முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 04

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg)

யானைகள்:

இரவு பகலாக கண்விழித்து, கடன் பட்டு செய்த விவசாயத்தை யானைகள் கணப் பொழுதில் அழித்துவிட்டுச் செல்கின்றன. அவர்களின் வீடுகளுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்கின்றன. எனவே இவ்வாறான நடத்தைகளினால் யாருக்கும் இயல்பாகக் கோபம் வரும். கோபமடைந்த விவசாயிகளும், மற்றவர்களும் தங்களுக்குத் தொிந்த வகையில் யானைகளை விரட்ட முனைவார்கள். இதன் போது உருவாகும் யானை-மனிதன்-பிணக்கில் (human-elephant conflict) யானைகள் இறுதியாகக் கொல்லப்படும். விவசாயிகள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்த மனித உயிர்களை வளர்க்கும் பயிர்களும், மனிதா;களின் உடமைகளும், சொத்துக்களும், உயிர்களும் என்ன வகையில் “அந்த கறுப்பு பிசாசு மலையை”விட மேலானதாகிப் போனது.

யானைகளைக் கட்டாயமாகப் பாதுகாக்கத்தான் வேண்டுமா ? என்பதை நோக்குவோம். உயிாினப் பல்வகையின் தொழிற்பாடும், அவற்றின் இயல்புகளும், உயிாினங்கள் அச்சுறுத்தப்படும் நிலைகள் பற்றிய அறிவும், உயிாினங்களைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றள. இதன் காரணமாக உயிாினங்கள், க flagship, keystone, umbrella ககளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Flagship ைி இனங்கள்

இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்குாிய பிரச்சாரத்திற்காக கொடுக்கப்படும் முக்கியத்துவமாகும். இது உள்வாாி பாதுகாப்பு முறையில் ஒரு பகுதியாக பயன்படலாம். இவ்வாறான பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்கள்; அவ்வினத்தின் பாதுகாப்பிற்கு உதவுவர். எனவே இவ்வினங்கள் மக்களின் கவனத்தை கவரக்கூடிய இயல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன் இவை பொிய விலங்குகளாகவம் இருத்தல் வேண்டும் (மீனா தா;மரெத்தினம், 2005).

மீனா தர்மரெத்தினம் (2005) யின் படி, குடயபளாைி இனம் என்பது குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக இருக்கக்கூடிய தாவர அல்லது விலங்கினக் கூட்டமாக இருக்க வேண்டும். இவ்வினம் பாதுகாக்கப்பட வேண்டிய சூழற்தொகுதியில்; காணப்படவேண்டும். அடுத்ததாக, இந்த இனம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க கூடிய தன்மையையுள்ளதாக இருக்க வேண்டும். மிகமுக்கியமாக, இவ்வினம் உள்நாட்டிற்குாிய அபாய நிலையிலுள்ள இனமாக இருக்க வேண்டும். இலங்கையில் யானை கடயபளாைி இனமாக கருதப்படுகிறது. Pயனெய எனப்படும் அருகிவரும் இனம் உலக வனவிலங்கு நிதியத்தின் (றுறுகு) கடயபளாைி குறியீடாக உள்ளது. மடகஸ்கார் தீவில்; லீமர்கள் கடயபளாைி இனமாகும்;.

Keystone இனங்கள்

ஒரு சூழற்தொகுதி சமநிலையில் இருப்பதற்கு ஒரு இனம் கூடுதலான பங்கைப் பெற்றிருக்கலாம். இவ்வாறான இனம் முநலளவழநெ இனம் எனப்படும். உதாரணமாக ஐரோப்பாவில் காணப்பட்ட ஒருவகை ஆலமரங்களின் அழிவு பறவைகள், மூலையூட்டிகளின் அழிவிற்கு வழிகோலியது. இதற்குக் காரணம் வறண்ட காலங்களில் ஏனைய மரங்களில் பழங்கள் இல்லாத வேளையில் ஆலமரங்கள் பறவைகளுக்கும் சில முலையூட்டிகளுக்கும் உணவு வழங்கி வந்தமையாகும். இந்த சூழற்தொகுதியில் ஆலமரங்களை நீக்குதல் இந்த பறவைகளினதும்; முலையூட்டிகளினதும்; வாழ்க்கை வட்டத்தைப் பொிதும் பாதித்தது. எனவே இச்சூழலில் ஆலமரங்கள் முநலளவழநெ இனங்கள் எனப்படும் (மீனா தர்மரெத்தினம், 2005).

முநலளவழநெ இனங்களிற்கு மற்றுமொரு உதாரணம் முருகைக்கற்களின் கலங்களிற்குள் காணப்படும் ணழழஒயவொயடடந எனப்படும் அல்காக்கள். இவை அழியும் போது முருகைக்கற்களின் வளர்ச்சியை மட்டுமல்ல அதனைச் சார்ந்துள்ள மீனினங்கள் போன்றவற்றையும் பாதிக்கும். பொதுவாக முநலளவழநெ இனங்கள் உணவு கூம்பகத்தின் அடியிலேயே காணப்படும், உதாரணமாக தாவரங்கள். ஆனால் சில இடங்களில் உணவுக் கூம்பகத்தின் உச்சியிலுள்ள இனங்களும் முநலளவழநெ இனங்களாக தொழிற்படலாம் (மீனா தர்மரெத்தினம், 2005).

umbrella இனங்கள்

காடுகளில் காணப்படும் பொிய விலங்கு இனமொன்றை பாதுகாக்க வேண்டுமாயின் அது நடமாடும் இடம் முழுவதையும் பாதுகாக்க வேண்டும். விலங்குகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளேயே நடமாடும். இதில் கூடுதலான நேரத்தை உணவுண்ணும் இடத்திலும் உறங்கும் இடத்திலும் கழிக்கும். இவ்வாறு ஒரு விலங்கு அல்லது விலங்குக்கூட்டம் நடமாடும் இடம் ாழஅந சயபெந (வீட்டு வீச்சு) எனப்படும்.

யானை போன்ற பொிய வீட்டு வீச்சுள்ள விலங்கை பாதுகாக்க திட்டமிடும் போது காட்டின் ஒரு பொிய பகுதி ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்யும் போது இப்பொிய பகுதியில் பல சிறிய விலங்குகளின் வீட்டு வீச்சுக்களும் பல தாவரங்களும அடங்கும்;. இதனால் பொிய வீட்டு வீச்சுள்ள விலங்கினை பாதுகாக்கும் போது பல சிறிய விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறான பொிய வீட்டு வீச்சுள்ள விலங்குகள் ஒரு குடை போன்று ஏனைய தாவர விலங்குகளைப் பாதுகாப்பதால் குடை இனங்கள் (ரஅடிசநடடய ளிநஉநைள) எனப்படும். இதற்கான உதாரணங்கள் இந்தோனேசியாவிலுள்ள யானைகள், மடகஸ்காாிலுள்ள லீமர் எனும் குரங்கினம், அமொிக்காவிலுள்ள புசணைணடநல கரடி போன்றவை (மீனா தர்மரெத்தினம், 2005)..

குடை இனங்கள் பொதுவாக பொியதாகவும், மனிதா;களின் மதிப்பைப் பெற்ற விலங்குளாகவும் இருக்க வேண்டும். இரண்டாவதாக மனிதன் உபயோகிக்கும் வளங்களுடன் போட்டி போடுவதாகவும் குடை இனம் இருக்க வேண்டும். நடைமுறையில் குடை இனங்களும் அவற்றினால் பாதுகாக்கப்படக்கூடிய இனங்களும் முதலில் அடையாளம் காணப்படும். அதன் பின் குடை இனங்களைப் பாதுகாப்பதால் அதன் வாழிடத்திலுள்ள பாதுகாக்கப்படக் கூடிய இனங்களைப் பற்றிய அறிதல் வேண்டும். பின் இச்சிறிய இனங்களின் தப்பிப் பிழைக்கும் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை நேரடியாக அவதானிக்கலாம்;. இவ்வாறே குடை இனங்களைப் பாதுகாப்பதால் வேறு இனங்களும் பாதுகாக்கப்படும் தன்மையை அறியலாம் (மீனா தர்மரெத்தினம், 2005)…

மேலே குறிப்பிட்டுள்ள குடயபளாைிஇ மநலளவழநெஇ ரஅடிசநடடய எண்ணக் கருக்களின்படி யானைகள் ஒரு சூழுலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதைப் பார்த்தோம். யானைகளைப் பாதுகாக்கும்போது சிறுஉயிாினங்களையும், காட்டையும் பாதுகாக்கலாம், உயிாினங்களையும், காட்டையும் பாதுகாக்கும்போது நமது மக்களின் சூழலையும் அவர்களின் இருப்கையும் நாம் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கலாம்.

யானைகளின் பிரச்சினையை முதன் முதலாக தோற்றுவித்தவர்கள், இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்த ஐரோப்பியர்களே. அவர்களுக்கு தேயிலையும், தெங்கும், கோப்பியும் தேவைப்பட்ட போது, யானைகள் வாழ்ந்த காட்டை அழித்துச் செய்தார்கள். உலகம் எங்கணும் பரந்துள்ள பயங்கரவாத பிரச்சினைகளுக்கு அடிகோலியவர்கள் குடியேற்றவாதிகளே, பின்னர் இலாபத்தை மையமாகக் கொண்ட ஆயுத விற்பனவுக்காக அவர்கள் எாிகின்ற விளக்கில் பின்னர் எண்ணெயும் ஊற்றுகின்றனர்.

வீரப்பனின் அரண்மனையை அலங்காிக்கவோ வீரப்பனால் வெட்டப்பட்ட சந்தன மரங்களும், கொல்லப்பட்ட யானைகளிடமிருந்து பெறப்பட்ட தந்தங்களும் பயன்படவில்லை. மாறாக அவைகள் யாருக்கு பயன்பட்டிருக்கும் என்பது எங்களுக்குத் தெளிவே. பெரும் முதலாளிகளுக்குத்தான் அவைகள் பயன்பட்டிருக்கும்.

