‘யோகம் தரும் யோகா

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

முனைவர்,சி,சேதுராமன்


உடலும் உள்ளமும் ஒருங்கே நலமுடன் வாய்க்கப் பெற்றோரே நல்வாழ்க்கை வாழ்பவராவார். இந்த வளவாழ்வை யோகா என்று வழங்கப்படும் யோகமுறைகள் நமக்கு நல்குகின்றன.மேலும்,பாரத நாடு உலகிற்கு வழங்கிய கலைச் செல்வங்களுள் ஒன்று “யோகா”. இவ்யோகா மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் வாழக்கை முறையாகவும் திகழ்கிறது.ஆய கலைகள் அறுபத்து நான்கு என்று கூறுவர். அவ் அறுபத்து நான்கு கலைகளுள் யோகக் கலையும் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலங்கு நிலையில் இருந்த மனிதனை இறைநிலைக்கு உயர்த்தும் வழி முறையே யோக நெறிகளாகும்.

இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப் பேற நினைத்துத் தொழில்களை வளர்த்தான், ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தோல்லைகளும் தொடர்ந்தன, வாழ்வில் அமைதி பேற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச் சென்று அலைந்தான், அவன் தேடிய அமைதி கிட்டவில்லை. ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று முனிவர்கள் தவம் இருந்தார்கள். அவ்வாறுதவம் செய்த முனிவர்கள் மன அமைதியைக் கண்டனர், அம்முனிவர்கள் தாம் மட்டுமின்றி, இவ்வுலக மக்கள் வாழ்வில் அமைதியும், இன்பமும் காண வேண்டும் என்று விரும்பினர், அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக வாழக்கையாகும். உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் உன்னதமான கலைகளுள் ஒன்று யோகக் கலை என்று தோன்றியது? அ·து நமது நாட்டில் தோன்றியதா? அல்லது மேலைநாட்டிலிருந்து வந்ததா? என்ற பல வினாக்கள் நமது மனதில் எழுகின்றன.

யோகா என்பது நமது நாட்டில் தோன்றியது. நமது முன்னோர்கள் நமக்குத் தந்த செல்வமாக இக்கலை விளங்குகிறது.யோகா என்று தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற இயலாததாக உள்ளது, வேதகாலத்திற்கும், ஆ¡¢யருக்கும் முற்பட்டது இவ் யோகக் கலை என்பர். சமண ,பெளத்த மதர்கள் கொடுத்த கலைதான் யோகக் கலை என்று பலர் மொழிகின்றனர், புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம புத்தர், சமண மதத்தைத் தோற்றுவித்த வர்த்தமான மகாவீரர் ஆகியோ¡¢ன் தோற்றம் யோக நிலையில் சித்தா¢க்கப்படுகிறது. புத்ததா¢ன் சிலையும் மகாவீரா¢ன் சிலையும் யோகத்தில் அமர்ந்த நிலையில் அனைத்து இடங்களிலும் காணப்படுவது நோக்கத்தக்கதாகும்.இதனை வைத்தே யோகக்கலையைத் தோற்றுவித்தவர்கள் பெளத்த,சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறத் தொடங்கினர்.

சிந்துச் சமவெளி நாகா¢கத்தில் மொகஞ்சதரோ,ஹரப்பா போன்ற பழைமை வாய்ந்த நகரங்களின் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பசுபதி கடவுள் சிலை ஆசன நிலையில் அமைக்கப்பட்டு அக்கால மக்களால் வணங்கப்பட்டு வந்துள்ளமையை வரலாற்றுச் சான்றுகள் பகர்கின்றன. மொகஞ்சதரோ அகழ்வாராய்ச்சியின்போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் களிமண்ணால் செய்யப்பட்டஆசன நிலையில் அமர்ந்துள்ள சிலைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜான்மார்சல் என்ற தொல்பொருள் ஆய்வாளர் கூறுகிறார். மாஸன்ஓரல் என்ற பிரெஞ்சு அறிவியல் அறிஞர் “யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிடுகிறார்.

சிவபெருமானை யோகியாகக் கருதி சைவசமயத்தவர் வழிபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இது சமய வாழ்க்கையில் யோகாவின் உன்னதநிலையைக் காட்டுகிறது. சிவபெருமானை யோகீஸ்வரர் என்று வழங்குவதும் நினைத்தற்குறியதாகும். இச்சிவபெருமானே முனிவர்களுக்கு யோக நெறிகளைக் கற்பித்ததாகவும் கூறுவர். சிவன் ஞான குருவாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வது தட்சிணாமூர்த்தி வடிவம் என்று குறிப்பிடப்படுவது குறிப்பிடற்குரியது. சைவ ஆகமங்கள் தவம் செய்வது பற்றி பல்வேறு நெறிகளைப் பகர்கின்றது. இவ்வாகமங்கள் சிவயோகம் என்று குறிப்பிடுகின்றன.சிவன் பத்மாசன நிலையில் இருப்பதனையே சிவயோகம் என்று தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இறைவனை அடையும் நெறிகளுள் யோக நெறியும் ஒன்றாகும். மாணிக்கவாசகர் இவ்யோக நெறியில் இருந்து இறையருள் பெற்றார் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும். சிவவழிபாடு தொன்றுதொட்டு இருந்துள்ளமையால், யோகம் என்பது தொன்றுதொட்டு இருந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் பகவத் கீதை ராஜயோகம், கர்மயோகம், எனப் பல்வேறு யோகங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆனால் அப்பகவத்கீதை கூறும் யோகநெறிகள் வாழ்க்கையில் மனிதர்கள் பின்பற்றவேண்டிய வாழ்வியல் நெறிகளாக அமைந்துள்ளன எனலாம்.

