ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

ஜயராமன்


ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.

le1

ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20710181&format=html

முதலில், தலைப்பே அபத்தமாய் இருந்தது. இந்த கட்டுரையோ ஸ்ரீதேவியை பார்த்து அவர்களுடன் பேட்டி எடுத்ததாக இந்த ஆசிரியர் சொல்லும் ஒரு நிகழ்வைப்பற்றி. அதைப்பற்றி எழுதும்போது இப்படி ஒரு கவர்ச்சியாக பெயர் வைக்க வேண்டிய அவசியம்

என்ன என்று புரியவில்லை. ‘அவளுட ராவுகள்’ மாதிரி ஒரு ஈர்ப்பான தலைப்பு தேவைப்படுகிறது என்பதே ஒரு

மலிவான விஷயம்.

அதற்கும் மேல், இந்த கட்டுரையில் ஸ்ரீதேவியின் பேட்டி (அதாவது தலைப்பு) பற்றி இருக்கும் விஷயத்தை ஒரு பஸ்டிக்கட் பின்னால்

எழுதிவிடலாம்.

கட்டுரை நூலருந்த பட்டம் போல் எங்கெங்கோ போகிறது. ஆரம்பத்தில் ஒரு முழத்துக்கு நடிகை ரேகாவைப்பற்றி சம்பந்தமில்லாமல்

ஒரு பிட் ஓடுகிறது.

ஆனால், அதை விட கொடுமை – அந்த ஸ்ரீதேவியின் பேட்டியை – அது மாலைப்பொழுதிலோ என்னவோ இந்த கட்டுரையில் மாலையைப் பற்றி ஒன்றும் காணோம்,ஆனால் அதற்காக என்ன, மாலையில் மங்கையை சந்தித்தால் இன்னும் கிறக்கமாக

இருக்கிறது இல்லையா, அதனால் வாஸந்தி அவர்கள் ஒரு கவர்ச்சிக்காகவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

– பாதிலேயே விட்டுவிட்டு மும்பை அரசியலுக்கு தாவி விடுகிறது.

மும்பை அரசியலைப்பற்றி இவர் விமர்சினங்களும், விளக்கங்களும் மகா பாமரத்தனம். டோம்பிவிலி ரயிலடியில் வடாபாவ் விற்கும் ஒரு பாமரனின் கருப்பு-வெளுப்பு – நடுவில் வேறு நிறம் இல்லை – பார்வைதான் இதில் தெரிகிறது. சொல்லப்போனால், அது ரேகாவாகட்டும், ஸ்ரீதேவியாகட்டும், மும்பை அரசியலாகட்டும் – இப்படி ஒரு பொதுவில் இருக்கும் கருப்பு-வெள்ளை பிம்பங்களை தாண்டி இதில் ஒன்றும் இல்லை.

அந்த மும்பை அரசியலுக்கு காரணிகளாக அயோத்தியை நிலைநாட்டும்போது தற்குறித்தனத்தின் உச்சமாக இருக்கிறது. இந்த

லட்சணத்தில், வழக்கம்போல இந்துத்துவாவுக்கு சிக்குலரிகளால் (வாஸந்தி ஒரு சிக்குலரி…) கொடுக்கும் பல அடைமொழிகள் வேறு

அங்கங்கே தூவப்பபட்டிருக்கின்றன.

வாஸந்தி அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம் இதுதான் –

இருபது வருஷம் முன்பு நடந்ததை அரைவேக்காடு அரசியல் விமர்சனத்துடன் சேர்ந்து பரிமாற வேண்டாம்…

நன்றி

ஜயராமன்


vaithikasri@gmail.com

Series Navigation

ஜயராமன்

ஜயராமன்