கண்டல் காடுகள்:

ஒரு நாட்டின் நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டுமானால், அங்கு உணவு, மருந்துப் பொருட்கள், உடை, எாிபொருட்கள் போன்ற அத்தியாவதசியப் பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு போக்குவரத்து ஒழுங்காக நடக்க வேண்டும். கண்டல் காடுகளும், மற்றைய காடுகளும் பாதுகாப்பு தரப்பினருக்கு பிரச்சினைகளைக் கொடுக்கும் போது, அதற்குள்ளிருந்து தாக்குதல் தொடுக்கப்படும் போது, அதன் காரணமாக பல உயிாிழப்புக்கள் ஏற்படுகின்றன.

உள்நாட்டு யுத்தம், இனப் பிரச்சினை காரணமாக காடுவெட்டி கழனி திருத்தி பயிர் செய்ய முடியாத குடியானவன், அவனுக்கு அருகிலுள்ள கண்டல் நிலத்தைத்தான் பயிர் செய்யும் நிலமாக மாற்றுவான். கண்டல் காடுகளின் மரங்களைத்தான் விறகுக்குப் பயன்படுத்துவான். நாட்டிற்கு பெருமளவான அந்நிய செலவாணியை இறால் ஏற்றுமதி பெற்றுத் தருகின்றது. இந்த இறால் பண்ணைகளுக்காக கண்டல்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டே ஆக வேண்டும். கண்டல் காடுகளும், மற்றைய காடுகளும் மனித உயிர்களைவிடவும், ஒரு நாட்டின் நிர்வாகத்தைவிடவும், ஏனைய அத்தியாவசியப் பொருட்களைவிடவும் என்னவகையில் மேலானதாகவிட முடியும்.

இனி கண்டல்காடுகளை நாங்கள் பாதுகாக்கத்தான் வேண்டுமா என்பதைப் பார்ப்போம். (இதன் பொருளாதார முக்கியத்துவத்தை முன்னைய கட்டுரைகளில் காண்க). எனவே மேலே சொல்லப்பட்ட குறுகிய இலாபங்களைவிட, கண்டல் காடுகள் எவ்வளவு உயிர்களை சுனாமி போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பாற்றி, நிலத்தை வளர்த்து, எங்களுக்கு உணவு அளிக்கிறது என்பது தெளிவாகும்.

முருகைக் கற்பாறைகள்:

உயர் பாதுகாப்பு பிரதேசம், இரவில் மீன்பிடித் தடை, உள்நாட்டு யுத்தம், இனப் பிரச்சினை போன்றவை காரணமாக தான்விரும்பியபடி தொழில் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போதுமான வருமானத்தை அடையமுடியா, முருகைக் கற்பாறைச் சூழலை அண்டிய குடியானவன் வேறு என்ன செய்வான் ?. முருகைக் கல்அகழ்வான், உடைப்பான். பின்னர் அதனைச் சுண்ணாம்பாக்கி விற்பான். அலங்கார மீன்கள் பிடிப்பான், அதன் பின் பெறுமதியான முருகைக் கல் உயிாினங்களை அகற்றுவான.; அதனையும் விற்பான். ஒரு குடியானவனின் வாழ்க்கையைவிடவும், நாட்டின் இராணுவ பாதுகாப்பையும் விடவும் முருகைக்கற்பாறைகளைப் பாதுகாப்பதற்கு என்ன முக்கியத்துவம் வந்துவிட்டது.

இந்த முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதி பாதுகாக்கப்படத்தான் வேண்டுமா ? இந்த முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதி பாதுகாக்கப்படும் போது அதனை நம்பிய, அண்டிய பெரும் எண்ணிக்கையான உயிாினங்கள் பாதுகாக்கப்படும். (இதன் பொருளாதார முக்கியத்துவத்தை முன்னைய கட்டுரைகளில் காண்க). எனவே மேலே சொல்லப்பட்ட குறுகிய இலாபங்களைவிட, எவ்வளவு உயிர்களை சுனாமி போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பாற்றி, நிலத்தை வளர்த்து, எங்களுக்கு உணவு அளிக்கிறது என்பது தெளிவாகும்.

மேலே கூறிய உதாரணங்களிலிருந்து, சில கருத்துக்களை கூறலாமென்று நினைக்கின்றேன். உள்நாட்டு யுத்தம், இனப்பிரச்சினை போன்றன பாாிய கரணங்களாக இருக்கின்றன. இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட, சூழலைப் பற்றிக் கவலைப்படாத தொழில்முயற்சிகள், உதாரணமாக இறால் வளர்ப்பையும், தேயிலை, கோப்பிச் செய்கைக்காக காடுகள் அழிக்கப்பட்டமையும் கூறலாம். இன்னொரு வகையில் இனங்கள் சமமாக மதிக்கப்படாமலும், அவர்களின் கலாச்சார மொழிக் கூறுகள் சமத்துவமின்றி மதிக்கப்படும்போது அந்த நாட்டு மக்களுடன், யானைகளும், கண்டல்காடுகளும், அதன் உயிாினங்களும், முருகைக் கற்பாறைகளும், அதன் உயிாினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன அல்லது அழிகின்றன.

நடப்பிலிருக்கும் சமாதான ஒப்பந்தத்தின் போது கண்டல்காடுகளின் பரப்பளவு மிகவும் பாாியளவில் அதிகாித்திருந்ததைக் காணலாம். இதற்குக் காரணங்களாக, உதாரணமாக மட்டக்களப்பு பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் பாதுகாப்பு தரப்பினாின் அழிப்பு குறைவடைந்ததும், மக்கள் காடுகளுக்கு செல்ல முடிந்தமையும், மாநகரசபை, கிழக்குப் பல்கலைக்கழகம், அரசுசாரா நிறுவனங்களின் முயற்சிகளுமாகும்.

உள்நாட்டு யுத்தங்களின் போது ஒரு பக்கம் காடு பாதுகாக்கப்படுவதும், இன்னொரு பக்கம் காடு அழிக்கப்படுவதும் ஒரு பொதுவான போக்காகும். சில நோக்கங்களுக்காக காடு தேவையாகவும், தேவையற்றதாகவும் ஆக்கப்படுகின்றது. இலங்கையின் முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதிகளை எடுத்துக் கொண்டால் மன்னார், பாசிக்குடா, களுவன்கேணி-ஐயன்கேணி போன்ற பகுதிகளிலுள்ளவைகளின் உயிாிகளின் பல்லினத்தன்மை அதிகமானதாகும். களுவன்கேணி-ஐயன்கேணி பகுதியில் எங்களுடைய குழு அக்ரோபோறாவில் ஒரு புது “இனம்” (கருதத்தக்க அளவில்) தைக் கண்டுபிடித்தது. இந்த உயிர்பல்லினத்தன்மை அதிகாிப்புக்கு காரணம், கடலில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான தடையும், மீன்பிடி நேரத்தடை, அருகிலிருந்த இராணுவ முகாம் போன்றவைகளைக் கூறலாம். அதற்காக உயிாினங்களைப் பாதுகாப்பதற்கு இவைகளை ஒரு சிறந்த வழியாக கருதவேண்டியதல்ல. வீரப்பன் காட்டிலிருந்த போது இந்த வகையில்தான் காட்டின் உயிர்ப்பல்லிலனத் தன்மையும் அதிகாித்துக் காணப்பட்டடது.

சமூகம், அரசியல், பொருளாதாரம் என்பன சுற்றுச்சூழல் என்ற மையத்தினை வைத்து வரையப்படும் வட்டங்களின் வெவ்வேறு பாிதிகள். மையத்தில் ஒழுங்கீனம் வரும்போது அவைகளின் சமனிலையில் குழப்பம் வரும். நாங்கள் யானைகள், கண்டல் காடுகள், முருகைக் கற்பாறைகள் போன்றவற்றை பாதுகாக்காவிடின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியாது. நாங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்காவிடின் சமூக, பொருளாதார, அரசியலை பாதுகாக்க முடியாது. எனவே யானைகள், கண்டல்காடுகள், முருகைக் கற்பாறைகள் போன்றவை சமூக, பொருளாதார, அரசியலுக்கு மிக முக்கியமானவைகளாகும்.

—-

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg)

முருகைக்கற் பாறைச் சூழற்றொகுதியே உலகில் உள்ள சூழற்றொகுதிகளில் உற்பத்திகூடியதும், உயிாினப்பன்மை கூடிய சூழற்றொகுதியாகும். ஒரு தனி முருகைக்கற் சூழற்றொகுதி மூன்றாரயிரத்தி;ற்கும் அதிகமான உயிாினங்களுக்கு ஆதாரமளிக்கிறது. உலகில் உள்ள கடல்மீன்களில் மூன்றிலொரு பங்கு மீன்கள் இச்சூழற்றொகுதியிலேயே காணப்படுகின்றன. அத்துடன் இது கரையோரத்தைப் பாதுகாப்பதிலும் மிகுந்த பங்களிப்பைச் செய்கின்றது.

முருகைக் கற்பாறைகள் கணம்; cnidaria சேர்ந்த விலங்குகளாகும். பொலிப்புக்களான இவ்வுலங்குகள் தொகுதிகளாக வாழ்கின்றன. இவைகளின் கல்சியம் காபனேற் நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதனாலேயே முருகைக் கற்பாறைகள் தோன்றுகின்றன. இதன் வளர்ச்சி வருடத்திற்கு 0.3 – 10 சென்ாிமீற்றர் வரை வேறுபடுகின்றது. பல்வேறு வகையான முருகைக் கற்பாறை இனங்கள், பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் முருகைக்கற் பாறைகளை உருவாக்குகின்றன. உதாரணம்: விரல், மேசை, இலை, மூளை வடிவங்கள். முருகைக் கற்கள் பல்வேறு வகையான பாகுபாட்டிற்கும் (classification) உட்படுத்தப்படுகின்றன.

