வேத வனம் -விருட்சம் 40

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

எஸ்ஸார்சி


இந்திரன் குதிரையொடு
சூரியன் தந்தான்
வலிமைபெறப் பால் பொழியும்
ஆநிரை தந்தான்
பொன் தந்தான்
போரில் தச்யுக்களை கொன்றான்
ஆரியர்க்குக் கிட்டியதோ
புது வாழ்வு ( ரிக் 3/34)

அஹியைக்கொன்றபோதும்
சம்பரனை வென்றபோதும்
ஆநிரைகள் மீட்டபோதும்
துணை நின்ற
மருத்துக்களோடு
கூடித்தோன்றிய இந்திரன் நீ
உடன் சோமம் பருகுக. ( ரிக் 3/47)

இந்திரனே நின் தந்தை
கசியபன்
தாய் அதிதி
தாய்முலைப்பாலைப்
பருகுமுன்
சோமம் சுவைத்தவன் நீ ( ரிக் 3/48)

விண்ணிலும் மண்ணிலும்
பரவி வளம்
தருவான் இந்திரன்
அவன் சுந்தரன்
வழிபடுவோர்க்கு
தந்தையாகி நிற்பான்
எப்போதும் அழைக்கத்தகுந்த அவனோ
அன்னம் பாலிப்பவன் (ரிக் 3/49)

இந்திரனே ஏ சூரனே
உத்தமன் நீ
காப்பாய் எங்களை
எங்களை பகைப்பவன்
தாழட்டும் வீழட்டும்
அழியட்டும்
கோடரிகொண்டு
மரம் கழிபடுவது போல்
பகைவன் சிதைவுறட்டும்
கொதியுறும் உலைப்பாத்திரம்
கக்கும் ஆவிபோல்
பகைவன் வாயிலிருந்து
நுரை ஒங்கி எழட்டும்

விசுவாமித்திரன் ஒர் சிறு பசுவா
அவனைச்சுற்றி
இப்படிப்பகைத்து நிற்கிறீர்கள்

ஏதும் தெரியாதவனை
தெரிந்தவன் ஏளனம் செய்யான்
குதிரைவரிசைக்கு முன்னே
கழுதையொன்றையா
இட்டுச்செல்வது

வசிஷ்டர்களை எதிர்க்க
பரதப்புதல்வர்களின்
குதிரைகள் தயார்தான்
ஆயினும் அழிப்பதுவே குறிக்கோள் அன்று ( ரிக் 3/53)
——————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி