கயிலாயக் குடும்பம்
அனந்த் (அனந்தநாராயணன்)

கையினிலே ஏந்துவதோ ஓடு – அவன்
காலெடுத்து ஆடுவதோ காடு
அன்னவன்மேல் மையல்கொண்டே
அருகமர்ந்தாள் அம்மைஅவள்
காதலுக்கு வேறெதுதான் ஈடு ?
*********
அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில்
ஆனைமுகன் வெற்றிக்கொடி நாட்டி
அகிலமெல்லாம் சுற்றுவதை
அன்னைதந்தை சுற்றுவதால்
அடைந்திடலாம் என்றான்வழி காட்டி
*********
போட்டியிலே தோற்றதனால் வெம்பி – மனம்
போனபின்னர் மாற்றுவழி நம்பி
அண்ணனுக்கு முன்னதாக
ஆற்றுமொரு செய்கையென்று
புரிந்துகொண்டான் இருமணத்தைத் தம்பி!
*********
ananth@mcmaster.ca