இடி, அடி, தடி
Published September 17, 2002 • By
அனந்த்
அனந்த்

வந்ததொரு இடிமுழக்கம் இன்று
டுண்டுடுடூ டுண்டுடுடூ என்று
……. எந்தன்உடல் படபடக்க
……. எழுதிவைத்தேன் கரம்நடுங்க
‘தந்தனத்தா ‘ சந்தமிது என்று!
******
ஆருமில்லா நேரமாகப் பார்த்து
ஆறுவருட ஆசையினைத் தீர்த்து
……. பேரனது ஊஞ்சலிலே
……. பெருங்களிப்போ(டு) ஆடையிலே
பார்அடைந்தேன் தாடைமுட்டி பேர்த்து!
******
மங்களத்தின் மாமனொரு குண்டன்
வசிப்பதற்கு வந்தடைந்தான் லண்டன்
……. இங்கிலாந்துத் தீனிதின்று
……. இவன்பெருத்த மேனிஇன்று
தங்கும் ‘கின்னஸ் புக் ‘கில்;எம கண்டன்!
***
September 14 2002
ananth@mcmaster.ca