்
காத்திருப்பே காதலாய்
பசி தீர்க்க காத்திருந்து
பத்து மாதம் தீர்ந்தபின்
உந்தியில் உதித்த
மலரை உறங்க வைக்க
மறுபடியும் காத்திருப்பு
பசித்திருந்து,விழித்திருந்து
காத்திருந்து,கண்ணீர் வடித்திருக்கும்
உறவுக்காக காத்திருப்பு கடைசிவரை.
மல்லாந்து வானம்
பார்த்திருந்தது போதும்
மண்வாசத்திற்க்காக
மழை ஒரு நாள்
நகம் கடித்து துப்பியபடி
காத்திருக்கட்டும்

ஆதவனே
அணுதினமும் உனை நோக்கும்
சூாிய காந்திக்காக
சும்மாவேனும் ஒரு நாள்
காத்திருப்பாயா ?
இல்லை
மாறுவேனோ சூாியனாய்
என் திசை நோக்கி திரும்பும்
சூாியகாந்திக்காய்….

Series Navigation