வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

முத்துபாரதி


(பாரதி இலக்கிய சங்கத்தில் சி. க நினைவரங்கில் வாசிக்கப் பட்டது )

தமிழக கலை இலக்கிய கலாசார தளங்களில் நிலவும் பயங்கர கூச்சல்களுக்கிடையே மாறுபட்ட கருத்தாக புதிய கலாச்சார தளங்களை அமைக்கும் நோக்கில் பல சிறு பத்திரிக்கைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

சிறு பத்திரிக்கைக்கு என்ன வரையறை எனத் தெரியவில்லை பக்கங்களை வைத்தா ? வாசகர் வட்டத்தை பொறுத்தா ? ஆனால் அவைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சில நேரங்களில் சூறாவளியாக அடிக்கின்றது. என்றாலும் கும்பல் கலாசாரமும், புதிய இஸங்கள் என்று புரியாமல் எழுதுவதுதான் அறிவாளித் தனம் என்ற நிலைப்பாட்டில் இயங்குவதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் புதிய பரிமாணங்களை தமிழில் தருவதற்காக புதிய வரவாக ? வானகமே வையகமே ? வந்துள்ளது.

படிக்கக் கிடைத்த இரண்டு இதழ்களில் இந்த சிற்றிதழ் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளி வருவது பாராட்டத் தக்கது ஆரோக்கியமான சுற்றுச் சூழல் பற்றிய அக்கறைதான் இந்த சிற்றிதழில் ஆதாரம். பத்திரிக்கை வெளியீடு என்பது வியாபாரம் அல்லது சுய விளம்பரமாகிக் போன சூழ் நிலையில் லாப நோக்கில்லாமல் இலவச இதழாக வெளி வருகிறது. சிறு தொகையை சந்தாவாக நிர்ணயம் செய்தால் தான் படிப்பவர்களுக்கு அக்கறை எற்படும்

வைகை செல்வியின் ? இது நம்ம பூமி ? பொறுப்போடு எழுதப் பட்ட விழிப்புணர்வு தலையங்கம். சாதியில்லாத தமிழ் சமுதாயம் நிலம் சார்ந்த பாகுபாடு பின் வந்த பக்தி மார்க்கம் என தமிழனின் கலாசார வரலாற்றை வாழ்த்து மடலாக பிரசுரமாகியுள்ள மாலனின் கடிதம் இளைய தலைமுறைக்கான செய்தியாகும்.

பிளாஸ்டிக் பைகளை தின்பதால் தான் ஐந்து வயது குட்டி யானைகள் இறந்து போகின்றன என்ற திருப்பூர் கிருஷ்ணனின் செய்தி அதிர்ச்சியடைய வைக்கின்றது. நொய்யலாறு கதையைப் போல இயற்கை சார்ந்த கதைகளும் ஆழமாகவும் அழகாகவும் வர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் அதிகம் தொடாத பகுதியாக சுற்றுப் புறச் சூழல் உள்ளது அந்த குறையை வானகமே வையகமே நிறைவு செய்ய வேண்டும். தியோடர் பாஸ்கரனின் நேருக்கு நேர் பேட்டியில் தண்ணீரின் பயன்பாடு பற்றி பேசும் போது மற்ற காரணங்களைப் போல கோக், பெப்சி பாணங்களுக்காக தண்ணீரை சுரண்டுகின்றார்கள் எனப் பதிவு செய்துள்ளார்.

தாராள மயமாக்களில் கொடிய தாக்குதல் தான் இந்த தாமிரபரணி தண்ணீர் கொள்ளை ?! பல இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடினாலும் தண்ணீர் சுரண்டல் தொடர்கிறது. இது போகிற போக்கில் பதிவு செய்கின்ற விசயமல்ல மக்கள் இயக்கமாக மாற்றப் பட வேண்டிய பிரச்சனை

ஓசோன் குடையில் துளைகள்

கட்டுரையை படிப்பவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ; செய்ய வேண்டும். ஓசோன் கதிரியக்கமும் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம் என்பதை சாதாரண ஜனங்களுக்கும் சொல்ல வேண்டும். CFC Chloro pluoro corbon என்ற பொருட்களால்தான் ஓசோன் பாதிப்படைகிறது என்ற செய்தி மட்டும் உள்ளது.மக்கள் அவற்றை எப்படி தவிர்ப்பது என்பதை பட்டியலிட்டு வரும் இதழ்களில் எழுதலாம்

இயற்கை ஒன்றுக் கொண்டு இணையாக இசைத்து அமைக்கப் பட்ட நுட்பமிகுந்த மிகச் சிக்கலான ஒரு இயந்திர அமைப்பு போன்றது. இவ்வமைப்பில் ஒரு சிறு கல்லை அசைத்தாலும் முழு அமைப்பே கட்டுக் குலைந்து சமநிலை தவறிச் சிதறி விலகி வீழ்ந்து போகலாம். உதாரணமாக மலை வாழ் மரங்கள் வெட்டப் படுமானால் நீர் ஊற்றுக் ; கண்கள் அடைக்கப் படும் . நிலத்தடி நீர் நிலைகள் வறண்டு வற்றிப் போகும் ஆறுகள் கலங்கிச் செந்நீரால் பாய்ந்து நம்மை எச்சரிக்கும் . வெள்ளமான நீர் அழிபாட்டுக் கருவியாகி பயிரையும் உயிரையும் மாய்க்கும் மண் மேடிட்டுப் போய் கப்பல்களை வர வொட்டாமல் தடுத்து வாணிபம் தடையாகும் இந்த சூழ்நிலையில் தான் இயற்கையின் எல்லாப் பொருள்களும் மற்ற எல்லா ப்பொருள்களையும் பாதிக்கின்றன என்னும் உண்மை வெளிப்படுகின்றது இதுவே இயற்கையின் ( சமத்துவம்) சமன் செய்யும் ஆற்றல் ? எனப்படும் இவ்வாறு சங்கிலித் தொடரால் இயற்கை பின்னி பிணைந்துள்ளது எனவே வரும் இதழ்களில் மலைகள் காடுகள் ஆறுகள் கடல் இன்னும் உள்ள இயற்கை கூறுகளைப் பற்றி சிறப்பு வெளியீடே கொண்டு வரலாம்

சம்பந்தப் பட் ட நிபுணர்களிடம் கட்டுரைவாங்கி பிரசுரித்தால் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் அந்த பணியை வானகமே வையகமே தொடங்கியுள்ளது என நம்பலாம்.

—-

mathibama@yahoo.com (மூலம் பெறப்பட்டது)

Series Navigation