முருகை;கற் பாறைகள் அயன வலயத்தில் வட அகலாங்கு 30 பாகைக்;;கும் தென் அகலாங்கு 30 பாகைக்கும்; இடைப்பட்ட வலயத்திற்குள்ளேயே செறிந்து பரந்திருக்கின்றன. உலகில் 60000 சதுர மைல் பரப்பில் முருகைக் கல் காணப்படுவதுடன், அவற்றுள் 60 சதவீதமானவை இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நன்கு விருத்தியடைந்த மூன்று வகையான முருகைக்கற் பாறைகள்; காணப்படுகின்றன. இலங்கையில் தென்மேற் கரையோரத்தில் அம்பலாங்கொடையில் இருந்து தெவிநுவர வரையும், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்பிட்டிய, சிலாபம், நீர்கொழும்பு, ஹிக்கடுவை, காலி, மாத்தறை, தங்காலை ஆகிய பிரதேசங்களில் முருகைக்கல் பரம்பிக்;; காணப்படுகின்றன. மன்னார் குடாவிலும், கற்பிட்டி தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் மிகவும் விருத்தியடைந்த முருகைக் கற்களைக் காணலாம். இலங்கையில், உள்நாட்டிற்குாிய 68 இனங்களும், 183 சாதிகளும் இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1585 கிலோமீற்றர் நீளமுள்ள கரையோரத்தை இலங்கை கொண்டுள்ளது. இதிலே கிழக்கு கரையோரம், வாகரையிலிருந்து வாழைச்சேனை வரையும், பின்னர் மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையும், அடுத்து ஒலுவிலிலிருந்து பொத்துவிலுக்கு அப்பால் வரையும் தொடர்ச்சியாக இதன் பரம்பலைக் காணலாம்.

முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நோக்குவோம். முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக எடுக்கப்படுதல் ஒருபொிய பிரச்சினையாகும். ஆதிகாித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப, கட்டடத் தேவைகளும் அதிகாிக்க, அதன் நிமித்தம் சுண்ணாம்புத் தேவைக்கான கேள்வியும் அதிகாித்த நிலையில் உள்ளது. இலங்கையின் கட்டுமானப் பணிகளில் 90 சதவீதம் சுண்ணாம்பு பயன்படுகின்றது. இதன் காரணமாக, உயிருள்ள முருகைக் கற்கள் சுண்ணாம்பு உற்பத்திக்காக உடைத்து எடுக்கப்படுகின்றன.

டைனமைற் பாவித்து மீன்பிடித்தல், கரைவலை (beach sein), பை வலை (moxy net), அடித்தள வலை (bottomset net) பாவித்து மீன் பிடிக்கும் போது அவைகள் முருகைக் கற்களுக்கு பாாிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பை வலை, முருகைக் கற்களில் வாழும் அலங்கார மீன்களை பிடிக்க பயன்படுகின்றது. சயனைட் வில்லைகள் போன்ற நஞ்சுகளைப் பாவித்து மீன்பிடிக்கும் போது, இறந்த மீன்கள், முருகைக் கற்களுக்குள் சிக்குப்படும்போது, முருகைக் கற்கள் உடைக்கப்பட்டு அதற்குள் சிக்குப்படும் மீன்கள் எடுக்கப்படுகின்றன.

கடந்த இரு தசாப்தங்களாக அலங்கார மீன்களின் ஏற்றுமதி அதிகாித்து வந்திருக்கின்றது. தற்போது உள்ள நீர்வளர்ப்பு ஏற்றுமதி வர்த்தகத்தில், இறால், சிங்கி இறால் போன்றவற்றிற்குப் பிறகு, அலங்கார மீன்களின் ஏற்றுமதியே அதிக அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றதாகும். சிங்கி இறால்கள்கூட இந்தச் சூழற்றொகுதியிலிருந்தே பிடிக்கப்படுகின்றன. இதன் காரணமாக குறிப்பிட்ட வகை உயிாினங்கள் சூழற்றொகுதியிலிருந்து தொடர்சியாக அகற்றப்படுவதன் காரணமாக சூழலின் சமனிலை பாதிப்படைந்து, அச் சூழற்றொகுதியே அழிகின்ற நிலைக்கு உள்ளாகும். இவ்வலங்கார மீன்களில், அழிவுக்குள்ளான நிலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய உள்நாட்டு இனங்கள் பலவும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

1970 களிலிருந்து இலங்கையின் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. இந்த உல்லாச பிரயாணிகளை கவருவதில் முருகைக் கற்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 1992 யில், 30000 உல்லாசப் பயணிகளின்; இரவுகள், ஹிக்கடுவையில் முருகைக் கற்களுக்காக செலவிடப்பட்டுள்ளன. உல்லாசப் பிரயாணிகளின் முருகைக் கற்களின் மேல் நடத்தல், நீந்துதல், சுழியோடுதல், படகுவிடுதல், கண்ணாடி அடித்தள படகு விடுதல், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான நங்கூரமிடுதல், போன்ற செயல்களால் முருகைக் கற்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றன. இந்த உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்வதற்கான பல்வேறு வகையான உயிாினங்கள் (உதாரணம்: சங்கு, அலங்கார உயிாினங்கள் போன்றவை) சூழலிருந்து அகற்றப்பட்டு விற்கப்படுகின்றன.

கடல் மாசடைதல் முருகைக் கற்பாறைகள் எதிர்நோக்கும் பாாிய பிரச்சினைகளுள் ஒன்றாகும். ஹோட்டல்கள் தங்களது கழிவுகளை நேரடியாக கடலில் கொட்டுவதாலும், தும்புக் கைத்தொழில், தோல் உற்பத்தி, சாயக் கைத்தொழில், றப்பர் கைத்தொழில், உணவு பதனிடும் கைத்தொழில், கடதாசி ஆலைகள் போன்றவைளும், மனிதா;களும் தங்கள் கழிவுகளை நேரடியாக கொட்டுவதாலும் முருகைக் கற்பாறைகள் பாதிக்கப்படுகின்றன.

நிலப் பிரதேங்களில் காடுகளும், மண்ணைப் பிடித்துவைத்தருக்கக் கூடிய தாவரங்களும் அழிக்கப்படுவதால், நிலப் பிரதேசங்களிலுள்ள அடையல்களும், போசணைப் பொருட்களும், முருகைக் கற்பாறைத் சூழற்றொகுதியை அடைந்து, நற்போசணையாக்கத்தை (eutrophication) உருவாக்கி அதன் சூழற்றொகுதியிலுள்ள உயிாினங்களுக்கு பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் கடலில் சேரும் விவசாய, வீட்டு, எண்ணெய்க் கழிவுகளும் பாாிய சேதத்தினை ஏற்படுத்துகின்றன.

எண்ணெய் ஆய்வுக்கு கடல் அடித்தளங்களைத் தோண்டுதல், துறை முகம் அகழல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், குளிரவைக்கும் ஆலைகள், கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு, கப்பல் கழுவுதல், போன்றனவும் பாதிக்கின்றன.

முருகைக் கற்களின் பிரதான எதிாி, நட்சத்திர மீன்களாகும். நட்சத்திர மீன்களின் பிரதான உணவு முருகைக் கற்களாகும். ஆய்வாளர்களால் வழமையாக முருகைக் கற்களின் மீது காணப்படுகின்ற நட்சத்திர மீன்கள் வெட்டிக் கொல்லப்படுவது வழக்கம்.

அடுத்ததாக இயற்கை அனர்த்தங்கள் முருகைக் கற்களைப் பாதிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பெற்றோலியப் பொருட்கள், நிலக்காி என்பன எாிக்கப்படுவதனால், வெளியேறும் காபனீரொட்சைட்டு;, மெதேன், ஓசோன் போன்ற வாயுக்கள் சூழல் வெப்பநிலையை கூட்டி, கடல் மட்டத்தை அதிகாிக்கச் செய்கின்றன. இதன்காரணமாக கடல்பெருக்கெடுத்து கடலாிப்பைத் தடுக்கும் கண்டல் தாவரங்கள், காடுகள் போன்றவற்றை அழிக்கின்றன. இதன் காரணமாக முருகைக்கற்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் உலக வெப்பமாதலினால் கடல்நீாின் மட்டம் 2 மில்லிமீற்றராக உயருகின்றது. எல்நினோ விளைவாலும் உலகவெப்பமாதல் நடைபெற்று, கடலின் வெப்பநிலையும் அதிகாிக்கும் போது, முருகைக்கற் பாறையில் ஒன்றியவாழியாக (symbiont) வாழுகின்ற, ஸ_ஸான்தலே என்னும் அல்கா இறக்க நோிடுகின்றது. இந்த அல்கா ஒளித்தொகுப்பு செய்து உணவை முருகைக் கற்களுக்கு கொடுக்க, முருகைக் கற்கள் அல்காக்களுக்கு இருக்க இடம் கொடுக்கும். இந்த அல்கா இறந்து, சில நாட்களுக்குப் பிறகு, முருகைக் கல்லும் இறந்துவிடும். Coral bleaching உழசயட டிடநநஉாைபெ8 எனப்படும். 1998;ல் இந்த பிரச்சினை மோசமான அளவில் அதிகாித்துக் காணப்பட்டது.

இனி பாசிக்குடாவை நோக்குவோம். பாசிக்குடா மட்டக்களப்பிற்கு வடக்கே 28 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் முருகைக்கற் பாறைகளைக் கொண்ட அமைதியான அலையடிப்பு குறைந்த குடாவாகும். பாசிக்குடா இலங்கையின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளகைளை¢க கவர்வதில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது. 1980களின் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக பொிதும் கவனிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. பின்னர் 2003 சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகாித்துக் காணப்பட்ட நிலையிலிருந்தது. தற்போது இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உல்லாசப் பிரயாணிகளின் வருகை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மோசமான சூழலைத் தொடர்ந்து நிலவிய அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில்வாய்ப்பு தேவைப்பட்ட மக்கள், அளவுக்கதிகமாக முருகைக் கற்பாறைகளை கடலிலிருந்து உடைத்தும், அண்டிய நிலப்பிரதேசங்களிலிருந்து அகழ்ந்தும், சுண்ணாம்பு உற்பத்திக்காக பாவிக்கத் தொடங்கினார்கள். இதன் காரணமாக கரையோரம் பல நூறுமீற்றர்களுக்கு கடலினால் அாிக்கப்பட்டது. மீனா தா;மரெத்தினம், கிருகைராஜா (2003) ஆய்வுகளின் படி, இந்த முருகைக் கல் அகழ்ந்தெடுத்தலில் நாளாந்தம் அதிகமான ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்கள். சுண்ணாம்புக் கைத்தொழிலில் நூற்;றுக்கும் அதிகமான சூளைகள் இயங்கி வந்ததையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சூளைகளை இவர்கள் வர்த்தக அடிப்படையிலான பொிய சூளைகள், குடும்ப சூளைகள், சிறுவர் சளைகள் என வகைப்படுத்தியுள்ளார்கள்.

