This entry is in the series 20020819_Issue

ஆனந்தன்


தாமரை இலைக்கு
தண்ணீர் மேல்
கோபம் இருக்கலாம்
தாமரையின் வேருக்கல்ல!

கண்ணகியின் கோபம்
மதுரையைத் தான் எரிக்கும்;
சாவித்திரியின் சாந்தம்
கனவனையும் மீட்கும்!

கடலின் கோபம்
கரையில் தான்
முத்துக்கள் உறங்கும்
அழ் கடலில் அல்ல!

வீண் கோபம்
தன்னைத் தான்
அழிக்கும்.
எரிமலையைப் பாருங்கள்!

நெருப்பு என்றும்
தண்ணீர் மேல்
கோபம் கொண்டதில்லை!

மலைகள் என்றும்
பூமி மேல்
கோபம் கொண்டதில்லை!

கோபத்தின் விளைவு
என்றுமே அழிவு…

கொடிய கோபம்
நமக்கு சாபம்!

மனிதர்கள் நமக்கு
கோபம் எதற்கு ?

ஆனந்தன்
k_anandan@yahoo.com

Series Navigation