எஸ்ஸார்சி
பேருண்மையும் பெருநீதியும்
தீர்க்க உறுதியும் திகழ்த்தவமும்
பிரம்மமும் வேள்வியும்
உலகு தாங்குபவை
நிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம்
புவி விரிந்து கொடுப்பாளாக
அவள் அன்னை நான் அகில குமாரன்
மின்னல் என் தந்தை
கிராமங்களிலே கானகத்திலே சபைகளிலே
சங்கங்களிலே கூட்டங்களதனிலே
புவிக்கு இனிமைதருவது பேசுவோம்
அழிக்கும் ஆற்றலுடை அக்கினி இவண் அழியட்டும்
உழவின் வெற்றி உழைப்பின் பலன் மனிதனுக்காகவே
இவை அழிக்கும் எவ்வக்கினியும் தூரம் செல்லட்டும்
பொறாமைக்காரன் பேராசைக்காரனோடே
அடிக்கடித்தான் பேசுகிறான்
அழி நெருப்பு அவனைத்தொடர்வதை நிறுத்துவதில்லை
கணவன் இறந்திடப்பின் அழிநெருப்பு இல்லம் புகும்
அது தொலைக்க அறிவுடைப் பிராமணன்
துணைக்கு வரவேண்டும்
அழிக்கா வொரு அக்கினியே அழி அக்கினியைப்புறந்தள்ளுக
எரி சுடரே
தந்தை மகன் போலே எம்மைக்காத்திடுக
தூய காற்று இவண் வீசுக
கருங்காகம் உணவை அலகால் கொத்தினாலும்
வேலைக்காரி உரல் உலக்கையை ஈரங்ஞ்செய்தாலும்
தண்ணீர் புனிதம் செய்யட்டும்
பக்குவம் வந்த பெண் போலே
தண்ணீர் அரிசியொடு ஒன்று சேரட்டும்
பால் விரும்பும் இளங்கன்று நோக்கிக்கதறும் பசுபோலே
தேவர்கள் குரல் கொடுத்துக்காக்க எம்மை
கணவன் மனைவிக்குத்தெரியாமல் செய்ததுவும்
மனைவி கணவனுக்குத்தெரியாமல் செய்ததுவும்
ஏதும் இல்லாதாகி அவர்கள் ஒன்று சேர்க
யான் பக்குவம் செய்கிறேன்
யான் அளிக்கிறேன் இங்கே என் மனைவி என்னோடு
உலகம் கொளரவமாய் ஈன்ற மகனைப்போலே உதித்தது
உயரிய உயர் வாழ்க்கை உறுதியாகட்டும்
சூதாடு களம் அல்லது சபை நடுவே
பொய் புகன்றாலும்
லாபத்திற்காய்ப்பொய் யான் பேசினாலும் அவையொழியட்டும்
அக்கினியே எம்மை மூப்புக்கு இட்டுசெல்
மூப்பாகி மரணம் அடைவோம்
பக்குவம் எமதாகட்டும்
பிராமணர்க்குப் பசுவைத்தானம் செய்கிறேன்
சந்ததி அருள்வது பசு
பசுவைத்தானம் தர இசையாதவன்
தம் மக்களை இழந்து பசுவையும் இழப்பான்
பசுவின் இரு செவி திருகுவோன்
தேவ சினத்துக்கு ஆளாவான்
வால் கொண்டையை வெட்டுவோன்
குழந்தைகள் இழப்பான்
அவைகளை ஒநாய்கள் இழுத்துச்கொல்லும்
பிராமணனை நிந்தித்து அவன் பசு கவருவோன்
ஒழுக்கம் வீரம் செல்வம் இவை இழந்துபோவான் ( அதர்வ வேதம் காண்டம் 12)
வலிமையுள்ளவனே எழு
பேருலகு நிறுவிய உரோகிதன்
உன்னைச்சுமக்கிறான்
அழகம்மையின் மக்களான மருத்துக்களே
இந்திரனொடு தோழமைகொண்டு
பகையை வெல்லுங்கள்
உரோகிதன் நும் சொல் கேட்கத்தயாராகிறான்
சுந்தரக்குதிரைகளால் இழுக்கப்படும் தேர் உடைய
உரோகிதனே நீர்வளம் பெருக்குவோன் நீ
இருப்பதுவும் இருக்கப்போவதுவும் உரோகிதன்
புவிக்குதந்த கொடை அவன்
சூரியனே ஆதித்தனே நீயே பெரியோன்
நின் பெருமை பெரிது
அதிசயன் அறிஞன் நீ
விரைவோன் விளங்குவோன் சுடரோன் வானம் செய்வோன் நீ
நின்னை ஏழு மஞ்சள் குதிரைகள் இழுக்கின்றன
எவனிடமிருந்து கடல் சனிக்கிறது
எவனில் எல்லா ப்புவனங்களும் சுவாசிக்கின்றன
எவன் பதிமூன்றாவது மாதத்தை அளக்கிறான்