தொடர்ச்சியான முருகைக் கல் அகழ்வினால், உல்லாசப் பிரயாண சபைக்கு சொந்தமான 3 ஏக்கா; பரப்பு கொண்ட விடுதியின் எச்ச சொச்சங்களை கடலுக்குள் பார்க்கலாம். அதன் தூண்களை கடற்கரையிலிருந்து 50 மீற்றர் தொலைவில், கடலுக்கடியில் தற்போதும் காணலாம். பல ஏக்கா; தென்னந்தோட்டங்களும் கடல் அாிப்பினால் இன்று வரை இழக்கப்பட்டுள்ளன. கடல் நீர், ஊரை நோக்கி வருவதனால், நன்னீர் உவர்நீராதல் பிரச்சினையும், நிலப்பிரதேசங்களில் சுவட்டு சுண்ணக் கற்கள் அகழப்பட்டு, நிலம் கைவிடப்படுவதால், நிலம் பயனின்றிப் போய், நீர் தேங்கி, நுழம்பு பெருகி சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படுகின்றது.

மீனாதா;மரெத்தினம், கிருபைராாஜா (2003) யின் படி, உல்லாசப் பிரயாண சபைக்கும், தனியாருக்கும் சொந்தமான பலநூறு ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் குன்று குழியுமாக்கப்பட்டு பயனற்ற நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதையும், அந்தப் பிரசதேசத்தில் இவர்கள் பல நூற்றுக்கணக்கான குழிகளை அவதானித்துள்ளார்கள். சுண்ணாம்புச் சூழைகள் காரணமாக காபனீரொட்சைட்டு விடப்படுதலும், காடழிப்பும் நடைபெற்றன. சமாதான ஒப்பந்த காலத்திற்கு பின்னர், ஏதோவொரு வகையில் குழுக்களினால் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சுண்ணாம்பு உற்பத்திக்காக முருகை; கல்லை உடைப்பது பாாியளவில் குறைந்திருக்கக் காணப்பட்டது.

வாழைச்சேனை வாவியிலிருந்தும், பாசிக்குடாவின் பகுதிகளிலிருந்தும், மீன்பிடிக் கைத்தொழில், விவசாய நிலங்களிலிருந்தும் விடப்படுகின்ற கழிவுகளும், வாழைச் சேனை கடதாசி ஆலையிலிருந்து விடப்படுகின்ற, கழிவுகளும் இம் முருகைக் கற்பாறைத் தொகுதியை அடைவதனால் இச் சூழற்றொகுதியின் கடல்நீாின் பண்புகள் பாதிப்படைகின்றன. றியாஸ் அஹமட், மீனாதாமரெத்தினம் (2004), முன்சுனாமிய ஆய்வுகளின் படி பாசிக்குடா முருகைக்கற்பாறைச் சூழற்றொகுதி 15.81 சதவீத உயிருள்ள முருகைக் கற்களைக் கொண்டுள்ளது. இறந்த, இறந்ததும் அல்காக்களுடன் கூடியதும்;, மணற்பகுதிகள் என்பன முறையே 10.6-29.66 சதவீதம், 3.22-8.6 சதவீதம், 6.2-28.86 சதவீதங்களில் கொண்டிருந்தன. மணற்பகுதிகள் கூடியளவில் மேற்குப் பகுதியிலேயே காணப்பட்டன. இந்தப் பகுதியில்தான் உல்லாசப் பிரயாணிகளின் நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்பட்டன. இச் சூழற்றொகுதியின் மொத்த அடித்தளப் பரப்பில் உடைந்த முருகைக்கற்பாறைத் துண்டுகள் 18.87 சதவீத இடத்தைப் பிடித்தன. உல்லாசப் பிரயாணிகள் நடவடிக்கைகள் காரணமாக கலங்கற்தன்மை அதிகாித்ததன் விளைவாக உயிருள்ள முருகைக்கற் பாறைகளின் சதவீதம் குறைவடைந்து கொண்டே செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் காணப்பட்ட முருகைக்கற் பாறை இனங்கள் கொனியஸ்ற்றியா, அக்றோபோறா என்பனவாகும்.

அல்காக் கூட்டம், பொிய, சின்ன அல்காக்கள் என்பன முறையே 3.47 சதவீதம், 1.89 சதவீதம், 0.79 சதவீத இடங்களைப் பிடிக்கின்றன. கடற்பஞ்சு விலங்குகளும், மற்றவிலங்குகள் (கடல்அனிமன், மீன்கள், புழுக்கள், நட்சத்திரமீன், கடல்அட்டை, முறேவிலாங்குகள், மொலஸ்காக்கள் போன்றன) முறையே 1.23 சதவீத, 1.61 சதவீத இடங்களையும் பிடித்தன.

இந்தச் சூழற்றொகுதியி;;ன் சராசாி உவர்த்தன்மை 32 ppt ஆகவும், வெப்பநிலை 28.6 செல்சியஸ் ஆகவும், ஒளிபுகவிடு தன்மை 75-88 சென்ாிமீற்றராகவும் இருந்தன.

பாசிக்குடாவின் முருகைக் கற்பாறைச் சூழற் தொகுதியின், உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவு, நீர்கொழும்பு, ஹிக்கடுவ, போன்ற இடங்களிலுள்ள உயிருள்ள முருகைக் கற்பாறைகளின் அளவுகளுக்கு சமமானதாக இருப்பதால், 1998 யில் இலங்கையில் ஏற்பட்ட coral bleaching யினால் பாசிக்குடாவும் பாதிக்கப்பட்டதாக இவர்கள் கருதுகிறார்கள்.

றியாஸ் அஹமட், மீனா தாமரெத்தினம் (2004) ஆகியோர்களின் அறிக்கையின்படி, முருகைக் கற்பாறைச் சூழற்றொகுதியின் அடித்தளங்கள் பாாியளவில் பல்வேறு பொருட்களால் மாசுபடுத்தப்பட்டிருப்பதை அவதானித்திருக்கிறார்கள். பொலித்தீன் பிளாஸ்ாிக் பொருட்களே (பொலித்தீன் பை, பொலித்தீன் கடதாசி, பிளாஸ்ாிக் போத்தல்கள்) அதிகளவில் அவதானிக்கப்பட்டன. இவைகள் உல்லாசப் பிரயாணிகளால் பாவிக்கப்பட்டபின் தூக்கியெறியப்பட்டவைகளாகும். இதற்கு அடுத்த நிலையில் தூண்டில் கயிறு, வலைகள், நங்கூரங்கள் என்பனவும் அவதானிக்கப்பட்டடன. இவைகள் மீன்பிடி நடவடிக்கை காரணமாக விடப்பட்டவை. இதற்கடுத்த நிலையில் எலும்புகள், மரத்துண்டுகள், கண்ணாடித் துண்டுகள், கற்கள் என்பனவும் காணப்பட்டன.

மார்ட்டின் மெய்னல், மட்டியாஸ் றஸ்ற் (2005) யின் பின்சுனாமிய ஆய்வுகளின்படி, 100 மீற்றர் நீளமாக இருந்த பாசிக்குடாவின் கடற்கரை, தற்போது 15 மீற்றருக்கு குறைவடைந்துள்ளதாக தொிவிக்கிறார்கள்.

பூசிக்குடா முருகைக் கற்பாறைத் தொகுதி தற்போது எதிர்நோக்குகின்ற பாாிய பிரச்சினை என்னவெனில், கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, அருகிலிருந்த இராணுவ முகாம் முற்றாகப் பாதிக்கப்பட்டதனால், அந்த முகாமிலிருந்த கண்வெடிகளும், பீரங்கிக் குண்டுகளும் கடலுக்குள் அள்ளுப்பட்டுச் சென்றன. எனவே எதிர்கால ஆய்வு வேலைகளுக்கு முதற் கட்டமாக முருகைக் கற்பாறைச் சூழலிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.

எனவே பாசிக்குடாப் பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலத்திற்கு முன்னர் தீவிரமாக நடைபெற்ற சுண்ணாம்பு கைத்தொழில், சட்டவிரோத முருகைக் கல் அகழ்வுகள், காடழி;ப்பு காரணமாகவும், ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஒழுங்கற்ற உல்லாசப் பிரயாண முகாமைத்துவத்தாலும், இவ்விரு காலங்களிலும், சுற்றுச்சூழலிலிருந்த கைத்தொழில் முயற்சிகளின் பொறுப்பற்ற போக்குகளினாலும், இச்; சூழற்றொகுதியின் நிலைபேறான தன்மை கேள்விக் குள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்காக, இயற்கை வளங்களை சிறந்த முறையில் முகாமை செய்வதும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மக்களை பங்குபற்றச்; செய்;தலும், அதன் மூலம்; சூழலுக்குப் பாதகமாக இருக்கும் தொழில் முயற்சிகளையும், அவர்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றின்; அடிப்படையில் அவர்களுக்கான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும்.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg)

பச்சை பச்சையாய்

இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும்.

மிண்டி வேரும் உதைப்பு வேரும்

காவல்காரா;களாய் நிற்கும்.

மீன்கள் மரமேறி

பின் வழுக்கி கீழே விழும்.

நண்டுகளும், நத்தைகளும்

ஊாிகளும், மட்டிகளும்

பெருநடையில் படையெடுக்கும்.

பூம்புகளும் முதலைகளும்

ஓடிப்பிடித்து விளையாடும்.

இறால்களும், மீன்களும்

துள்ளிக்குதிக்கும்.

ஒரு பறவை மீன்களைக்

கெளவக் கொத்தும்.

பின்னொரு புறவை முட்டையிடும்

குஞ்சும் பொாிக்கும்.

நாளுக்கு பலமுறை

நீரோ ஏறியிறங்கும்.

குடியானவனின் வாழ்க்கையோ

ஏறியிறங்காமல் ஓட்டும்.

இந்த அற்புத வனம்

அழகுமிகு கண்டல்வனம்.

கண்டல் என்ற சொல் களப்புக்களின் கரையில் வளரும் விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர இனங்களை பொதுவாக குறிக்கின்றது. உதாரணம்: சிவத்தக் கடண்டல் (றைசோபோறா), கறுப்புக் கண்டல் (புறுகைறா), தேன் கண்டல் (அவிசினியா).

