மௌனம்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

ஷம்மி முத்துவேல்


மனதோடு மௌனம்
பழக்கிப்பார்க்கிறேன்
இருந்தும் முரண்டியது
மரணக்கூச்சல் ….

சொடுக்கும் விரல் இடுக்கில்
தப்பித் தெறிக்கும்
ஓசை , ..சொல்லாமல்
மௌனம் கலைக்கும்

சுயம் அடிபடும் வேளைகளில்
ரௌத்தரம் பழகவில்லை
நான் …
மௌனம் பழக்கிக்கொள்கிறேன்
வெளியிட விரும்பா வார்த்தைகளை
நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன்

ஓசைகள்
ஓங்கி ஒலிக்கும் நேரம்
என் மௌனங்கள் அவற்றை
இரை கொள்ளும் …..

எக்காளமிடும் பார்வைகள்
அனல் தெறிக்கும் வார்த்தைகள்
என அனைத்து முயற்சிகளுக்கும்
மௌனமே உரையானது …

இனி உன் வார்த்தைகளை
நீயே புசி..
அவற்றின் மரணக்கூச்சல்கள்
துணை கொண்டு ….
நான் மௌனப் போர்வையில்
குளிர் காய்கிறேன் ….

ஷம்மி முத்துவேல்

Series Navigation