வாழுமிடத்தில் வாழ்ந்தால்
Published April 23, 2009 • By
ஸ்ரீபன்
ஸ்ரீபன்

என் உள்ளங்கை
மென்மையாகிவிட்டது
முகம் கொஞ்சம் பூசினால்போல
மெருகேறி அழகானமாதிரி
வார்த்தைகளில் நாகரீகம் வந்து
மெலிதாக பேசி
வீதியில் கண்ட பொருள்
என்னது இல்லையென்றபின்
அதை எடுக்க மறுத்து விலகி
கொஞ்சம் மரியாதை கலந்து
பயம் வந்து
பெற்ற உதவிக்கு நன்றிசொல்லி
ரத்தம் கண்டு பயந்து
சண்டை என்றவுடன்
விலகிப்போய்
தவறு என்றவுடன்
மன்னிப்பு கேட்டு
கொஞ்சம் தொப்பை வந்து
சாப்பாட்டை கண்டு பயந்து
என்னாச்சு எனக்கு
ஐயோ நான் வெளிநாடு வந்துவிட்டேன்
நோர்வேய்க்கு