கடல் விழுங்கும் ஆறுகள்….
தினேசுவரி,மலேசியா

எல்லா அழுக்குகளையும்
திருடிக்கொண்டே வந்த
ஆறுகள் பீற்றிக் கொண்டன
தங்களின் அழகையும்
சுழிவு நெளிவுகளையும்…..
ஓடும் வளைவுகளிள்
பல கோடி மரங்களுக்கு
உயிர் பிச்சைப் போட்டதாகவும்
கதையளந்தன….
உயிரைப் பிணமாக்கும் கலையைக்
கற்றுக் கொண்டதனால்
நாங்கள் படைப்பாளிகள் என
தம்பட்டமும் அடித்தன…
கரைப் புரண்டு வந்ததில்
கடல் கண்ட ஆறுகள்
திக்கற்று நின்றன….
விழுங்கப்பட்ட ஆறுகள்
மிஞ்சியது வெறும்
ஏப்பங்களாக……