வீட்டுக்குறிப்பின் உள்ளுணர்வு

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

சித்திர லேகா


அதிகாரி வீட்டு

வாதுகையில்

ஒரு அவசர விண்ணப்பத்தோடு

மணி அழுத்தி

நான் காத்திருக்க

கதவுக் கண்ணினுள்

ஒரு கண் தெரிந்தது.

என் பின்னே வந்தவனின்

இரங்கல் குரல் கேட்டுத்

திறந்தது கதவம்.

இரங்கியவனுக்குப்

பிச்சையிட்டபின்

எனை நோக்கி,

‘அப்பா அகத்தினுள் இல்லையே ‘

எனக் கூறிய

அதிகாரியின் வாரிசு,

வேகமாய்க் கதவடைத்து

வீட்டினுள் மறைந்தது.

அடைத்த கதவானால் என்ன ?

அதனுள் வாரிசு மறைந்தால் என்ன ?

என் காட்சியில் தெள்ளெனத் தெரியுது,

அதிகாரி அகத்தினுள்ளேயே இருப்பது.

Series Navigation

சித்திரலேகா

சித்திரலேகா