கண்டல் சூழற்றொகுதியில் காணப்படும், வைரம் செறிந்ததும், வித்துக்களில் மிகவும் சிறந்த இசைவாக்கங்களைக் கொண்டதும், வாவி, களப்பு, பொங்குமுகங்கள் போன்றவற்றின் அலையடிப்பு பிரதேசங்களுக்கு இடையில் வளர்வதுமான தாவரங்களை கண்டல்கள் என ஓரளவு வரையறுக்கலாம். இலங்கையில் ஏறத்தாள 40 இனங்கள், மரங்களாகவும், பற்றைகளாகவும், பூண்டுகளாகவும் காணப்படுகின்றன.

குடா, களப்பு, கழிமுகங்கள், பொங்குமுகங்கள் போன்றவற்றின் சேற்றுப் பாங்கான பகுதிகளில், உவர், சேற்று சூழலுக்கு விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர, விலங்கு குடித்தொகையும், அதன் உயிரற்ற கூறுகளும் கண்டல் சூழற்றொகுதி எனப்படும். கண்டல் சூழற்றொகுதி பல கூறுகளைக் கொண்டதாகும். இதன் சூழற்றொகுதியானது கடல், நன்னீர் சூழற்றொகுதியின் கூறுகளைக் கொண்டள்ளது.

இந்த சூழற்றொகுதி உயர்ந்த உற்பத்தித் திறனை உடையதும், மிகுந்த வளத்தைக் கொண்டதுமாகும். இதன் உற்பத்தித்திறன் மழைக்காட்டின் உற்பத்தித் திறனைவிட அதிகமாகும். அலை ஓட்டங்கள் போசணைப் பொருட்களை மற்றைய சூழற்றொகுதிக்கு விநியோகிப்பதால் கண்டல் சூழற்றொகுதி சக்தி உதவியளிக்கும் சூழற்றொகுதி எனவும் அழைக்கப்படுகின்றது.

இலங்கையின் மிகப்பொிய கண்டல் சூழற்றொகுதி புத்தள-டச்சுக்குடா-போர்த்துக்கல்குடா தொகுதியாகும். இரண்டாவது பொிய தொகுதி மட்டக்களப்பு என நம்பப்படுகின்றது. இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 0.1 சதவீத கண்டல் சூழற்தொகுதியைக் கொண்டுள்ளது.

1992ம் ஆண்டு இருந்த இலங்கையின் கண்டல் காடுகளின் பரப்புக்கள் பின்வருமாறு: ஹெக்டேயர்களில்.

அம்பாறை-292, மட்டக்களப்பு-1421, காலி-187, கம்பஹா-122, ஹம்பாந்தோட்டை-539, யாழ்ப்பாணம்-260, களுத்;துறை-70, கிளிநொச்சி- 312, குருநாகலை-1261, மாத்தறை-6, முல்லைத்தீவு-463, புத்தளம்-2264, இரத்தினபூி-1461. மொத்தம் 8687 ஹெக்டேயர்களாகும்.

இலங்கையின்; கண்டல் தாவரங்களை எடுத்து நோக்கினால் றைசோபோறாவில் இரு இனங்களும், சிாியொப்ஸ் (சிறுகண்டல்) இல் இரு இனங்களும், சொனறேசியாவில் (கிண்ணமரம்) மூன்று இனங்களும் காணப்படுகின்றன. அவிசினியா (கண்ணா)வில் இரு இனங்கள், ஏஜிசிறஸ் (வெற்றிலைக்கண்ணா)வில் ஒரு இனமும்,, அகான்தஸ் (முள்ளி)யில் ஒரு இனமும், எக்ஸோகாியா (தில்லை)யில் ஒரு இனமும், சைலோகாபஸ் (கடல்மாங்காய்)யில் இரு இனமும், கிளடென்றோன் (பிச்சு வெள்ளாத்தி)யில் ஒரு இனமும் காணப்பணடுகின்றன. இங்கு காணப்படும் ஒரே ஒரு பாமே குடும்பத் தாவரம் நிபா புறுட்டிகன்ஸ் ஆகும். ஒரேயொரு பன்னம் அக்றொஸ்ாிகம் (மின்னி)யாகும். ஹெரற்றீரா (சோமுந்திாி), டொலிகோடென்றோன் (வில்பாதாி), செபரா மங்கா (நச்சு மாங்காய்), டொிஸ் (தேக்கில்) போன்றவையும் காணப்படுகின்றன.

வுிலங்குகளை நோக்கும்போது பறவைகள், இறால், நண்டுகள், மொலஸ்காக்கள், பொலிக்கீற்றாப் புழுக்கள், மீன்கள் போன்றவற்றை காணலாம்.

கண்டல்காடுகளின் பயன்கள்:

ஆதிகாலத்திலிருந்தே மனிதன் இந்த சூழற்றொகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப் பெற்று வந்திருக்கின்றான். இங்கு சில பயன்களை பார்ப்போம்:

மீன்கள், இறால், மொலஸ்காக்கள் உணவுக்காக பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அக்ரோஸ்ாிக்கத்தின் இளந்தளிர்கள் கறி சமைக்கப்பயன்படுகின்றன. நிபாவிலிருந்து அல்கஹோல், விநாகிாி என்பன தயாாிக்கப்படுகின்றன. அவிசினியா, றைசோபோறா போன்றவை விறகாகப் பயன்படுகின்றன. றைசோபோறாவில் இருந்து பெறப்படும் காபன் காியானது மிக உயர்நத வினைத்திறனை உடையது. கண்டல் மரங்கள் உயர்ந்த தனின் அளவைக்; கொண்டுள்ளதால் இயற்கையாகவே பூச்சி புழு அாிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. எனவே இது கட்டட வேலைகளுக்குக்;, கம்பாகவும் பயன்படுகின்றது. றைசோபோறா, புறுகைறா, அவிசினியா போன்றவற்றிலிருந்து பெறப்படுகின்ற வெட்டு மரங்கள் படகுகள் கட்டடம், மீன்பிடி உபகரணங்களை செய்யவும்; பயன்படுகின்றது. இங்கு காணப்படும் பொதுவான மீன்பிடிமுறை brushphile மீன்பிடி முறையாகும். நீர்;ப்பகுதிகளில் கண்டல் மரங்கள் வெட்டப்பட்டு போடப்படுகின்றன. போடப்பட்ட மரத்தின் பகுதிகளை மீன்கள் வாழிடமாகவும், இரைகொல்லிகளிடமிருந்து தப்பித்து ஒழிப்பதற்கும், இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான இடமாகவும் பாவிக்கும். சில வாரங்களுக்குப் பின், போடப்பட்டட மரங்களைச் சுற்றி வலை போடப்பட்டு, மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள் வீட்டுப் பாவனைப் பொருட்கள், தளபாடங்கள் போன்றன செய்யவும் பயன்படுகின்றன. பெந்தோட்டவில் செபரா, முகமூடி செய்யப்பயன்படுகின்றது. றைசோபோறா, சிாியோப்ஸிலிருந்து பெறப்படும் தனின், வலையை சாயமிட உதவுகின்றது. இது அதன் பாவனைத் தன்மையின் காலத்தைக் கூட்டுகின்றது. இந்த மரங்களின் பட்டைகள் அகற்றப்பட்டு, பைகளில் அடைக்கப்பட்டு கிராமப் புறங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. ஓவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான கிலோ பட்டைகள் அகற்றப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

கண்டல் சூழற்றொகுதியில் உள்ள மொலஸ்காக்களின் ஓடுகள் சுண்ணாம்பு உற்பத்திக்குப் பாவிக்கப்படுகின்றன. அவிசினியா போன்றவற்றின.; இலைகள் விவசாயத்தில் பசுந்தாட் பசளையாகப் பாவிக்கப்படுகின்றன. கண்டல் நிலங்கள் பெரும்பாலும் மீன் வளர்ப்புக்கும், இறால் வளர்ப்புக்கும் மிகவும் உகந்ததாகும். இறால் வளர்ப்புக்கு உவர் நீர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கால்நடைகளின் தீவனமாகவும், இதன் இலைகள் பாவிக்கப்படுகின்றன. கிண்ணமரத்தின் சுவாச வேர்கள் தக்கை மூடிகள் உற்பத்திக்குப் பயன்படுகின்றன. எலும்பு முறிவைக் குணப்படுத்த றைசோபோறாவின் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. காயங்களை சுகப்படுத்தத புறுகைறா, கிண்ண மரங்களின் இலைகள் பாவிக்கப்படுகின்றன. தோல் வியாதிக்கு தில்லை மரத்தின் பால் பயன்படுத்தப்படுகின்றது. கண்டல் சூழற்றொகுதியில் இருந்து தேன், மெழுகு போன்றவைவைகள் கூட ஒரு குறித்த அளவில் எடுக்கப்படுகின்றன. மீனுக்கு உணவாகப் பயன்படுத்தும், புரதம் நிறைந்த பொிய பொலிக்கீற்றாக்கள் இங்கு பெறப்படுகின்றன.

கண்டற் சூழற்றொகுதியானது கரையோர மீன்பிடியில் பிரதான பங்கை வகிக்கின்றது. இது இளம் கடல் குஞ்சு மீன்களுக்கும், வளரும் இடமாகவம். உணவளிக்கும் இடமாகவும் பயன்படுகின்றது. கண்டல் சூழற்றொகுதி இல்லாத இடங்களில் பிடிபடும் மீனின் அளவு வழமையாகக் குறைவாகக் காணப்படுகின்றது. ஏனெனில், கண்டல் தாவரங்கள் வாழிடமாகவும், எதிாிகளிடமிருந்து ஒழிப்பதற்கும், பயன்படுவதோடு, அதிலிருந்து விழுகின்ற, இலைகள், குச்சிகள் என்பவற்றைக் கொண்டு கூடுகள் கட்டி அவைகளிலேயே முட்டையிட்டு ஒட்டி வைக்கின்றன. மட்டக்களப்பு வாவியில் றியாஸ் அஹமட், மீனா தா;மரெத்தினம் (2003) இரு உள்நாட்டு இனத்திற்குாிய மீன்களில் மேற் கொண்ட ஆய்வுகள், கண்டல் தாவரங்களையொட்டிய பகுதிகளிலேயே அதிகளவான கூடுகள் கட்;டப்பட்டிருந்தன என்று தொிவிக்கின்றன. இதே மாதிாியான முடிவுகளையே பின்ரோ, புஞ்சிஹேவ (1996), நீர்கொழும்பு வாவியில் பெற்றிருக்கின்றார்கள்.