எவன் முப்பது பாகமுள்ள இராப்பகலை ச்செய்தான்
எவன் பிரகத்து இரதந்திரம் எனும் இரு சிறகுடை ரோகிதனைப்படைத்தான்
எவன் வருண மித்திர சவிதா இந்திரனாய் மாறிப்போவது அறிபவன்
எவன் அறிவான் ஒரு சக்கரம் மூன்று பற்கள் ஏழு நாமங்களுடைய ஒரு குதிரையின் இழுப்பதனை
எவன் அக்கினி உஷை உலகம் இவை மும்மூன்றென்று தெரிந்தவன்
ஒருகாலுள்ளவன் இரு கால் உள்ளவனைவிட ஆக்கிரமிப்பு செய்திட
இருகாலன் மூன்றுகாலோனைக்கடந்துபோகிறான்
நான்கு காலன் இருகாலன் ஆணைக்குப்படிந்தான்
எவன் இதனை இப்படி என அறிவான்
கருப்பனுக்கு வெள்ளை மகன் இரவுக்கு ப்பகல் பிறந்து வானேறினான்
எவன் இதை இப்படி அறிவானோ
விடை அனைத்துக்கும் தெரிந்த பிராமணனைக்கேவலம் பேசுவோன்
கொல்லப்படுக பாசக்கயிறால் இறுக்கப்படுக
சூரியனே கீர்த்தி புகழ் நீர் மேகம்
அறிவு உணவு உண்கை எல்லாம்
கடவுள் ஒருவர் அவர் எளிமையர்
அறிந்தோனுக்கு மட்டுமே அப்படி
அமிர்தம் மரணம் அரக்கன் அரி அனைத்தும் அவனே
நிலா உடுக்கள் பகல் இரா வான் வாயு விண் திசை புவி அக்கினி
தண்ணீர் இருக்கு வேள்வி இடி மின்னல் கல்லெறிவோன்
பாவி புண்ணியன் புருடன் அசுரன் பொழிப்பு செடிகொடி
இப்படி ஒரு கோடி இருகோடி பல்லாயிரங்கோடி லட்சங்கோடியுமாய்
தோ¡ன்றிடுவான் அவன்
விபூதி பலபதி பிரபு அவன்
வெளி விரிவு விசாலம் வையகம் அவன்
செல்வன் நலம்தருவோன் குணக்குவியல் அவன்
தரிசி அவன் எல்லாரும் வணங்கிடும் அவனை
யாமும் வணங்குகிறோம்
உணவு உண்கை புகழ் ஒளி பிரம்மத்தெளிவொடு யாமாகிட
எம்முன் தோன்றுக அவன் ( அதர்வ வேதம் காண்டம் 13 )
- வேத வனம்- விருட்சம் 94
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32
- சுக்கிரன் வேக விண்கப்பல் நான்கு ஆண்டுகளாய் அனுப்பிய புது விஞ்ஞானத் தகவல் (Venus Express) (2006–2010) (கட்டுரை: 1)
- சம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்
- செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை
- கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22
- அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
- ஜூலை மாத நியூஜெர்ஸி கலாச்சார நிகழ்வுகள் அட்டவணை
- தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக
- ஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4
- வட்டம்
- அவரவர் மனைவியர்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
- பஸ் ஸ்டாண்ட்
- களம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்
- முள்பாதை 37
- பரிமளவல்லி
- ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2
- நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல
- பிறந்த மண்ணும் பெற்ற மகனும்
- இரவில் உதயமாகும் சூரியன்கள்…
- விடுபட்டுப்போன மழை
- கொஞ்சம் கண்பனித்துப் போ…
- உயிர் பிழைத்திருப்பதற்காக..
- இராக்கவிதை!
- ரிஷியின் மூன்று கவிதைகள்
- கஷ்டப்படாமல் வெண்பா செய்யுங்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3