This entry is in the series 20020917_Issue

விக்ரமாதித்யன் நம்பி


கடலின் கூப்பாடு
சும்மா இல்லை
மேகங்கள் திரண்டு
வந்து பெய்யும் மழை
பாறைகளில் மோதி
வரும் நதி

கண்ணகித்தாய்க்கு
தெரியும்
மேகலைச் செல்வி
அறிவாள்
மாதவிப் பூங்கொடியின் துயரம்
கானல் வரியிலிருந்தே

அரும்புகள்
மலர்கின்றன
காற்று
வீசிக்கொண்டேயிருக்கிறது
நிலக்காட்சிகள்
மாறுகின்றன

பிறகென்ன
சொன்னது சொன்னதுதான்
சூரிய சந்திரர்கள் சாட்சியாக

***

Series Navigation