நீாில் விழுந்து அழுகும் போசணை மிகுந்த தாவரப் பாகங்கள், அலை அடிப்பினால் நுண்ணங்கிகளுக்கு கொடுக்கப்பட்டு, இந்தப் போசணைப் பதார்த்தங்கள் அழுகலுக்கு உட்பட்டு, அழுகல் வளாி உணவுச் சங்கிலியின் முதற் கொழுவியாக தொழிற்பட்டு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொிய மீன்களை போசிக்க உதவுகின்றன. றைசோபோறாவின் மரத்தில் 6.1 சதவீதமும், இலையில் 3.1 வீதமும் புரதம் காணப்படுகின்றது. இவை நீாில் விழுந்து 12 மாதத்திற்குப் பின், இதன் புரத உள்ளடக்கம் 22 சதவீதமாக அதிகாிக்கின்றது.

கண்டல் காடுகள். ஆற்று முகங்கள், கழிமுகங்கள், வாவிகளின் கரையைப் பாதுகாப்பதுடன் அடையல்களை வேர்கள்; பிடித்து வைத்திருப்பதனால் வாவிகளையும், முருகைக் கற்பாறை, கடலின் புற்படுக்கை என்பவற்றையும் அடையல்கள் சேராமல் பாதுகாக்கின்றது. இயற்கையாக நிலம் வளர்க்கும் செயற்பாட்டில் ஈடுபடும் இரண்டு சூழற்றொகுதிகளில்; கண்டலும் ஒன்றாகும். மற்றது முருகைக் கற்பாறையாகும். சில இடங்களில் கண்டல் ஒரு வருடத்திற்கு 100 மீற்றர் நிலத்தைக்கூட வளர்த்திருக்கின்றது. அத்துடன் மண்ணாிப்பு, சூறாவளியின் பாதிப்பு என்பவற்றையும் தடை செய்கின்றன. கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது, உயிா,; பொருளாதார சேதங்களை இந்தக் கண்டல் காடுகள் பெருமளவில் குறைத்திருக்கின்றன (உதாரணம்: அந்தமான் தீவுகள்).

கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உறிஞ்சும் தகவுடையது. இதனால் வாவிகளில் மாசுபடலை குறைக்கின்றது. கண்டல் காடுகள் மீன்பிடித்து, படகு விட்டு, பறவை,, விலங்குகளை இரசித்து பொழுது போக்கும் ஒரு இடமாகவும், பாவிக்கப்படுகின்றது. வேறு நாடுகளிலிருந்து இடம் பெயரும் பறவைகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. இவையெல்லாவற்றையும் விட, ஆர்வமுள்ள பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறந்த ஒரு பாிசோதனை கூடமாகவம் பயன்படுகின்றது.

இலங்கையின் கண்டல்காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

மனிதன் என்பவன் சுயநலம் கொண்ட ஒரு சமூகப் பிராணி. எப்போதும் சூழலை தனக்கு ஏற்றாற்போல மாற்றி, அதிலிருந்து எவ்வளவிற்கு நன்மைகளைப் பெற முடியுமோ அவ்வளவு நன்மைகளை பெற்று, அதன் தொடர்ச்சியான நிலவுககைக்கு எவ்வித பங்களிப்பும் செய்யாமல் சுயநலமாக இருந்து விடுகின்றான். இலங்கையின் கண்டல்காடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இதுதான் மூலகாரணமாக இருக்கின்றது.

இலங்கையின் கலா ஓயா கண்டல் தொகுதிதான் மிகவும் குறைந்த பாதிப்புக்குள்ளானதாகும். பெந்தோட்டை கண்டல் தொகுதி உல்லாசப் பிரயாண கைத்தொழிலினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. புத்தளம்-கல்பிட்டி பகுதிகளில் உள்;ள கண்டல் தொகுதிகள், இறால் வளர்ப்பினால் பாதிக்கப்ட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தசாப்தங்களாக திட்டமிடப்படாமல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற இறால் பண்ணைகள், தற்போது பல்கிப் பெருகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாகவும் கண்டல்கள் பாாிய பிரச்சினையை எதிர்னோக்கியுள்ளன. இதன் காரணமாக மட்டக்களப்பு வாவியின் அண்டிய காடுகளும், வாழைச்சேனை வாவியின், காவத்தைமுனை கண்டல் காடுகளும் பெருமளவில் இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டிருக்கின்றன.

வுடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே கண்டல் காடுகள் கண்மண் தொியாமல் கடந்த ஒரு தசாப்பத காலமாக பாதுகாப்பு காரணங்களினால் பாாியளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு வாவியின் கரையோரத்திலும், வீதிகளின் கரையோரங்களில் உள்ள மரங்கள் வருடத்திற்கு பல தடவைகள் வருடம் அடியொடு வெட்டப்பட்டும் (தில்லை) தீயிடப்பட்டுப் (தைபா) வருவதைக் காணலாம். இதே பிரச்சினையை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று-பொத்துவில் (ஊறணி, திருக்கோவில், தம்பிலுவில்) பிரதான நெடுஞ்சாலையிலும் அவதானிக்கலாம். இதே மாவட்டத்தில் ஒலுவில் பகுதியில் குறிப்பிடத்தக்களவு கண்டல்கள் காணப்படுகின்றன. நடைபெறப்ேபூகும் துறைமுக நிர்மாணத் திட்டத்தால் அவைகளும் கணிசமான அளவு பாதிக்கப்பட வாய்ப்பிருக்கின்றன. இதே மாதிாியான பிரச்சினையை திருகோணமலை மாவட்டத்தில், புல்மோட்டை, இறக்கண்டி, நிலாவெளி, சாம்பல்தீவு, சல்லி, மட்டிக்களி, கொட்டியாரக் குடாவைச் சுற்றிய பகுதிகள், மூதூர் போன்ற பகுதிகளிலும் அவதானிக்கலாம். பயங்கரவாதப் பிரச்சினைகள் காரணமாக காடுகளுக்கு சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அன்றாடங் காய்ச்சிகள், தங்கள் வீதிக்கு அருகாமையில் உள்ள கண்டல் வளங்களை (குறிப்பாக விறகு) பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவும் கண்டல் காடுகள் பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

அதைவிடுத்து, அனுமதி பெறாமல் கண்டல் நிலம் விவசாய நிலமாகவும் மாற்றப்படுதல் (உதாரணம்: படுவான்கரைப் பகுதிகள்-பன்குடாவெளி) நகரவாக்கம், வீதி விஸ்தாிப்ப, உல்லாசப் பிரயாண ஹோட்டல நிர்மாணம், தொழிற்சாலை நிர்மாணம் என்பன கூட கண்டல் காடுகளின் தொடர்ச்சியான நிலவுகைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

நீர்கொழும்பு பகுதியின் brushpile மீன்பிடி முறையினால் கண்டல் காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மட்டக்களப்பு வாவியிலும் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை தமிழில் தூபமுட்டி மீன்பிடி முறை எனலாம். ஒரு சிலாின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்டளவில் இந்த மீன்பிடி முறைக்காக கண்டல்தாவரங்களின் கிளைகள் அகற்றப்படும் போது, prunning விளைவால் தாவரம் மீண்டும் செழித்து வளருகின்றது என்கின்றனர். இந்த முறைகளுக்காக பெரும்பாலும் முழு மரங்களும் அடியோடு வெட்டப்படுவதில்லை;. மேம்போக்காக சில சிறு சிறு கிளைகளே வெட்டப்படுகின்றன. இந்த மீன்பிடி முறையை சாதாரண குடியான மீனவன் செய்யும் போது, அது சூழலியல்சார்ந்த (environmental friendly) ஆகிறது. அதுவே இலாப நோக்கு கொண்ட முதலாளிகளின் கைக்கு போகும்போது, சூழலை நோக்கிய அழிச்சாட்டியமாகிறது. சாதாரண குடியான மீனவர்களின், சூழல்சார்ந்த அறிவும், அவர்கள் வாழிடத்தில் இருக்கின்ற உயிாினங்களின் அறிவும் அற்புதமானது. நியம-வடஅமொிக்க-மேற்கு ஐரோப்பிய-நிரூபிக்கப்பட்ட- விஞ்ஞானபூர்வ எனத் தொடங்கும் சொல்லாடல்களினால் அவர்களால் பூச்சாண்டி காட்டத் தொியாது. எங்களது அனைத்து கள ஆய்வுகளுக்கும் அடிப்படையை அவர்களின் அறிவிலிருந்துதான் நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்.

உலக மொத்த நிலப்பரப்பில் 1 சதவீதமும், இலங்கையின் மொத்தப் பரப்பில் 0.1 சதவீதமும்; கண்டல் காடுகள் காணப்படுகின்றன. விவசாயம், அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு மிக ஏராளமாக வேறு நிலங்கள் இருக்க, கண்டல் நிலப்பிரதேசங்களை நாம் அழிக்க வேண்டுமா ?. கண்டல் சூழற்றொகுதி அாியபுத்தகங்கள்; நிறைந்த நூலகம் போன்றது. அற்புதமானது. இதனையாவது நாம் பாதுகாத்த எமது சந்ததிகளுக்கு கொடுப்பது எமது தலையாய பாாிய கடமைகளுள்; ஒன்றாகும்.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்

முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 01 யானைகள் (Elephants)

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witswatersrand, Johannesburg)

உயரக் கிளைகள்

முறிந்து கீழக்கிடக்கும்.

சிறு விலங்குகள்

அரைத்து உண்ணும்.

பதைத்த உயிர்கள்

பாங்காய் பசியாறும்.

காலால் உதைத்து

நீர் கொடுக்கும்.

தகித்த உயிர்கள்

தாகம் போக்கும்.

கோடையின் கொடுமையோ

மெல்லக் குறையும்.

மலையாய் விட்டை

எங்கும் விரவிப்போடும்.

காடு சீராட்டி

உயிர் வளர்க்கும்.

ஊட்டுவதால் தாயாகும்.

உதவுவதால் நண்பனாகும்.

காப்பதனால் காவனாலாகும்.

யானைகள் நம்

சூழலின் தோழனாகும்.

