This entry is in the series 20020917_Issue


தேவையான பொருட்கள்

2 கோப்பை ராகி மாவு

1 வெங்காயம், சிறியதாக நறுக்கிக்கொண்டது

2 மேஜைக்கரண்டி வெட்டிய கொத்துமல்லி இலைகள்

4 மேஜைக்கரண்டி துருவிய புதிய தேங்காய் (அல்லது 2 மேஜைக்கரண்டி காய்ந்த துருவிய தேங்காய்)

1 பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கிக்கொண்டது

உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கிக்கொள்ளவும்

இதனை கொத்துமல்லி, உப்பு, தேங்காய், ராகி மாவு ஆகியவற்றோடு சேர்த்துக் கலக்கி தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும்

அரை மணி நேரம் ஊறவிடவும்.

இதனை தனித்தனியே தட்டையாக உருட்டிக்கொள்ளவும், சப்பாத்திகள் போல. ஒரு பிளாஸ்டிக் பேப்பரை வைத்து அதன் மீது சிறிய மாவு உருண்டை வைத்து அதன் மீது இன்னொரு பிளாஸ்டிக் பேப்பரை வைத்து தேய்க்கலாம்.

நடுத்தர வெப்பத்தில், தோசைக்கல்லை வைத்து ராகி ரொட்டியை போட்டு எண்ணெய் சுற்றிலும் நடுவிலும் ஊற்றி வேகவைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும்.

Series Navigation