வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

பனசை நடராஜன்


வக்கிர குணத்திலும்
அக்கிரமம் செய்வதிலும்
உக்கிரமாய் தனை எதிப்போரை
ஒழித்துக் கட்டுவதிலும்..
எக்கிரகம் போனாலும்
இவர்களைப் போல் கிடைக்காது..

குற்ற உணர்வின்றி
மக்கள் பணத்தைக்
கொள்ளையடித்து விட்டு,
தினந்தோறும் தவறாமல்
தீபம் ஏற்றிப்பூசை செய்தால்,
‘பெரிதாக ‘ தானம் செய்து
பரிகாரம் செய்து விட்டால்
சரியாகி விடுமென்ற
ஆரூடத்தை நம்புகின்ற,
ஆணவ வேடதாரிகள்!
(தொடரும்)

பனசை நடராஜன், சிங்கப்பூர்.
(panasainatarajan@yahoo.com)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்