வேடதாரிகள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

பனசை நடராசன்


விடுதலைப் பேசுவோர்
வீட்டினுள் கூண்டுக்கிளி!

உயிர்க்கொலை வெறுப்போர்
உடுத்துவது பட்டாடை

அடக்குமுறை எதிர்ப்போரிடம்
அடிமைகளாய் பண்ணையாட்கள்

அரிதார வேடதாரிகள்
ஆண்டவராய், ஆள்பவராய்

பிறிதோர்கள்
பிழைக்கத் தெரியாத
மனிதர்களாய்…!

-பனசை நடராசன்
(feenix75@yahoo.co.in)

பனசை நடராசன் -சிங்கப்பூரின் பிரபலமான இளங்கவிஞர். அண்மையில் வசந்தம் சென்ட்ரல் தமிழ் தொலைக்காட்சியில் இவரது ‘புத்தாண்டு ‘, ‘துள்ளிசைப் பாடல் ‘ உள்ளூர் பாடகர்களால் அரங்கேறி இவருக்குப் புகழைத் தந்தது. வாரந்தோறும் தமிழ்முரசில் எழுதுபவர். தவறாமல் உள்ளூர் கவிதை நிகழ்ச்சிகளில் பரிசு பெறும் துடிப்பான தமிழ் ஆர்வலர்.

rhamas@yahoo.com

Series Navigation

பனசை நடராசன்

பனசை நடராசன்