4 குறுங்கவிதைகள்..

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

தேனம்மைலெக்ஷ்மணன்


சொட்டு நீலமோ உன் பார்வை
வெளுக்காமலே
வெண்மையாகிறேன் நான்
************************************************

தந்திக் கம்பங்களில்
நிதானிக்கும் பறவைகளாய்
ஓய்வெடுத்து போகின்றன
குறுஞ்செய்திகள்..

*************************************************
புலம் பெயர் பறவைகள்
பருவகாலம் முடிந்தும்
திரும்ப ஏலாமல்
வலசை வந்த பறவைகளாய்..

*********************************************
சீசன்..
******
கண்களே மட்டையாயும்
பந்தாயும்..
அவுட்டாகாத இதயம்
லப்டப்பென்று
பார்வையாளரின் கூச்சலோடு..

Series Navigation

author

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts