வாழ முற்ப்படுதல்….

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

நாவாந்துறைடானியல்ஜீவா

“ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்…. ?”

அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி உடைந்த குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான்.

“ஒன்றுமில்லை கனிமொழி” என்றான்.

“இப்படித்தான் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எத்தனை நாளைக்குத் தான் இந்த அாியண்டத்துக்குள்ள வாழ்வது. இரவு பகலாய் கண்விழித்து மாடாய் உழைத்தும் உங்களுக்கு இந்த நிலை… ஒரு நாள் இரண்டு நாள்ளெண்டல்ல நித்தமும் இதே கூத்தாகத்தான் இருக்கு. ஏன் நீங்க அழுகிறீங்க எண்டு எனக்குத் தொியாதோ…. நேற்று உங்கடஜயா பேசினதை நினைச்சுத்தான் கவலைப்பட்டு அழுகிறியள்….”

“இல்லையம்மா…”

கனிமொழியை சாந்தன் அம்மாவென்று தான் அழைப்பது வழக்கம். அவள் ஆழ்மனதில் ஆழமாக பதி

வாகிய எண்ணங்களுக்குள் சுழன்றடித்தது மனம்….ஒவ்வொரு நிகழ்வாய் மலர்கோத்து மகிழ்ந்தது. தன்னை அம்மா என்று அழைத்ததை நெஞ்சில் பசுமை நினைவுகளால் நிறைத்தாள்.

“என்னை அம்மா என்று ஏன் அழைக்கிறீயள.;.. ?”

கனிமொழி அடக்கமான குரலில் அன்று கேட்டதற்கு@

சாந்தன் சொன்னான்.

“நான் உங்களை என் அம்மாவுக்கு நிகராக நினைக்கிறேன்;அதனால்தான்;….

உங்களைப்பிாியவேண்டி வந்தால் என்னால் உயிர்வாழ முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களைப் பிாிந்த வாழ்வு எனக்கு வாழ்வாய் இருக்காது. அது ஏதோ உயிரற்ற உடலாய் இருக்கும”;.

“நானும் அதே போல்;தான் நான் உங்களை அத்தான் என்றே அழைக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அம்மா, அப்பா, கடவுள் எல்லாம் நீங்கள் தான்…”.

கனிமொழி சொல்லும் போதே கண்களில் ஈரக்கசிவுகள். அன்றொரு நாள் கதைத்த அந்நிகழ்வை இதயத்தில் இருப்பாய் இருத்திவிட்டாள்.

தன் கணவன் சாந்தன் எவ்வளவு முரண்பாடுகளும் தங்கள் பெற்றோருடன் ஏற்பட்டபோதும் தன்மீது கொண்ட அன்பில் சிறு மாற்றமும் இல்லாத வாழ்வை நினைத்து பெருமைப்பட்டாள். அவள் சாந்தனைப்பற்றி கோர்;த்து வந்த வாழ்வு நிறைவாகத் தான் அவளுக்குக் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் அவள் எதிர்பார்த்ததை விட@ ஆயினும் தன் கணவரை சுடுசொல்லால் கொடுமைப்படுத்துவதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.

கொழும்பில் வருடக்கணக்கில் நிற்கும் வரை லொட்சுக்கு காசும் சாப்பாட்டக்கு பணமும் பிள்ளை தான் அனுப்ப வேண்டும். ரெலிபோன் எடுக்காட்டியா அவர் வாங்குகின்ற பேச்சு கொஞ்சநெஞ்சமா ? சாி மாமா படிக்கவைத்தார். பிள்ளையை வளர்த்தார் இல்லையெண்டு சொல்லேல. அதற்காக பிள்ளையை இப்படியுமா கஸ்ரப்படுத்தவேண்டும். குடிக்கிறததுக்கு காசு கொடுக்கேல்லை எண்டால் வெல்பெயாருக்கு அடிப்பனடா எண்டும், தொட்டதற்கும் பட்டதற்கும் தன்னைப்பார்ப்பதில்லை எண்டும் தான் குறை. நான் வந்து மூன்று மாதத்திலேயே என்னென்ன காரணமெல்லாம் சொல்லி வெல்பெயார் எடுக்கத்தொடங்கிட்டாங்க. இனியாவது பாவம் அவங்க இளம் குடும்பம் வாழட்டும் எண்டு விடுவதும் கிடையாது.போகவர ஒவ்வொரு குத்தல் கதை சொல்லி அழவச்சிடுவாங்கள். கனிமொழி மனதால் நினைத்து திட்டித்தீர்த்தாள்.

“கனிமொழி! யென்னம்மா.. ?

சாந்தனின் அமைதியான குரல் கேட்டு சோகம் தேங்கிய விழியோடு நிமிர்ந்தாள். கண்குவளைக்குள் இருந்து கண்ணீர்த் துளிகள் சித்திரம் வரைந்தது. கெஞ்சும் கண்கள் பாிதாபமாய்ப் பார்த்து@

“என்னதான் இருந்தாலும் உங்கடஐயா இப்படி பேசியிருக்கக் கூடாது…. தண்ணீ மூக்கு முட்ட போட்டா காரணமற்ற கொழுவல் போடுவது உடலோடு ஊறிப்போயிற்று உங்கட ஐயாவுக்கு..”. சொல்லிக் கொண்டு கனிமொழி அழுதாள்.

சாந்தன் மனதைத் தேற்றுவதற்காக கனிமொழி பக்கத்தில் நெருங்கி கண்ணீரைத் துடைத்தான். அவள் சாந்தன் மார்பில் சாய்ந்து தேம்பித்தேம்பி அழுதாள்.

“அழகைதான் வாழ்க்கையா…. ?”

அவன் வலக்கரம் கொண்டு தலையை தடவிக்கொடுத்து குழம்பியிருந்த மயிர்களை நீவி விட்டான். அவனுள்ளும் அழுகை தேங்கி நின்றது. ஆயினும் அவன் அழவில்லை. தன் மனதை தேற்றினான்.

“அத்தான் நீங்கள் என் நெஞ்சோடு சாயும் போது ஒரு சுகம் எனக்கு வருமே அந்தச் சுகம் எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். என் மார்பில் உங்கள் தலை புதைத்து என் முகத்தை அண்ணார்ந்து பார்ப்பீர்களே….அந்த பார்வை எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரையில் உங்களை கண்கலங்க விடமாட்டேன். எனக்கு எல்லாம் நீங்கள் தான் எண்டு தான் கனடா வந்திருக்கிறன். அதே போல் தான் உங்களுக்கு எல்லாமே நான் தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு காய்ச்சல் வந்தால் கூட என்மனம் தாங்காமல் தவிக்கிறது. அந்த காய்ச்சல் எனக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை என்று கூட நினைப்பேன். சில வேளைகளில் உங்கள் மனம் படும் வேதனையை என்னால் பார்த்து சகிக்க முடியாமல் இருக்கிறது”.

“கனிமொழி….”.

“என்னுங்க… ?”

“இப்படி பொியவர்த்தையெல்லாம் சொல்லி என்னைக் கொல்றீங்களே….”

ஒரு கணம் கனிமொழியின் முகத்தை கீழ்நோக்கி பார்த்தபோது@ அவளின் கீழ்த்தாடையோடு மோதுண்டு நின்றது சாந்தனின் முகம்.

“உங்க மூக்கு அழகாயிருக்கு….”. அவன் எதையோ சொல்ல நினைத்து இப்படியொரு வார்த்தையைப் போட்டான். கனிமொழியின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆயினும் அவள் எந்தவித அசுமாத்தமும் இல்லாமல் அவள் முகம் வாடிக் கிடந்தது.

கனிமொழி நீங்க கொழும்பில் நிற்கும்போது ரெலிபோனில் ஒரு நாள் சொன்னது நினைவிருக்கா…. ?

“எதைப்பற்றியுங்க… ?” நிறைய நீங்க கதைச்சனீங்க. எதுவெண்டு தொியல.. ?”

“நம் குழந்தையை என்னால் சுமக்கமுடியுமென்டால் நானே சுமப்பேன் என்று சொன்னேனே நினைவிருக்கிறதா ?”

“ஓமொம்…. அதையேன் இப்ப நினைவுபடுத்திறீங்க ?”

“நீங்க சொன்னேங்க பெண்குழந்தை எண்டால் ஐந்து மாதம் நீங்கள் சுமப்பதாவும் ஐந்து மாதம் என்னையும் சுமக்கச்சொன்னீங்க. ஆண் குழந்தையென்றால் பத்து மாதமும் நீஙகளே சுமப்பதாக சொன்னீங்க. ஆனால் பெண்குழந்தை தான் நமக்குப் பிறந்திருக்கு ஆயினும் நீங்க தான் பத்து மாதமும் சுமந்து பெற்றுருக்கிறீங்க. அப்பவே கேப்பமென்டு மறந்து போனேன்.ஏன் பெண் குழந்தை பிாியம்மில்லிய ? சீதனம் கொடுக்கவேண்டும் என்டதற்காகவா ?”

“அப்படி நான் நினைக்கேலேயங்க.எனக்கு உங்களைப் போல குணத்தோடு ஒரு ஆண் குழந்தை முதலில் வேண்டும் பிறவு எப்படிப் பிறந்தாலும் பருவாயில்லங்க.”

“ஏனுங்க உங்களைப் போல் பெண்@ உங்களைப் போல குணத்தோடு பிறந்தால் சாியில்லையாங்க ?”

சற்றும் எதிர்பாரத பதிலை கேட்டு அவள் முகத்தில் மந்தகாசம் பூத்தது.

“இப்படியே கதையைச் சொல்லி சொல்லி என்னை சிாிக்க வைச்சு விடுவீங்க… நான் தான் உங்கள் மனக்கவலையைத் தீர்க்க மருந்து என்னும் கண்டுபிடிக்கவில்லையே ?” என்றாள்.

“ே;வலைலக்கு போவதற்கு முதல் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு வேலைக்கு அனுப்பின பின்தான் நான் தேனீர் கூட குடிப்பேன். நீங்க வேலைக்கு போன பிறகு@ நான் நானக இருப்பதிலை.எப்போது நீங்;க வருவீங்க என்று எதிர்பார்த்தபடியே என் மனம் துடித்துக் கொண்டிருக்கும். என் கண்காண உங்க கண்ணில் தூசி கூட விழவிடமாட்டேன். அந்தளவு உங்கள் மீது கண்ணும் கருத்துமாக இருப்பேன்.”

“மெய்தானா…. ?”சாந்தன் கேட்டான்.

“ஓமுங்க…. உங்களை நம்பித்தானே கனடாவே வந்தனான்.உங்களைத்தவிர எனக்கு யாரு இருக்கிறாங்க…. ?உங்களைச் சுத்தித்தானே என்னுடைய உலகத்தை வளைச்சுப் போட்டிருக்கிறேன்.”

சாந்தன் மெல்லிய குரலில்@

“என்னால் முடிந்தவரை உங்களுக்கு வாழ்க்கைத் துணையாய் இருப்பேன். அதேபோல் நீங்கள் என் வாழ்க்கைத் துணையாக இருக்கவேண்டும். அதைவிட்டுட்டு எனக்கு வேலைக்காாியாக இருப்பதை நான் விரும்பமாட்டேன். அப்படி உன்மனதில் இருந்தால் அதை அடியோடு வெட்டியெறிந்து விடும். குடும்ப வாழ்வுக்கு அடிப்படை பூிந்துணர்வுதான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை”.

“ஏதோ பெண்விடுதலை என்றெல்லாம் கதைப்பாங்க அதையா நீங்க சொல்லிறியள் ?”

“எனக்கு அது பற்றி எதுவுமே தொியாது. ஆனால் எனக்குச் சமமாக நீ இருக்கவேண்டும். என் உயிர் நீதான் ஆனால் இந்தச் சொத்துடமைச் சமூதாயத்தில் நீ எனக்கென்று எழுதப்பட்ட சொத்தாக நான் நினைக்கல… எந்த நிலையிலும் நீ சுயமாக என்னோடு வாழ்வது பற்றி முடிவெடுக்கலாம்”

சாந்தனின் அப்பழுக்கற்ற மனதின் வெளிப்பாட்டை ஆமொதிப்பது போல் தலையசைத்தாள்.

வைகறைப்பொழுதில் கண்சிவக்கச் சிவக்க எழும்பி அரையும் குறையுமாக அவசரப்பட்டு வேலைக்கு ஓடி அந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலைக்கு பஸ் எடுத்து ஓடி உடலைத் திண்ணும் இரவு@ ஓய்ந்து உறங்க கனவெல்லாம் சிதையும் வாழ்வு கரையும். சாந்தனுக்கு கனிமொழியின் இருப்புத்தான் அவன் மனதின் காயங்களுக்கு செப்பனிட்டது. அவளின் வருகையால் தான் தாய் மண்ணில் வேரோடிய காதல் கொடி கனடாவில் பூத்துக் குழுங்கியது.கனிமொழியை பார்க்கும் போது ஒரு ரோஜாவனத்தைப் பார்க்கின்ற அழகு சாந்தனுக்குள் எழும். ஏதேனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது கூட சாந்தனை உதாரணமாய் சொல்லிக் கொள்வாள். கனிமொழி என்ற பெயருக்கு நூறு வீதமும் பொருத்தமானவள். தன்னைப்போலவே மற்றவர்களையம் மதித்து நடப்பவள். பச்சத்தண்ணி அப்பாவி எண்டெல்லாம் சாந்தனால் சொல்லப்படுபவள். சாந்தனின் பெற்றோருக்காக காதலையே தள்ளிவைத்து முதலில் அவர்கள் இங்கு வந்த பின் தன்னை ஸ்பொன்னசர் பண்ணச் சொல்லி வாக்கறுதி கொடுத்து@ அதன்படி அவள் நடந்தும் கொண்டவள்.சிறு பிராயம் தொட்டு கனிமொழியின் கண்களில் விழுந்து உள்சதை வரை ஊடுருவிப் பாய்ந்தவன். ஆயினும் சாந்தன் கனடா வந்து ஆறுவருடத்தின் பின்னரே கனிமொழியியை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தான்.

அவன் மனச் சுமை@ இறக்கமுடியாமல் நெஞ்சு பிசைந்து நீண்ட கனம். இருவாிலும் அடர்த்தியானமெளனம் செல் அடித்து ஒய்ந்து கிடக்கும் எனது மண்போல…அவன் இதயம் இருண்டு விசாரப்பட்டது. கண்களில் ஏதோ இனம் பூிந்த சோகம் அவனில்@ நினவுச்சூழல் ஊருக்கு போனது…

கனிமொழி!அவன் உயிாில் எழுதிய ஓவியம். கண்களின் பார்வை காதலின் முதல் விதையல்லவா! அன்று தான் சாந்தனும் கனிமொழியும் நோில் பேசியதாக ஞாபகம் சாந்தனுக்கு. ஒரே ஊர் ஒரே பாடசாலை, ஒரே தெரு சிறு வயது முதல் முளைத்த பார்வை என்றாலும் அன்று தான் முதல் பார்வை. வகுப்பறையில் கணிதபாடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்காக சாந்தனிடம் கேட்க முயன்று@ காதல் வலையில் சிக்குண்டாள். பகல் இடைவேளை எல்லோரும் வெளியில் போய்விட்டார்கள். வகுப்பறையில் சாந்தனும் கனிமொழியும் தான். தூரத்தை விலக்கி மேசைதான் இருந்தது. மெல்ல எழுந்து கனிமொழி நடந்து வந்தாள். நிலா பகலில் வந்து ஒளிதெறித்ததுபோல். அவள் நிலவா ? அல்லது நிலாதான் அவளா ?

ஒரு புன்னகை மலரோடு சாந்தனுக்குப் பக்கத்தில் வந்தாள்.

கனிமொழிதான்….

மெய்மறந்து நிமிர்ந்தான்.

“என்ன கனிமொழி” என்றான்.

வெக்கத்தால் நாணம் சிவந்த பார்வை வீச்சுக்கள். ஒரு கணம் தான்.

“சாந்தன்…. கணித பாடத்தில் ரீச்சர் சொன்னது விளங்கேல அது தான் உங்ககிட்ட கேட்கலாமெண்டு வந்தனான்…”

தயங்கித்தயங்கி உடைந்த குரலில் கேட்டாள்.

“ஏன் கனிமொழி…. விளங்கேலேயண்டால் ரீச்சர் கிட்ட கேட்டிருக்;லாம் தானே ?”

எடுத்தறிந்து பேசுவது போல் சாந்தன் சொன்னான். ஒரு மயான அமைதி அவளில். தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன்மொழிதல் தருவான் என்று வனப்புடன் இருந்த மனசு வாடிப்போனது. உள்ளம் உடைந்து@ கண்கள் உருகிக் கலங்கின.

“என்ன கனிமொழி ஒரு மாதிாியாப் போச்சீங்க. ?”

“ஒண்டுமில்ல….”

“ஒரு சிக்கல் கேட்க வந்த எனக்கு முகத்திலே அடிச்சமாதிாி பதில் சொல்லிவிட்டாங்க ஒரு பெண்ணை பூிந்து கொள்கின்ற பக்குவநிலை உங்களிடம் இருக்கெண்டு….” சொல்லி முடிப்பதற்குள்…

“சாி… சாி… என்ன சொல்லிப் போட்டேன். கொஞ்சம் பகிடியா பேச வேண்டு மெண்டதற்காக அப்படிச் சொன்னேன். அதற்குள்ளே இவ்வளவு தவறான பூிதல் உங்கள் மனதில் எழுந்து விட்டது. ஏதும் புண்பட சொல்லிவிட்டேன் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.”

“நான் உங்களை மன்னிக்கிறதா… ? என் மனதில் தெய்வமாய் வைத்து நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன். நானா உங்களை மன்னிக்கிறது.”

அடுத்த வார்த்தை சாந்தனிடம் இருந்து வருவதற்குள் வகுப்பறையை இடைவேளை மணி நிரப்பியது.அது தான் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வார்த்தைகள்.அன்று தொடக்கம் தன் மனதை பறிகொடுத்து காதல் அவனில் விழித்தது. அவன் உற்றுப்பார்க்கிற இடமெல்லாம் அவன் உழைப்பே வியாபித்துக் கிடக்கிறது. தொடர்மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரு அறைகொண்ட வீடு தான் ஆயினும் அவன் இரவும் பகலும் உழைத்தவையெல்லாம் தன் தாய், தகப்பன், சகோதரா;கள் என்றே கரைந்து போன கனேடிய டொலர் ஒவ்வொன்றும் அவன் மனதுக்குள் முண்டியடித்து முண்டியடித்து நேற்று நிகழ்ந்தது போல் பின்னல் கொடியாய் படர்ந்தது. இடி மின்னலாய் நெருப்புடன் நெஞ்சில் இறங்கியது.

இரவு கண்விழித்து@ விழிப்பின் அசதி அவனில்….சற்று கனிமொழியின் மடியில் கண்மூட@

“டொக்…டொக்….டொக்….”என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.கனிமொழியின் மடியிலிருந்து எழுந்தான்.

“கனிமொழி ஒழும்பி கதவைத்திறந்து விடுங்கோ”

அவள் கேட்டும் கேளாதது போல் இருந்தாள்.

“யாருமா… ? உங்கட ஜயாவும் அம்மாவும்தான். கோயிலுக்கு போயிற்று வருவினம். அவயிட்ட திறப்பு இருக்குத்தானே திறந்து வரட்டும்..ஜக்கட்டுக்குள்ள இருக்கிற துறப்பை எடுத்து திறக்க பஞ்சியாக்கும்…”

மீண்டும் டொக்..டொக்.. என்ற சத்தம் கேட்டது.

கனிமொழி எழுந்து கதவைத் திறக்கவில்லை. அவர்களே திறந்து உள்ளே வந்தார்கள்.உள்ளே வந்த வேகம் வித்தியாசமாக இருந்தது.நடையில் புதிய தென்பு முளைத்தது சாந்தனின் அம்மாவிற்கு.மனதை அழுத்திக் கொண்டு கண்களில் தீ பரவ முகத்தில் கோபத்தின் கீறல்கள். ஏதோ சாந்தனின் அம்மா முனகினாள்….

அவ்வளவும்தான்@ கனிமொழிக்கு நெஞ்சிலிருந்து நெருப்பாறு பீறிட்டு எழுந்தது போல் என்று மில்லாதவாறு கோபம் வந்தது. ஆயிரம் ஆயிரம் கனவுகளின் சிதிலங்கள் அவள் மனதில் இருந்து உடைந்து@ பனிப்படலமாய் உறைந்து இறுகியது.என்றெனும் இல்லாத போக்கில் அவள் தன்னை மாற்றிக்கொண்டாள்.

இது தற்சயலாக எழுந்த நிகழ்வா ? இல்லை தானாக உள்ளுக்குள் விதையாகி மலர்ந்ததா ?

எப்படியோ அவள் கோபம் கொண்டாள்.

“மாமி நீங்க நினைக்கிற மாதிாி என்ர புரசன் நோஞ்சாண்டியில்ல. அவர் வெட்கத்திற்காக வாயயை மூடிக்கொண்டிருக்கிறார். உங்கட எளியந்தனமான வார்த்தையெல்லாம் கேட்டு எங்களுக்கு வாழவேண்டிய தலையெழுத்தல்ல வீட்டுப்பிரச்சினைகள் வெளியில் தொிந்தால் வெட்கம் என்டதற்காக மெனமாய் வாழ்கிறோம்;;.இனிமேல் அவரைப் பற்றி ஏதேனும் கதைத்தால் நடக்கிறதே வேற~~என்றாள் கனிமொழி

அவ்வளவும்தான்.. வந்தவர்கள் வாயடைத்துப்போய் நின்றார்கள்.

(முற்றும்)

daniel.jeeva@rogers.com

Series Navigation

வாழ முற்ப்படுதல்.

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

நாவாந்துறை டானியல் ஜீவா