வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
ராம்ப்ரசாத்

அரும்புகையிலேயே
வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
வாசங்களின் சமத்துவங்களை
புறந்தள்ளி விடுகின்றன…
வாசங்களின் சமத்துவங்களை
ஏற்கமுடியாதென வாதம்
செய்கின்றன…
வாசங்களுக்கப்பால்
மொழியை பிரதானமாக்க
முயல்கின்றன…
வாசங்களைத் தேடி
அலையும் சுரும்புகளுக்கு
மொழி தேவையற்றதாகிவிடுகிறது…
வாசங்களின் விதிகளின்
ஆளுமைகளை பூக்களே
முடிவு செய்கின்றன…
– ராம்ப்ரசாத்