ஆத்ம தரிசனம்
Published August 12, 2002 • By
அனந்த்
அனந்த்

உலகினிலே வளையவரும் தேகம்
உறும்வினைக்குக் காரணமாம் மோகம்
…. விலகிநின்று செயல்புரியும்
…. விதமுணர்ந்தால் அதில்தெரியும்
அலகிலாத அருள்நிலையே யோகம்!
***
உடலிதுதான் ஊனமுற்ற போதும்
உள்ளமதில் ‘நான் ‘எனவெப் போதும்
…. தொடர்ந்துவரும் கனவினிலும்
…. படர்ந்துவரும் ‘நான் ‘அறிந்தால்
அடங்கிடுமே அகிலமுள்ள யாதும்!
***
உள்ளமதன் உள்ளையும்நாம் கண்டு
உணருமொரு பரவசமும் உண்டு
…. கள்ளமிலா மகிழ்ச்சிநிலை
…. கருத்துமற்ற நெகிழ்ச்சிநிலை
தெள்ளியதை யார்க்குரைப்போம் விண்டு ?
***
ananth@mcmaster.ca