வஞ்சம்
Published March 23, 2003 • By
பசுபதி
பசுபதி

கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால்
மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? — விண்டறிவாய்
பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே
ஈமத் தழல்இரண்(டு) ஏற்று.
சின்ன நியாயமெனும் தென்றலாய்த் தோன்றிடும்;
பின்னர் பெருந்தவறாய்ப் பேய்ச்சூறைக் காற்றாகும்.
நெஞ்சகத்தில் உட்புகுந்து துஞ்சுநற்கு ணத்தைவிஞ்சும்
வஞ்சமென்னும் நஞ்சையுண்ண அஞ்சு.
~*~o0o~*~
pas@comm.utoronto.ca