This entry is in the series 20091119_Issue

ஆர் ஜி ஐய்யப்பராஜ்



என் உற்றார்
வெறும் சொற்களால்
கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சொற்களாலே சிரிக்கிறார்கள்
சொற்களாலே அழுகிறார்கள்
சொற்களாலே கோபப்படுகிறார்கள்.
சொற்கள் அனைத்தும்
தீர்ந்தபின்
ஓர் சுழ‌ல்வ‌ட்ட‌ப் பாதை போல‌
ஆர‌ம்பித்திலிருந்து ஆர‌ம்பிக்கின்ற‌ன‌ர்
“எப்படி இருக்க..?” என்று.

ப்ச் ச‌லித்துவிட்ட‌து.

Series Navigation