நெறி
பாரதிராமன்

என்னை அவர்கள் கூட்டத்தில்
சேர்க்க மறுத்தார்கள்
எனது குறைகளையும்
அவர்களது குணாதிசயங்களையும்
காரணப்படுத்தவில்லையே அவர்கள்
என்று நான் யாாிடமோ கூற
யார் யாரோ
யார் யாாிடமோ சொல்லி
இப்போது
எனக்கென்றும் ஒரு கூட்டம்–
என் கூட்டத்தில்
அவர்களைக்
கூட்டவேண்டாம்
என்ற நெறிப்பாடுடன்.