This entry is in the series 20100411_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


இங்கு எல்லாம்
சொல்லப்பட்டு விட்டது.
இங்கு எல்லாம்
எழுதப்பட்டு விட்டது.
இங்கு எல்லாம்
கொடுக்கப்பட்டிருக்கிறது
இங்கு எல்லாம்
எடுக்கப்பட்டும் இருக்கிறது.
இங்கு எல்லாம்
எல்லாமுமாக இருக்கிறது
இங்கு எல்லாம்
எதுவுமற்றதாகவும் இருக்கிறது

எல்லோர்க்கும் எல்லாமென்பது மட்டும்
எப்போதும் ஒலித்தபடி இருக்கிறது
எல்லோராலும் இன்னமும்.

Series Navigation