மற்றைய ஆசிய நாடுகளின் வரலாற்றினதும், கலாச்சாலரத்தினதும், நாட்டாாியலினதும், புராணங்களினதும், பகுதியாக யானைகள் காணப்படுவது போன்றே இலங்கையிலும் காணப்படுகின்றது. யானைகள் வணங்கப்படு பொருளாகவும், வேட்டையாடிகளின் இலக்காகவும், மக்களின் சமைதாங்கியாகவும், அதே மக்களுக்கு சுமையாகவும், வளர்க்கும் போது மித்துருவாகவும், மிரளும்போது சத்துருவாகவும்;, அரசர்களின் பெருமைக்குாிய பொருளாகவம், பாகனின் நண்பனாகவும், போர் இயந்திரமாகவும், சமாதானத்தினதும், அன்பினதும், பயத்தினதும், வேட்டையாடப்படுவதன் அடையாளமாகவும் பல பாத்திரங்களை வகிக்கின்றன. யானையானது ஆசியாவிலே மனிதனுடன் மிகவும் பெருமைக்குாிய தொடர்புகளை அதன் தூய்மையான இயல்புகள் காரணமாக வகித்து வந்திருக்கிறது. இந்த தொடர்பானது உலகில் மனிதனுக்கும் மற்றைய விலங்குகளுக்கும் உள்ள தொடர்புகளோடு ஒப்பிடும் போது நிகாில்லாத ஒன்றாகவே விளங்குகின்றது.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் காட்டிலிருந்து யானைகளை பிடித்து வந்து அதனைப் பழக்கி தனது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்துவதன் காரணமாக, மனிதனுக்கு யானையானது அதன்; பல்வேறு வயதுகளிலும் உபயோகமான ஒன்றாக இருக்கின்றது. யானையானது மத, கலாச்சார ஊர்வலங்களிலும் சடங்குகளிலும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் மனிதன் யானைகளை போர் செய்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறான். மனிதன் எப்போதும் காட்டு யானைகளை பிடித்து அவனுக்கு சேவகம் செய்யப் பழக்கிவிடுகின்றான். யானைகளைப் பிடிப்பதிலும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

Elephant என்ற ஆங்கிலச் சொல் தந்தம் (ivory) என பொருள் கொண்ட elephas என்ற பழைய கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மிகவும் பொிய தரைவாழ் முலையூட்டியான யானை வருணம் proboscidea யிலும் குடும்பம் elephantidaeயிலும் பாகுபடுத்தப்படுகின்றது. Proboscidea என்றால் சுருளக் கூடிய தும்பிக்கை என்பதாகும். இதுவே யானையின் பிரதான சிறப்பியல்பாகும். யானையின் இளம் பருவம் என்பது பிறந்ததிலிருந்து நான்கு வயது வரையாகும். 30-38 வயது வரை யானையானது வேலை வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த வயதில்தான் அவைகள் ஒழுங்கான வடிவத்திலும், ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் இருக்கின்றன. 46-53 வயதில் அவைகளின் உறுதி படிப்படியாக குறைகின்றது. 53-60 வயதுகளில் அவைகள் மென்மையான வேலைகளுக்கு ஏற்றவையாகவே இருக்கின்றன.

55 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் eoceinகாலத்தில் ஆபிாிக்காவில் தோன்றியவையே இந்த யானைகள். பின்னர் coenozoic காலத்தில் ஆபிாிக்காவிலும், ஆசிய, ஐரோப்பா, தென்அமொிக்க பகுதிகளுக்கும் பரம்பின. யானைகள் அந்தாட்டிகா, அவுஸ்ரலேசியப் பகுதிகள் மற்றும் சில தீவுகளில் மட்டுமே காணப்படுவதில்லை. உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்ற தரைச் சூழற்றொகுதிகளில் யானைகள் காணப்பணுடுகின்றன. American Mastadom (Mammat americanum), woolly mammoth (Mammathus sp.) போன்றவை சாித்திரத்துக்கு முன் வாழ்ந்த யானைகளின் முன்னனோர்களாகும். இவற்றிலிருந்தே தற்போது காணப்படுகின்ற ஆசிய யானைகளும் (Elephas maximus), ஆபிாிக்க யானைகளும் (Loxodonta africana) தோன்றின.

தற்போது ஆசியா யானைகளும், ஆபிாிக்க யானைகளும் மட்டுமே இரு சாதிகளிலும், இரு இனங்களையும், ஆறு உப இனங்களையும் முறையே கொண்டு ஆசிய, ஆபிாிக்கக் கண்டங்களில்; பரம்பிக் காணப்படுகின்றன.

ஆபிாிக்க யானைகளின் உப இனங்கள்:

Loxodanta Africana africana (சவானா உப இனம்)

Loxodonta Africana cyclotis (காட்டு உப இனம்)

ஆசிய யானைகளின் உப இனங்கள்:

Elephas maximus maximus 14(இலங்கை உப இனம் )

Elephaus maximus vilaliya (சதுப்புநில உப இனம்)

Elephasu maximus indicus (இந்திய உப இனம்)

Elephas maximus sumatranus (சுமாத்திரா உப இனம்)

Elephasu maximus hirsutus (மலேசிய உப இனம்)

Elephasu maximus borneensis (போர்னிய உப இனம்)

ஆபிாிக்க ஆசிய யானைகளுக்கிடையிலான பிரதான வேறுபாடுகள் வருமாறு:

African (Loxodonta africana) Asian (Elephas maximus)

காணப்படும் பகுதிகள்: ஆபிாிக்காவின் வடபகுதிகளிலுள்ள நாடுகளைத தவிர மற்றெல்லா ஆபிாிக்காவின் பகுதிகளிலும்; பரவிக் காணப்படுகின்றது. பங்களாதேஸ், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, லாஓஸ், மலேசியா, பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம்

யானைகள் வாழும் காடுகளின் மொத்த அளவு: 4-5 மில்லியன் சதுர கிலோமீற்றர் 50000 சதுர கிலோமீற்றர்.

யானைகளின் குடித்தொகை: 60000-70000 35000-55000

பெளதீக தோற்ற வேறுபாடுகள்: பொிய வட்டமான காதுகள் தலைக்கு மேலே உயர்ந்த காதுகள் மழுங்கிய தலை குவிவான முதுகு ஆண், பெண்யானைகள் இரண்டிலும் தந்தம் காணப்படும் தந்தம் நேரானதும், தடித்ததும் தந்தம் 70 கிலோகிராம் நிறையுடையது நுனியில் இரு மேடுகள் காணப்படும் சராசாி உயரம் 3.5-4 மீற்றர் வயதாகும்போது காதின் நுனி உடம்பை நோக்கி வளையும் அதி உயரப்பகுதி தோளாகும் முக்கோணக் காதுகள் அப்படி இல்லை கும்ப வடிவான தலை குழிவானதம், சில நேரங்களில் தட்டையானதுமான முதுகு 5வீதமான ஆண் யானைகளில் மட்டும் காணப்படும். மென்மையானது வளைந்தது 30 கிலோகிராம் நிறையடையது ஒன்று காணப்படும.; 2.75 – 3 மீற்றர். உடம்பை விலத்தி வளையும் தலை

;

இரு இனங்களும் IUCN யின் அழிந்து போகும் நிலையிலுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளன.

மனிதா;களுக்கும் யானைகளுக்குமிடையிலான பிரச்சினைகள்.

தற்போது மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையில் உண்டாகும் பிரச்சினைகள் (conflict) பற்றிப் பார்ப்போம். யானைகளைத் திருடுதல், தந்தங்களை திருடுதல், யானைகளின் வாழிடங்களை அழித்தல் போன்றவையே யானைகள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாகும். யானைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயுமிடத்து முந்தைய இரு பிரச்சினைகளையும்விட யானைகளின் வாழிடங்களை அழித்தலே பொிய பிரச்சினையாக இருக்கின்றது. ஏனெனில் பெண் ஆசிய யானைகள்; தந்தங்களை பொதுவாக கொண்டிருப்பதில்லை. ஆண் யானைகளிலும் குறிப்பிட்ட சிலவற்றிலேயே தந்தங்கள் காணப்படுகின்றன. அதிகாிக்கும் சனத்தொகை காரணமாக மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு ஆபிாிக்க யானைகளை விட ஆசிய யானைகளே மிகவும் பாாியளவில் முகம் கொடுத்து நிற்கின்றன. 60000 ஆபிாிக்க யானைகள் 33 நாடுகளில் 4 – 5 மில்லியன் சதுரகிலோ மீற்றர் பரப்பளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள், பிரச்சினைகள் காரணமாகவும், யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.

தங்களுக்குத் தேவையான உணவுகளும், வாழிடங்களும் கிடைக்காத போது யானைக் கூட்டமானது தனது வழமையான பாதைகளை விட்டு விலகி வேறுபாதைகளில் அவைகளைத் தேடிப் புறப்படுகின்றது. பிரதானமாக உணவு, நீர் என்பவற்றைத் தேடியே புறப்படுகின்றது. ஒரு இடத்தில் நீரும் உணவு விநியோகங்களும் குறையும் போது, எங்கே உணவும், நீரும் இருக்கிறதோ அந்த இடத்தை நோக்கி சென்று அவைகளைப் பெற்றுக் கொள்ளும். உணவுப் பற்றாக்குறையான காலத்தில் எங்கு உணவு கிடைக்கும் என்ற சிறப்பான அறிவும் யானைகளுக்கு உண்டு. இது கற்றலினாலும், அனுபவத்தினாலும் யானைகள் தங்களுடைய பெற்றோாிடமிருந்தும், பாதுகாவலர்களிடமிருந்தும் அடைந்து கொண்டது எனலாம். பலநூற்றாண்டுகளாய் இந்த யானைகளின் வாழ்வில் இதுதான் நடைமுறையாய் இருந்து வந்திருக்கின்றது. யானைகளின் நேர ஒதுக்கீட்டில் (time budgeting) ஊட்ட நடத்தையானது மிகவும் பெரும் பங்கு வகிக்கின்றது. றியாஸ் அஹமட் குழுவினர் (2004), லகுஹல தேசிய வனஜீவராசிப் பூங்காவில் செய்த ஆய்வுகளில், யானைகள் (ஆண், பெண், குட்டி) தங்களது மொத்த நேரத்தில் (43.63, 45.66, 40.99) சதவீத நேரங்களை, ஊட்ட நடத்தையில் செலவிட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த நேரத்தை தங்கள் வாழிடங்களில் நடத்தலுக்கு செலவிட்டிருக்கின்றன. இதிலிருந்து வாழிடங்களின் அளவும், யானைகளின் ஊட்ட நடத்தைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியலாம். யானைகள் பயணம்; செய்யும் பாதையில் (உணவு தட்டுப்பாடான காலத்தில், உணவு இருக்கும் இடத்தை நோக்கிப் பயணம் செய்யும் பாதைகள்), தடைகள் ஏற்படும் போது அல்லது அடைபடும் போது, யானைகள் பலவந்தமாக வேறு திசை நோக்கி, அல்லது அதன் பாதைகளில் ஏதாவது அபிவிருத்தித் திட்டங்கள் (உதாரணம்: வீடமைப்பு) உண்டாக்கப்பட்டால், அவற்றை நோக்கி யானைகள் சென்று தங்கள் உணவுகளை தேடுகின்றன. அந்த நேரத்தில் விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு, பல தொல்லைகளுக்கு மத்தியில்; செய்கை பண்ணிய பயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தொிந்த முறைகளிலெல்லாம் யானைகளை விரட்ட ஆரம்பிப்பார்கள். மிகவும் அதிகளவான யானைகளின் மரணங்களுக்கு விவசாயிகளே காரணமாகின்றனர். பெரும்பாலும் தங்கள் பயிர்களைப் பாதுகாக்கம் பொருட்டு.

