திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வளர்ச்சி

This entry is in the series 20060113_Issue

புகாரி


வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்
காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்
என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை

சிந்தனைத் துளிகள்
சொட்டச் சொட்ட
அனுபவ ராகங்கள்
கேட்கக் கேட்க
ஞானப் பல்
முளைக்க முளைக்க

நிம்மதி செத்துப் போய்…
நித்திரை அற்றுப்போய்…
விரக்தி ரொம்பிப்போய்…

அப்பப்பா
இது என்ன வாழ்க்கை
என்றே கருகிய என்னிடம்

மனைவியின் மடியில்
கொஞ்சம்
மகளின் மடியில்
கொஞ்சம்
பேத்தியின் மடியில்
கொஞ்சம் என்று
நழுவிய தாய்மடி மெல்ல
மீண்டும் மலர்ந்ததில்

முதிர்ந்த இந்தக் கூட்டுக்குள்
புத்தம் புது மழலை
பூரணமாய் வந்து குடியேற

அர்த்தமான நிம்மதி
ஆனந்தமான கண்ணீர்
அவசரமில்லாத புன்னகை

அன்புடன் புகாரி

buhari@gmail.com

Series Navigation

About புகாரி

புகாரி

View all 102 articles →

வளர்ச்சி

This entry is in the series 20020330_Issue

புஹாரி, கனடா


வெறுமனே
காலிப்பாத்திரமாய்
அனுபவ வீணைகளை
மீட்டிப் பார்க்காத
பிஞ்சு விரல் நுனிகளுடன்
காலப் பனிக்கற்கள்
கரைந்த கணங்களில்…

என்னில்
தெளிந்த நீரோடையாய்
வாழ்க்கை….

பின்பெல்லாம்
எனக்குள் –

சிந்தனைத் துளிகள்
சொட்டச் சொட்ட….

அனுபவ ராகங்கள்
கேட்கக் கேட்க….

ஞானப் பல்
முளைக்க முளைக்க….

நிம்மதி
செத்துப் போய்…

நித்திரை
அற்றுப்போய்…

விரக்தி
ரொம்பிப்போய்…

O

அப்பப்பா…
இது என்ன வாழ்க்கை
என்றே கருகிய என்னிடம்…

மனைவியின்
மடியில் கொஞ்சம்…

மகளின்
மடியில் கொஞ்சம்…

பேத்தியின்
மடியில் கொஞ்சம்…

என்று…

நழுவிய தாய்மடி
மெல்ல
மீண்டும் மலர்ந்ததில்…

முதிர்ந்த
இந்தக் கூட்டுக்குள்
புத்தம் புது மழலை
பூரணமாய்
வந்து குடியேற….

அர்த்தமான
சாந்தம்…!

ஆனந்தமான
கண்ணீர்…!

அவசரமில்லாத
மந்தகாசம்…!

***
buhari2000@hotmail.com

Series Navigation

About புஹாரி, கனடா

புஹாரி, கனடா

View all 15 articles →