யோகா இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக விளர்குகிறது. மனிதனின் உடல் மற்றும் உளத்தோடு தொடர்புடைய செயல்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அறிவியலாக யோகா விளங்குகிறது. யோகாவின் தோற்றத்தை உறுதியாகக் கூற இயலாது. யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல. யோகா வேதகாலத்திற்கும் (1500-1000 B.C) பிராமனிசத்தற்கும் (800-600 B.C) முன்னர் தோன்றியது என்ற ராபர்ட் லின்சன் என்ற பிரெஞ்சு தத்துவ மேதை கூறுகின்றார். கி,பி, 300-200 ஆண்டுகளில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் யோகாவின் தந்தை என அழைக்கப்படுகின்றார், ஆனால் யோகாவைக் கண்டுபிடித்தவர்கள் எவர் என்று அறுதியிட்டு உரைக்க முடியாது. பதஞ்சலி முனிவருக்கு முன்பே நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக யோகாவைப் பயிற்சி செய்திருக்கின்றனர்.

பதஞ்சலி முனிவர் யோகா குறித்த செய்திகளை நூல் வடிவில் தொகுத்தளித்தார். தாம் தொகுத்தளித்த அந்நூலுக்கு அவர் ‘யோக சூத்ரா’ என்று பெயா¢ட்டு வழங்கினார். ‘யோகா பற்றிய அனைத்து நூல்களிலும் இதுவே முதன்மையும் சிறப்பும் பெற்றது என்பர். இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமாதி பதா, சதானா பதா,விபூதி பதா, கைல்யா பதா என நான்கு பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது. இது குறித்த கருத்து வேறுபாடுகளும் நிலவிவருவது நினைத்தற்கு¡¢யதாகும். பதஞ்சலி முனிவர் காலத்தில் வாழந்த திருமூலர் சிவயோகியாக வாழந்து யோக நெறிகளை விளக்கும் “திருமந்திரம்” எனும் நூலை உலகிற்கு அளித்தார். இ·து பாடல் வடிவில் எழுந்த யோக நெறிகளை விளக்கும் நூலாக அமைந்துள்ளது.
யோகம் சொல்லும் பொருளும்

யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம், இச்செயல் மூலமாக விலங்கு நிலையில் இருந்த மனிதன் உயர்ந்து கடவுள் நிலைக்குமாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன் சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.

யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என ஆறுவிதமான பொருள்களைக கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது. யோகநித்திரையில் உள்யோரை அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர். “யூஜ்” என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே “யோகா” என்ற சொல்லாகும். வடமொழியில் உள்ள’யூஜ்’ என்ற சொல், ஒன்றாக இணைதல்,சேருதல், கூடுதல், இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத் தருவதாக அமைந்துள்ளது.ஜீவாத்மா பரமாத்வுடன் ஒன்றிணைவதனை வடநூலார் யோகா என்கின்றனர்.

தமிழில் இதனை தவம் என்று குறிப்பிடுவர். ஜீவாத்மா என்பது “பசு”-உயி¡¢னைக் குறிக்கும். பரமாத்மா என்பது “பதி” -இறைவனைக் குறிக்கும்.உயிராகிய பசு, பதியாகிய இறைவனுடள ஒன்றாக இணைவதையே தவம் என்று ஆன்மீகத்தில் ஞானிகள் கூறுகின்றனர். ‘யோகா’ என்ற வடசொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல்லாக, ‘தவம்’ என்ற சொல்அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் வழங்கப்பட்டு வரும் யோகம் என்பது தமிழில் தவம் என்று வழங்கப்பட்டு வருவது நோக்குதற்கு¡¢யதாகும். யோகம், தவம் ஆகிய சொற்கள் மனிதனின் உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளன.

மனிதனின் உடல், உள்ளம், உயிர்(ஆன்மா) ஆகியவை ஒன்றாக இணைந்து சீராகச் செயல்பட்டால் வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கின்றது. இவை ஒன்றுடன் ஒன்று இணையாது நின்று முரண்பாட்டுடன் செயல்படுகின்ற போதுதான் மனிதன் துன்பங்களுக்கு ஆட்படுகிறான். மனிதன் தமக்குள் தாமே இணைந்த பின்னர் இறைவனோடு(பரமாத்மாவோடு) இரண்டறக் கலத்தல் (ஐக்கியமாதல்) வேண்டும். இங்ஙனம் இரண்டறக்கலத்தலை உயா¢ய ஆன்மீக நிலை என்று மொழிவர். இத்தகைய உன்னத நிலையை அடையும் சாதனமாக, யோகா என்ற தவம் அமைந்திலங்குகிறது எனலாம்.

இவ்யோகம் ராஜ யோகம், கேசா¢யோகம், அட்டாங்க யோகம், சந்திர யோகம், பா¢யர்க யோகம் எனப் பலவகைப்படும், இவ்யோகஙக்கள் உடலை வளமுடன் வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது, நோயின்றி நலமுடன் வாழ்வதற்கு உறுது¨ணாயகவும் இவ்யோகம் விளங்குகிறது. யோகம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒருங்கே வலிமை தருகிறது, அதனால் யோகாவை நாம் நம் வாழ்விற்கு யோகம் தரும்யோகா என மொழியலாம்.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.