ஆசிய யாயைானது அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகவும் பொிய முலையூட்டியாகும். அவைகளின் பழைய வாழிடங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்து; வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டுள்ளன. இதனால் யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் அதிகாித்துக் கொண்டேயிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் யானைக்கும் மனிதனுக்குமான பிரச்சினைகள், 1860களில் பிாிட்டிசாாின் காலத்தில் அவர்கள் கோப்பி பயிர்ச்செய்கைக்காக மத்திய மலைநாட்டுக்கு சென்றவுடன்; ஆரம்பிக்கின்றன. அதற்கு முந்திய காலத்தில் இந்த வகையான பிரச்சினைகள் இருந்ததில்லை. மலைகளில், சின்கோனாவும், கோப்பியும் பயிாிடுவதற்காக கண்டபடி காடுகளை இவர்கள் அழித்ததனால் யானைகளி;ன் வாழிடங்கள் அதிகளவில் குறைக்கப்பட்டன. ஆரம்பத்தில் யானைகள் மனிதனைவிட்டே விலகிவிட்டன. காலப்போக்கில் வாழிடங்கள் குறைக்கப்பட்டதாலும் உணவுத் தேவையாலும் யானைகள் தங்களது பழைய வாழிடங்களுக்கு பயிர் செய்யப்படாத காலங்களில் திரும்பி வந்தன. அப்போது அவைகள் பயிர்ச்செய்கையாளர்களால் சுடப்பட்டன. தற்போது, இதற்கு மேலதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தமும் மற்ற வனசீவராசிகளைப் பாதித்தது போல பொிய முலையூட்டியான யானையையும் பாதித்தது. யானைகள் பெரும்பாலும் துப்பாக்கிச் சண்டைகளிலும், கண்ணி, பொறி வெடிகளிலும்; அகப்பட்டுக் கொண்டன.

யானைகள் மனிதனுக்கு பலவகைகளில் பொருளாதார நட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன. தென்னை, றப்பர், கரும்பு, நெல், தினை போன்ற தானிய பயிர்ச்செய்கைகளை அழித்து பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள பொருளாதார நட்டங்களை ஏற்படுத்துகின்றன.

ஆண் யானைகள்தான் பெண் யானைகளைவிட பயிர்களை அழித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரவு நேரங்களில்தான் யானைகள் குடியேற்றங்களுக்குள் உள்நுழைகின்றன. புயிர்ச் செய்கைக் காலங்களில், வயதுவந்த ஆண் யானைகள் வழமையான காடுகளுக்கு அருகிலுள்ள கிராமப்புற எல்லைகளால் பின்னேரங்களில் உள்நுழைந்து, சூாியன் மறைந்தவுடன் வயல்களுக்குள் நுழைகின்றன. பின்னர் இரவு 7.00 மணிக்கும், 11.00 மணிக்கும் இடையில் வெளியேறுகின்றன.

யானைகள் வயல்களுக்குள் உள்நுழைந்தவுடன், அதன் அடுத்த இலக்கு அவைகள் உண்வதற்கு தேவையான பயிர்களை இனங்காண்பதாகும். Finger millet யானைகளின் விருப்பமான உணவாகும். விசேடமாக பயிர்களுக்கு வெளியெ துருத்தியுள்ள பூந்துணர் பாகங்களை அவைகள் உண்பதற்கு தோ;ந்;ததெடுக்கின்றன. இளநீர் காய்த்துள்ள ஒரு மரத்தை மோதி விழுத்தி, அதன் குருத்தை உண்கின்றன. வாழை மரங்கள் பிளக்கப்பட்டு அதன் மையப்பகுதியிலுள்ள நார்த் தன்மையுள்ள தண்டுகள் நுகரப்படுகின்றன. வாழைகுலையின்;;காம்பும், வாழைப் பூவும் உண்ணப்படுகின்றன. கரும்புகள் முறிக்கப்பட்டு பூரணமாக அரைத்து விழுங்கப்படுகின்றன. மாமரங்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில் மாமரங்கள் நுகபர்படுகின்றன. பலாமரத்தை குலுக்கி பழங்களை விழுத்தி, பாதத்திதனால் மிதித்து நுகரப்படுகின்றன.

யானைகளுக்கும் மனிதா;களுக்குமிடையிலான முரண்பாடுகளின் போது, யானைகளினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளைத் தடுப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. யானைகளைப் பிடித்து இன்னொரு வசதியான வாழிடத்திற்கு மாற்றம் செய்தல், வயதுவந்த யானைகளை அந்தக் கூட்டத்திலிருந்து நீக்குதல் போன்றன செய்யப்படுகின்றன. இவ்வாறு வயதுவந்த ஆண் யானைகளை நீக்குதல் பாாியளவில் சேதங்களைக் குறைக்காது போவதுடன், அவைகளின் கருவளத் தன்மை, வளர்ச்சி போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். யானைகள் மனிதா;களுக்குப் பிரச்சினைகளைக் கொடுக்காமலிருக்கவும், அதன் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தவும், யானைகளை அவைகளின் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு திருப்பி அனுப்பவும், பல வழிமுறைகள் அவ்வப் பகுதி மக்களாலும், வனஜீவராசித் திணைக்களத்தின் அனுசரணையுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

திண்மமான மண்ணில் அகழிகள் வெட்டல். அகழிகள் நன்கு பராமாிக்கப்படாவிட்டால் யானைகள் அகழிகளை உடைத்துக் கொண்டு; கொண்டு நுழைந்துவிடும்.

உயர்அழுத்த மின்சார வேலியை அமைத்தல். யானைகள் வேலியைத் தாண்ட முற்படும் போது, இந்த வேலி வன்மையான, உயிருக்கு ஆபத்தில்லாத, குறுகியநேர, ஆனால் நினைவில் நிறுத்திவைத்துக் கொள்ளக்கூடிய மின்னதிர்ச்சியை கொடுக்கும்.

கால்வாய்களை செங்குத்தாக வெட்டுதல். இதனால் யானைகள் உள்நுழையாது.

அவசர நிலைமைகளின் போது, பயிற்றுவிக்கப்பட்ட யானைகளை பிரச்சினை கொடுக்கும் காட்டு யானைகளை துரத்துவதற்கு பயன்படுத்தல்.

ஒரு சிறு யானைக் குடித்தொகை தொடர்ச்சியாக பிரச்சினை கொடுக்குமாயின் அவைகள் பிடிக்கப்பட்டு வேறு காடுகளுக்கு கொண்டு விடப்படல். அல்லது அவைகளுக்கு வேலைகளை செய்ய முடியுமென்றால், வேலைகளுக்காக பயிற்றுவிக்கப்படல்.

இந்த வழிமுறைகள் எதுவும் தீர்வு கொடுக்காவிடின், யானைகள் விளைவிக்கும் உயிர், பொருளாதார சேதங்களைப் பொறுத்து, அதிகாரமளிக்கப்பட்ட இடத்திலிருந்து பெறுகின்ற அங்கிகாிக்கப்பட்ட உத்தரவுப்படி யானை சுடப்படல்.

மற்றொரு வகையான யானை-மனிதன் முரண்பாடு என்னவெனில், யானைகள் எதுவித நோக்கமுமின்றி மனிதா;களை கொல்வதாகும். ஆண்களே அதிகளவில் கொல்லப்படுகின்றார்கள். பெண்களும், சிறுவர்களும் பாதிக்கப்பட்ட வீதம் மிகக் குறைவாகும். ஏனெனில் ஆண்களே யானைகளை அதிகளவில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாலாகும்.

யானையானது ஒரு மனிதனைத் தாக்குவதற்கு பாதம், கொம்பு, தும்பி;க்கை போன்றவகைளைப் பாவிக்கின்றது. தாக்குதலின் முடிவில் யானை தும்பிக்கையினால் மனிதனை வேகமாகவும் பலம்கொண்டும் நிலத்திலே தூக்கி அறைகின்றது. இந்த வன்முறை நடத்தையானது, சிலவேளைகளில் பெருமளவிலான மனித உயிர் சேதங்களுடன் முடிவுக்கு வருகின்றது. யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைக்கப்பட்டாலேயே, யானைகள் ஒரு விருப்புக்குாிய விலங்காக கிராமப்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு மக்களுக்கு யானைகள், சூழல் பற்றிய விழிப்புணர்வும், அதிகாாிகளுக்கு யானைகளின் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அரசியல்வாதிகளுக்கு யானைகளின் சூழல், மக்களின் சூழல் பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும்.

இலங்கையின் யானைகளின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், இலங்கை மக்களது கலாசாரத்துடனும், மதநம்பிக்கைகளுடனம் பின்னிப்பிணைந்துள்ள யானைகள் வாழ்வதற்கும், அதன் சந்ததிகள் சிக்கலின்றி விருத்தியடைவதற்கும், நல்ல திட்டங்களை, சிறந்த விஞ்ஞான முறைகளுடனும், அரசியல் ஆதரவுடனும் உருவாக்கினால்தான்; இலங்கையின் யானைகளைப் பாதுகாக்க முடியும்.

—-

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்