மொழி வளர்ப்பவர்கள்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

முத்துசாமி பழனியப்பன்


எங்கள் ஊரில் ஓரமைப்பு உண்டு
நல்லவை கெட்டவைகளை
நான்கு பேர் கூடி விவாதிக்கு மிடமது!

ஒவ்வொரு குழுவினரும் அவரவர் மொழியில்
தங்கள் பிரச்சினைகளை விவரித்து விவாதித்திருந்தனர்
பேசும் மொழி அறியாதோர்க்கு அது வெறுஞ் சத்தம்

செவிகள் கேட்கும் ஆனாலும் செவிடர்கள்
வாய் பேசும் ஆனாலும் ஊமைகள்
பேசும் மொழி புரியாதோரின் கோலமிது

சங்கடங்கள் தீர்ப்பதற்கான
எளிய வழிகள் அவர்களிடமும்
இருந்திருக்கலாம் – அடுத்தவரின்
ஆலோசனை நமக்கெதற்கு?

பொதுமொழி பேசத் தெரியாதவர்கள்
பேச மறுப்பவர்கள் – அவர்தம்
குழுவிற்குள்ளேயே கலந்து பேசிக்
களை(லை)ந்திருக்க வேண்டுமல்லவோ
சங்கடங்களை?
muthusamypalaniappan@gmail.com

Series Navigation

முத்துசாமி பழனியப்பன்

முத்துசாமி பழனியப்பன்